சுவீடனுக்கு பயணமானார் அநுர குமார திசாநாயக்க!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்று வியாழக்கிழமை (25) இரவு சுவீடனுக்கு பயணமானார்.

சுவீடனில் இடம்பெறவுள்ள மக்கள் சந்திப்பு மற்றும் சினேகபூர்வமான சில ஒன்றுகூடல்களிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

ஏப்ரல் 27 சனிக்கிழமை சுவீடனில் NACKA AULAஇல் அந்நாட்டின் நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு STOCKHOLM மக்கள் சந்திப்பை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் சுவீடன் குழுவினால் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts