2018 சிறந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஜமால்..!

டைம்ஸ் பத்திரிகையின் இந்த ஆண்டின் சிறந்த நபர்கள் பட்டியலில் கொல்லப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜமால் கஷோகிஜி இடம்பெற்றிருப்பது குறித்து டைம்ஸ் பத்திரிகை குறிப்பிடும் போது, ”சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்த நாகரிகமான விமர்சகர். இவர் சவுதி இளவரசர் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது” என்று கூறியுள்ளது.

முன்னதாக, சவுதி அரசையும் அதன் இளவரசர் முகமது பின் சல்மானையும் கடுமையாக விமர்சித்தவர் பத்திரிகையாளர் ஜமால். இவர் கடந்த அக்.2-ம் தேதி துருக்கி பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக ஆவணங்களைப் பெறச் சென்றவர் இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டார்.

இவருக்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் ஏற்பட்ட மோதலில் ஜமால் இறந்ததாக சவுதி கூறிவந்தது. இது வேண்டுமென்றே செய்யப்பட்ட படுகொலை, என்றும் இக்கொலையில் இளவசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பு உள்ளதாகவும் கூறி ஆதாரங்களை வெளியிட்டதுடன் குற்றவாளிகளைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு துருக்கி குற்றம் சாட்டியது.

ஆனால் சவுதி இந்தக் குற்றச்சாட்டை மறுத்தது. இந்தக் கொலை வழக்கில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று சவுதி கூறியது.

இந்நிலையில் ஜமால் கொலை வழக்கில் சவுதியால் கைது செய்யப்பட்டுள்ள அந்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்க அந்நாடு ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts