சவுதி பத்திரிகையாளர் மரணம் சவுதி அரேபியா ஏற்றுக்கொண்டது ( அலைகள் முழுமையான செய்தி )

கடந்த 18 தினங்களாக மரணித்தாரா கடத்தப்பட்டாரா என்ற சவுதி மன்னர் குடும்பத்தின் எதிரியான பத்திரிகையாளர் 59 வயதுடைய ஜமால் காஸ்கோக்கி மரணித்துவிட்டதாக சவுதி அரேபியா இன்று சனி 20.10.2018 உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதராலயத்தில் இடம் பெற்ற அசாதாரணமான ஒரு சூழலில் இடம் பெற்ற மோதலில் இவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சவுதி மன்னர் குடும்பம் இந்த விடயத்தை மிகவும் முக்கியம் கொடுத்து நோக்குவதாகவும் துருக்கியுடன் இணைந்து கடந்த அக்டோபர் 6ம் திகதியில் இருந்து தமது விசாரணைகள் ஆரம்பித்தாகவும் கூறுகிறது. துருக்கிய விசாரணைப் பிரிவினர் தமது இஸ்தான்புல் தூதராலயம், கொன்ஸ்சலேற்தர அதிகாரியின் இல்லம், வேறு இரண்டு மசூதிகளில் தேடுதல் நடத்த தாம் ஒத்துழைப்பு வழங்கியதாகவும், சவுதி மன்னர் அனைத்து விசாரணைகளையும் முறைப்படி முடுக்கிவிட உத்தரவிட்டதாகவும் அரண்மனை குறிப்புரை கூறுகிறது. மேலும் நடந்தது என்ன.. பூரண…

முன்கூட்டியே படப்பிடிப்பை முடித்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்

தான் நடித்துவரும் ‘பேட்ட’ படம் குறித்து ட்வீட் செய்துள்ளார் ரஜினிகாந்த். ‘2.0’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கும் முதல் ரஜினி படம் இது. ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, இயக்குநர் மகேந்திரன், சிம்ரன், சசிகுமார், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ஊட்டியை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தின் ஷூட்டிங், டேராடூன், டார்ஜிலிங், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து லடாக், ஐரோப்பா ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. ஹாஸ்டல் வார்டனாக இந்தப் படத்தில் நடிக்கிறார் ரஜினி.…

சாதனை படைத்த ‘சர்கார்’ டீஸர்

விஜய்யின் ‘சர்கார்’ டீஸர் அதிகமானோரால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம், வருகிற தீபாவளி விடுமுறைக்கு ரிலீஸாக இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார். இந்நிலையில், இன்று (அக்டோபர் 19) மாலை 6 மணிக்கு ‘சர்கார்’ படத்தின் டீஸரை வெளியிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இந்த டீஸருக்காக விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பெரும்பாலானோர் காத்திருந்தனர். எனவே, டீஸர் வெளியான 10 நிமிடங்களிலேயே 10 லட்சத்துக்கும் அதிகமான முறை டீஸர் பார்க்கப்பட்டது. அத்துடன், 20…

வைரமுத்து தனது விருதுகளை திருப்பித் தரவேண்டுமா?

கவிஞர் வைரமுத்து தமது விருதுகளை திரும்ப அளித்துவிட்டு வழக்குத் தொடர்வதே சரி என்று பாலியல் புகார் தொடர்பாக ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். புகாருக்கு உள்ளான ஒருவர் தம் திறமையால் பெற்ற அங்கீகாரங்களை திரும்ப அளிக்க வேண்டுமா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். அதற்கு நேயர்கள் தெரிவித்த கருத்துகள் இங்கே. "அப்படியென்றால் வாலியை மறைந்து இருந்து கொன்ற ராமன் எப்படி அரசாள முடியும்? மனைவி சீதையை சந்தேகபட்ட ராமனை எப்படி சக்ரவர்த்தியாக எற்றுக்கொள்ளமுடியும்? காட்டில் கொள்ளையில் ஈடுபட்டு திருந்திய வால்மீகி ராமாயணம் எழுதியதும் பிழையா?" என்று கருத்து தெரிவித்துள்ளார் கிருஷ்ணன் குமார். அப்போ ரபேல் விமான ஊழல்ல மோடி அரசு பதவி விலகி. களங்கத்தை போக்கி கொள்ள வேண்டியதுதானே ராஜா அவர்களே" என்கிறார் உமர் ஃபாரூக். "ஒரு சிற்பி சாமி சிலை செய்த பிறகு அவர்…

யாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவரை கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், கொக்குவில் – கோண்டாவில் பகுதிகளில் அண்மைக் காலமாக வழிப்பறிக் கொள்ளைகள் இடம்பெறுவதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடுக்கு அமைவாகவே விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த இருவரையும் கைதுசெய்ததுடன், இருவரையும் யாழ். நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

