கி.செ.துரை வழங்கும் யூனிக் சிந்தனைகள்.. ஐபோன் பதிவுகள்.. தொடர் 01.

யுனிக் சிந்தனைகள் என்ற ஒலிச்சித்திரம் அலைகளில் இன்று முதல் ஆரம்பமாகிறது. யுனிக்கான சிந்தனை என்றால் என்ன..? தமிழ் அகராதி அதை தனித்துவமான சிந்தனை என்று கூறுகிறது. ஆனால் மேலை நாட்டு மொழிகளில் யுனிக் என்ற சொல் பெற்றுள்ள விளக்கமும் தமிழ் அகராதி தரும் விளக்கமும் ஒன்றல்ல. யுனிக் என்ற சொல்லின் உள்ளடக்கமும் வீரியமும் தனித்துவம் என்ற சொல்லுக்குள் அடங்கவே அடங்காது. இதற்கு முன் சொல்லப்படாத ஒரு புதிய சிந்தனை என்று அதை சொல்ல முடியும். அப்படியொரு சிந்தனையை நாம் வாழும் சமுதாயத்தின் முன் வைப்பதே யுனிக் சிந்தனையாகும். அதற்காக இதை யாரோ ஒருவர் சிந்தித்திருக்க முடியாதென நாம் பிடிவாதம் பிடிக்க இயலாது. சில வேளை அது நமக்கு யுனிக்காக இருக்கலாம். உதாரணமாக : சிறைச்சாலைகளே தேவையில்லை எதிர்கால உலகத்திற்கு என்றால் அது ஒரு யுனிக் சிந்தனை. காரணம்…

அகில இலங்கை அணிக்கான தமிழ் வீரர்கள் தேர்வு இறுதியாட்டத்தில்..

அகில இலங்கை அணியில் தமிழர்கள் விளையாட முடியுமா.. முடியும் என்றளவுக்கு காலம் மாறியிருக்கிறது. அகில இலங்கை அணியில் தமிழர் இடம் பெற்றாலும் அந்த அணி உலகக்கிண்ண போட்டியில் விளையாட முடியுமா.. என்பது அடுத்த கேள்வி. அதற்கான வேலையையும் ஆரம்பித்திருக்கிறது ரியூப் தமிழின் புத்தகச் சந்தை. மக்களை தன்னம்பிக்கை ஊட்டி சாதனை மனிதர்களாக்க எடுக்கப்பட்ட அரிய முயற்சி என்ற பாராட்டையும் இது பெற்றுள்ளது. கனவு காணுங்கள் என்றார் அப்துல் கலாம் ஆனால் ஒரு பருப்பொருள் இல்லாவிட்டால் கனவை உருவாக்க முடியாதன்றோ.. பாலைவனத்தில் ரோஜா பூக்காதன்றோ அது போலத்தான் கனவும். அது தோன்ற, உயர்ந்த எண்ணங்கள் மனதில் விதைக்கப்பட வேண்டும். அதற்காக எழுதப்பட்ட நூல்தான் உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர் என்ற புதுமை நூலாகும். ஒரு நாட்டை முன்னேற்ற எழுதப்பட்ட நூலாக இருக்கிறது. உலகக்கிண்ண போட்டிகளிலும், லீக் போட்டிகளிலும்…

விஜய் சேதுபதி மகா நடிகன்: ரஜினி பாராட்டு

விஜய் சேதுபதியை சாதாரணமான நடிகன்னு நினைச்சிடாதீங்க. அவர் மகா நடிகன். அவ்வளவு அற்புதமான நடிகன். ஒவ்வொரு ஷாட்டுக்கும் புதுசு புதுசா பண்றாரு என்று ரஜினி பாராட்டினார். 'பேட்ட' படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 'பேட்ட' படத்தில் ஒரு பாடல் 3-ம் தேதியும் அடுத்த பாடல் 7-ம் தேதியும் வெளியிடப்பட்டது. முழுப் பாடல்களின் ஆடியோ வெளியீட்டு விழா, இன்று 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: ''கார்த்திக் சுப்பராஜ் கதை சொன்னார். எனக்குப் பிடித்தது. பிறகு பல வருடங்கள் கழித்து திரும்பவும் அழைத்துக் கதை கேட்டேன். இந்த முறை…

சசிகுமார் நல்லது செய்யணும்னே நினைச்சிட்டிருக்கறவர்.

என்னுடைய 44 வருட சினிமா வாழ்க்கையில், ரெண்டு மூணு நல்ல மனிதர்களை பாத்துருக்கேன். சசிகுமார் அப்படிப்பட்ட நல்ல மனிதர். தாடி வைச்ச குழந்தை அவர் என்று பேட்ட ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசினார். 'பேட்ட' படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. 'பேட்ட' படத்தில் ஒரு பாடல் 3-ம் தேதியும் அடுத்த பாடல் 7-ம் தேதியும் வெளியிடப்பட்டது. முழுப் பாடல்களின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: '' ’பேட்ட’ படத்தில் மாலிக் என்றொரு கேரக்டர்.…

‘எந்திரன்’ வெற்றிக்கு கிடைத்த 1 கோடி ரூபாய் செக்

எந்திரன் படம் வெற்றி அடைஞ்ச பிறகு, கலாநிதி மாறன் எங்கிட்ட ஒரு கோடி ரூபாய்க்கு செக் கொடுத்தார். அப்படியொரு உண்மையான மனசு அவருக்கு என்று பேட்ட ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி பேசினார். 'பேட்ட' படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. பேட்ட படத்தில் ஒரு பாடல் 3ம் தேதியும் அடுத்த பாடல் 7ம் தேதியும் வெளியிடப்பட்டது. முழுப் பாடல்களின் ஆடியோ வெளியீட்டு விழா, இன்று 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: 2.0 படம் உலக அளவில்…

ராதாரவி தனக்குத்தானே விருது கொடுத்துக் கொள்ளட்டும்

ராதாரவிக்கு டத்தோ பட்டம் கொடுக்கப்பட்டது என்பதே பொய் என்று ட்விட்டரில் கடித ஆதாரத்துடன் கூறிய பாடகி சின்மயி, மீண்டும் அது தொடர்பாக தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். ஃபேஸ்புக் லைவ் வீடியோவில் பேசிய அவர், மீடூ பற்றி பல்வேறு விஷயங்களை முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து தன்னை டப்பிங் யூனியனில் இருந்து நீக்க ராதாரவி வேலை செய்திருப்பதாகக் கூறினார். தொடர்ந்து அவர் பேசும்போது, "நான் 2016-ல் இருந்தே டப்பிங் யூனியன் உறுப்பினர் இல்லை என்று சொல்லும் ராதாரவி, கடந்த 2 ஆண்டுகளில் 4 படங்களில் டப்பிங் பேச ஏன் ஒப்புக் கொண்டார்? டப்பிங் யூனியன் உறுப்பினர்களிடம் வசூலிக்கப்படும் காசில் கட்டப்பட்ட கட்டிடத்துக்கு, எதற்காக டத்தோ ராதாரவி வளாகம் எனப் பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறார்? மீடூ புகார் எல்லாம் சொன்னால் இனி நீங்கள் நடிக்கவே வராதீர்கள். ஆண்களே பெண் வேடமிட்டு…

முதல்வன் 2’ எடுத்தால் யார் ஹீரோ?

முதல்வன் 2’ எடுத்தால் யார் ஹீரோ? என்ற கேள்விக்கு இயக்குநர் ஷங்கர் மனம் திறந்து பதில் அளித்தார். ‘ஜென்டில்மேன்’ படத்தின் மூலம் அறிமுகமானார் இயக்குநர் ஷங்கர். இதையடுத்து அதே நிறுவனத்துக்கு ‘காதலன்’ படத்தை வழங்கினார். முதல் படத்தில் அர்ஜுனையும், அடுத்த படத்தில் பிரபுதேவாவையும் நாயகனாக்கிய ஷங்கர், மூன்றாவது படமாக சூர்யா மூவீஸ் ஏ.எம்.ரத்தினம் தயாரிப்பில், கமலின் நடிப்பில் ‘இந்தியன்’ படத்தைத் தயாரித்தார். இதையடுத்து அசோக் அமிர்தராஜ் தயாரிப்பில், பிரசாந்தை ஹீரோவாக்கி ‘ஜீன்ஸ்’ படத்தை இயக்கிய ஷங்கர், எஸ் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மூலமாக இன்றுவரை எத்தனையோ இயக்குநர்களுக்கு வாய்ப்புகள் வழங்கிய ஷங்கர், தயாரிப்பின் முதல் படத்தை தானே இயக்கினார். அந்தப் படமே ‘முதல்வன்’. அர்ஜுன், மனிஷா கொய்ராலா, ரகுவரன், வடிவேலு, விஎம்சி.ஹனீபா, விஜயகுமார் முதலானோர் நடித்த அந்தப் படம், 1999-ம் ஆண்டு…

