கி.செ.துரை வழங்கும் யூனிக் சிந்தனைகள்.. ஐபோன் பதிவுகள்.. தொடர் 01.

யுனிக் சிந்தனைகள் என்ற ஒலிச்சித்திரம் அலைகளில் இன்று முதல் ஆரம்பமாகிறது. யுனிக்கான சிந்தனை என்றால் என்ன..?

தமிழ் அகராதி அதை தனித்துவமான சிந்தனை என்று கூறுகிறது. ஆனால் மேலை நாட்டு மொழிகளில் யுனிக் என்ற சொல் பெற்றுள்ள விளக்கமும் தமிழ் அகராதி தரும் விளக்கமும் ஒன்றல்ல. யுனிக் என்ற சொல்லின் உள்ளடக்கமும் வீரியமும் தனித்துவம் என்ற சொல்லுக்குள் அடங்கவே அடங்காது.

இதற்கு முன் சொல்லப்படாத ஒரு புதிய சிந்தனை என்று அதை சொல்ல முடியும். அப்படியொரு சிந்தனையை நாம் வாழும் சமுதாயத்தின் முன் வைப்பதே யுனிக் சிந்தனையாகும். அதற்காக இதை யாரோ ஒருவர் சிந்தித்திருக்க முடியாதென நாம் பிடிவாதம் பிடிக்க இயலாது. சில வேளை அது நமக்கு யுனிக்காக இருக்கலாம்.

உதாரணமாக : சிறைச்சாலைகளே தேவையில்லை எதிர்கால உலகத்திற்கு என்றால் அது ஒரு யுனிக் சிந்தனை. காரணம் டி.என்.ஏ மரபணுவில் திருத்தம் செய்வதின் மூலம் குற்றவாளிகள் இல்லாத உலகத்தை உருவாக்கலாம் என்கிறார்கள். இது 1949 ம் ஆண்டு ஒருவரால் முன்வைக்கப்பட்ட யோசனை. இன்று இதைச் சாத்தியமாகக்கக் கூடிய வழி பிறந்துள்ளது.

ஏழ்மையை அழித்தால் 90 வீதமான சிறைச்சாலைகள் இல்லாது போய்விடும்.

இதுபோலத்தான் நாடற்ற தமிழர் பெருந்தொகை பணத்தில் படையணியை அமைத்து வாழ வேண்டிய தேவையில்லை. வீணாக பாராளுமன்றம் அமைத்து வாக்கு சீட்டுக்கு பணம் கொடுக்கும் ஊழல் அரசியல் செய்யத் தேவையில்லை. நாடொன்றை உருவாக்க முன்னதாக இருக்கும் இந்த இடைக்காலம் தமிழர் தோல்விக்காலமல்ல. வெற்றிக்காலம் என்று சொல்கிறது இந்த யுனிக் சிந்தனை.

நடை பாதையில் எப்போதாவது ஒரு தருணத்தில்தான் யுனிக் சிந்தனை மலரலாம். அப்போதே கைத்தொலைபேசியில் அதை பதிந்து மக்களுக்கு வழங்குவதே இந்த புதிய முயற்சி.

இதற்கு நாளும் கோளும், வெளியாகும் திட்டவட்டமான நாளும் கிடையாது.. காரணம் அது வரவேண்டும்..

கேட்டுப்பாருங்கள்..

அலைகள் 11.12.2018

Related posts