நிமலராஜனின் நினைவு தினம் யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினம் இன்று யாழ்.பல்கலைகழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.பல்கலைகழகத்தின் இன்று நண்பகல் பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர் கிருஸ்ணமீனன் தலைமையில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் விக்னேஸ்வரன் சுடரேற்றி மலர் அணிவித்து அஞ்சலி செலுத்தியிருந்தார். அதனை தொடர்ந்து யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை விரிவுரையாளர் கலாநிதி ரகுராம் மற்றும் ஏனைய விரிவிரையாளர்கள், மாணவர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தியிருந்தனர். இறுதியாக கலாநிதி ரகுராம் அஞ்சலி நினைவுரையாற்றினார். கருத்து சுதந்திரத்திற்காக ஊடகவியலாளர் நிமலராஜன் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர் எனவும், அவர் காட்டிய வழியில் ஏனைய ஊடகவியலாளர்களும் பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார். கடந்த 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி இரவு யாழ்.குடாநாட்டின் முன்னணி ஊடகவியலாளர் நிமலராஜன் தனது வீட்டில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வசீம் தாஜுதீன் படுகொலை இரசாயண பகுப்பாய்வு

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்தில் சி.ஐ.டி யினரால் வழக்கு பொருளாக முன்வைக்கப்பட்டுள்ள டிபெண்டர் வண்டியை அரச இரசாயண பகுப்பாய்வுக்கு உட்படுத்த கொழும்பு மேலதிக நீதிவான் இசுறு நெத்திகுமார இன்று உத்தரவிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷவின் சிரிலிய சவிய வேலைத்திட்டத்திற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த குறித்த டிபெண்டர் வண்டியில் உயிரியல் , வெடிபொருள் துகள்கள் அல்லது ஆடைகளின் துண்டுகள் எதை ஏனும் டிபெண்டர் வண்டிக்குள் உள்ளதா என்பதை கண்டறிய சீ.ஐ.டீ முன்வைத்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தற்போது சி.ஐ.டி பொறுப்பிலுள்ள குறித்த டிபெண்டர் வண்டியை அரச இரசாயண பகுப்பாய்வாளருக்கு அனுப்பி இந்த அறிக்கையை பெறுவதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மீதான கொலைச் சதியை மூடி மறைக்க முயற்சி

நாட்டின் தலைவரை படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சதித் திட்டத்தை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. பொலிஸாரின் விசாரணைகள் மீது தமக்கு நம்பிக்கை உள்ள போதும், அரசியல் மற்றும் சமூக நோக்கங்களுக்காக இந்த சதி முயற்சி விவகாரத்தை சிலர் மூடி மறைப்பதற்கு முயல்வதாக ஜனாதிபதியின் ஆலோசகர்கள் தெரிவித்தனர். கொழும்பில் நேற்று (18) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதியின் ஆலோசகர்களான சட்டத்தரணி ஷிரால் லக்திலக மற்றும் சட்டத்தரணி சரத் கோங்காகே ஆகியோர் இந்த விடயத்தை வலியுறுத்தினர். ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை படுகொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டதாக ஒருவர் கருத்துத் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே தீவிரம் காட்டப்படவில்லை. இது ஒரு அரசியல் நாடகம், போலியான குற்றச்சாட்டு எனக் கூறி இதனை குறைத்து மதிப்பிடுவதற்கு அல்லது அவ்வாறானதொரு முயற்சியை மூடி மறைப்பதற்கான முயற்சிகளே…

ரணில் விக்கிரமசிங்க ராகுல் காந்தியை சந்தித்தார்

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரசின் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு புது டில்லியிலுள்ள தாஜ் ஹோட்டலில் இன்று இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன. மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை இந்தியாவுக்கு சென்றார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்து இருநாட்டு உறவுகளின் மேம்பாடு தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். இதற்கிடையில், இன்று அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார். இலங்கை பிரதமரின் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

சரியான காதலனை தேர்வு செய்வதில் அதிகமான பெண்கள் தோல்வியடைய காரணமென்ன..?

இளமைக்காலத்தில் காதலனை தேர்வு செய்யும் இளம் பெண்களில் பலர் சரியான காதலனை தேர்வு செய்வதில் தவறிழைத்துவிடுவதை தலைக்கு மேல் வெள்ளம் போன பின்னரே கண்டு பிடிக்கிறார்கள். இது நாம் சொல்ல வருவதில்லை. காதலுக்கு கண்கள் இல்லை என்ற பழைய காலத்து பழமொழியும் இதைத்தான் சொல்ல வருகிறது. பெண்கள் காதலனை தேர்வு செய்வதில் பல இடங்களில் தவறிழைக்கிறார்கள். அவர்கள் எங்கே தவறு விடுகிறார்கள் என்பதை ஆங்கில நூல் ஒன்று சுட்டிக்காட்டுகிறது. அந்த நூல் இப்படியாக தன் கருத்தை முன்வைக்கிறது.. ஓர் ஆணைப் பார்க்கும்போது இவன் எதிர்காலத்தில் எப்படி வருவான் இவனுக்குள் இருக்கும் ஆற்றல் என்ன என்பதை சரியாக அடையாளம் காண்பதற்கு பெரும்பாலான சிறு வயது பெண்களுக்கு அனுபவம் போதியதாக இருப்பதில்லை. ஓர் ஏழை இளைஞனை பார்த்தவுடன் அவனை நிராகரித்துவிடுகிறார்கள். அதற்காக ஏழையை காதலிப்பதுதான் சரியானதென்று கூறவில்லை. காதலிக்க முன்…