மதுரையில் பிளாஸ்டிக் தடை இன்று முதல் அமல்

மதுரையில் பிளாஸ்டிக் மீதான தடை இன்று முதல் அமலுக்கு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பிளாஸ்டிக்கால் ஆன கேரி பேக்குகள், கப்கள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த ஏற்கனவே தமிழக அரசு தடை விதித்துள்ளது. 50 மைக்ரான்களுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்க, வைத்திருக்க மற்றும் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளாஸ்டிக் மாசில்லாத தமிழகம் என்பதை உருவாக்க, விழிப்புணர்வு பிரசார வாகனத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமையன்று தொடங்கி வைத்தார். இந்தப் பிரசார வாகனம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

பவர் ஸ்டார் சீனிவாசனை மனைவியுடன் கடத்திய கும்பல் ?

தன்னை கடத்திய கும்பல் தனது மனைவியை வரவழைத்து பணையமாக பிடித்துவைத்து சொத்தை எழுதி கேட்பதாக தப்பி வந்த 'பவர் ஸ்டார்' சீனிவாசன் அளித்த புகாரில் அதிரடியாக செயல்பட்ட போலீஸார் 7 பேரை கைது செய்து அவரது மனைவியை மீட்டனர். கடந்த வாரம் 'பவர் ஸ்டார்' சீனிவாசன் கடத்தப்பட்டதாக அவரது மனைவி ஜூலி அண்ணாநகர் போலீஸில் புகார் அளித்தார். ஆனால் அதை போலீஸார் விசாரித்தபோது புகார் அளித்த அவரது மனைவி ஊட்டியில் 'பவர் ஸ்டார்' சீனிவாசனுடன் இருந்தார். ஊட்டிக்கு இடம் வாங்க வந்துள்ளதாக 'பவர் ஸ்டார்' சீனிவாசன் தெரிவித்தார். ஆனால் உண்மையில் 'பவர் ஸ்டார்' சீனிவாசன் கடத்தப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. தனது தந்தை கடத்தப்பட்டுள்ளார் என அவரது மகள் புகார் தெரிவித்தும் அண்ணாநகர் போலீஸார் அதை சீரியசாக பார்க்கவில்லை. 'பவர் ஸ்டார்' சீனிவாசன் கடத்தப்பட்டது, அவரது மனைவியை பிணையாக…

2018 சிறந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஜமால்..!

டைம்ஸ் பத்திரிகையின் இந்த ஆண்டின் சிறந்த நபர்கள் பட்டியலில் கொல்லப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜமால் கஷோகிஜி இடம்பெற்றிருப்பது குறித்து டைம்ஸ் பத்திரிகை குறிப்பிடும் போது, ”சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்த நாகரிகமான விமர்சகர். இவர் சவுதி இளவரசர் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது” என்று கூறியுள்ளது. முன்னதாக, சவுதி அரசையும் அதன் இளவரசர் முகமது பின் சல்மானையும் கடுமையாக விமர்சித்தவர் பத்திரிகையாளர் ஜமால். இவர் கடந்த அக்.2-ம் தேதி துருக்கி பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக ஆவணங்களைப் பெறச் சென்றவர் இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டார். இவருக்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் ஏற்பட்ட மோதலில் ஜமால் இறந்ததாக சவுதி கூறிவந்தது. இது வேண்டுமென்றே செய்யப்பட்ட படுகொலை, என்றும் இக்கொலையில் இளவசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பு…