ரொம்ப பயங்கரமா இருக்கு வெளியே வராதிங்க வடிவேலு

இந்தியாவையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த நாடெங்கும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையை தவிர மற்ற நேரங்களில் மக்கள் வீட்டை வௌபியே வரவேண்டாம். ஊரடங்கை கண்டிப்பாக அனைவரும் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் சிலர் இதை மீறி செயல்படுகின்றனர். அரசு, அதிகாரிகள், திரைப்பிரபலங்கள் பலரும் இதுப்பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் மக்களை இப்போதும் சிரிக்க வைத்து கொண்டிருக்கும் நடிகர் வடிவேலு கண்கலங்கி ஒரு வீடியோ வெளபியிட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, மன வேதனை உடனும், துக்கத்துடனும் சொல்கிறேன். அரசு சொல்லும் அறிவுரை படி கொஞ்ச நாளைக்கு வீட்டுக்கு உள்ளேயே இருங்க, மருத்துவ உலகம் மிரண்டு போய் உள்ளது. அவர்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்ற போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு…

வதந்தி: நான் வீட்டில் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறேன் கௌதமி

தன்னைப் பற்றி பரவிய வதந்திக்கு, கௌதமி தனது ட்விட்டர் பதிவில் மறைமுகமாக விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. வெளிநாடுகளிலிருந்து வந்திருந்தால் அவர்கள் வீட்டின் வாசலில் நோட்டீஸ் ஒட்டி வருகிறது சென்னை மாநகராட்சி. அதில் அவர் எவ்வளவு காலத்துக்குத் தனிமைப்படுத்தப்படுவார், பெயர் மற்றும் முகவரி ஆகியவை இடம் பெற்றிருக்கும். இந்த நோட்டீஸ் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் அலுவலகத்தில் ஒட்டப்பட்டது. அதில் கமலின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதனால், கமலுக்கு கரோனா தொற்று இருப்பதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார் என்று செய்திகள் வெளியாகின. இதற்கு கமல் மறுப்பு தெரிவித்தார். ஆனால், கௌதமியின் பாஸ்போர்ட்டில் ஆழ்வார்பேட்டை முகவரி இருப்பதால்தான் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறார்கள் என்று தகவல் பரவியது. இது தொடர்பாகப் பல்வேறு செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகி வந்தன. இது தொடர்பாக கௌதமி…

பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்

பிரபல நாட்டுப்புற பாடகியும் திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா காலாமானார் சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி...’ என்ற பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் பரவை முனியம்மா. ஏராளமான கிராமிய பாடல்கள், சினிமா பாடல்கள் பாடியவர். 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மதுரை மாவட்டம் பரவை என்ற ஊரை சேர்ந்தவர் என்பதால் ‘பரவை முனியம்மா’ என மக்களால் அழைக்கப்படுகிறார். தமிழக அரசின் ‘கலைமாமணி‘ விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்ற அவர், கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தில் கடைசியாக நடித்திருந்தார். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. சமீப காலமாக சிறுநீரகக்ககோளாறு உள்ளிட்ட சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த பரவை முனியாம்மா இன்று அதிகாலை 2.30 மணிக்கு காலமானார்.

புதிய மருந்தை சோதனை செய்ய மலேசியா தேர்வு

மலேசியாவில் இன்று புதிதாக 159 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மலேசியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,320ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில், கொரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்று முழுமையாகக் குணமடைந்த 61 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் முழுமையாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 320 ஆக உள்ளது. கொரோனா தொற்று இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய மருந்தை சோதனை முறையில் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் மலேசியாவைத் தேர்ந்தெடுத்துள்ளது. இத்தகவலை மலேசிய பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது. மலேசிய சுகாதார அமைச்சுக்கு இந்த ஆய்வை மேற்கொள்ளக்கூடிய திறன் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் நம்புவதால் மலேசியா அதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று அம்மன்றம் கூறியுள்ளது. கொரோனாநோய்த்தொற்று இருக்கும் நோயாளிகளுக்கு இம்மருந்தைக் கொண்டு…