வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டாரா?

வாஷிங்டன் போஸ்டின் செய்தியாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்புவதாக துருக்கி அதிகாரிகள் கூறியுள்ளதால் அச்சம் எழுந்துள்ளது. சௌதி அரேபியாவைச் சேர்ந்த ஜமால், கடந்த செவ்வாய்க்கிழமை துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்துக்கு சென்றதையடுத்து காணாமல் போனார். முதல் கட்ட விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளதாக துருக்கி அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால், இதனை மறுத்துள்ள சௌதி அரேபியா, அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாக கூறியுள்ளது. ஜமால் கொல்லப்பட்டிருப்பது உண்மை என்றால், அது 'மிகவும் கொடூரமான மற்றும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியாத' செயலாக இருக்கும் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை கூறியுள்ளது. இந்த செயல் துருக்கி - சௌதி இடையே நெருக்கடியை உள்ளாக்கும் என இஸ்தான்புல் பிபிசி செய்தியாளர் மார்க் லோவன் தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக…

இந்தோனேசிய சுனாமி: 5000 பேர் மாயம் புதிய தகவல்கள்

இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சுலாவேசி தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை, சுனாமி தாக்கியது. இந்தோனேசியாவில் சுலேசியா தீவில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பெரும்பாலான வீடுகள், கடலோரத்தில் இருந்த பெரிய அளவிலான குடியிருப்புகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து தரை மட்டமாகியுள்ளன. அந்த நகரில் வீடுகளை இழந்த மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சுனாமி தாக்குதலில் பாதித்த பலு நகரில் நடைபெறும் மீட்புப் பணியில் ராணுவத்தினரும், போலீஸாரும் ஈடுபட்டுள்ளனர். சுனாமி தாக்கியதில் நகரிலிருந்த ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. பலு நகரில் பலரோ மற்றும் பெடோபோ பகுதிகளில் காணாமல் போனவர்களில் 1000 பேர் அங்குள்ள 3 மீட்டர் ஆழமுள்ள சேற்றில் புதைந்து இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. அவர்களில் 74 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமியில்…

தமிழிசை யார் என்றே எனக்குத் தெரியாது: டிடிவி. தினகரன்

தினகரன் அணியினர் தூதுவிட்டதாக தமிழிசை கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு அவங்க யார் என்றே எனக்கு தெரியாது, அவரை நான் பார்த்தது கூட இல்லை என டிடிவி. தினகரன் கோபத்துடன் கூறினார். டிடிவி தினகரன், தன்னை ஓபிஎஸ் ஒருமுறை ரகசியமாக சந்தித்ததாகவும் பின்னர் கடந்த செப்.29 அன்று சந்திக்க தூது விட்டதாகவும் ஆனால் தான் மறுத்து விட்டதாகவும் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் ஓபிஎஸ் இதை ஒப்புக்கொண்டு டிடிவி தினகரன்தான் தன்னை சந்தித்தார், அவர் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற நினைத்தார் என்று பேட்டி அளித்தார். இதனிடையே பாஜக தலைவர் தமிழிசை தினகரன் அணியினர் தனக்கு தூது விட்டதாக கூறியிருந்தார். பெங்களூரில் சிறையில் உள்ள சசிகலாவை, நேற்று டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். இதன்பிறகு பேட்டியளித்தார். அப்போது தமிழிசை இவ்வாறு பேட்டி அளித்துள்ளாரே என்று கேட்டதற்கு தினகரன் அணியினர் என்று…

ராகுல்காந்திக்கு நெல்லுக்கும், கோதுமைக்கும் வித்தியாசம் தெரியாது

ராகுல்காந்திக்கு நெல்லுக்கும், கோதுமைக்கும் வித்தியாசம் தெரியாது என்று மத்திய மந்திரி கஜேந்திர சிங் கூறியுள்ளார். பா.ஜனதா ஆட்சி செய்யும் மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் மாநிலங்களில் விவசாயிகள் பெரும் துயரத்தில் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அண்மையில் குற்றம்சாட்டி இருந்தார். இதுபற்றி மத்திய வேளாண்துறை ராஜாங்க மந்திரி கஜேந்திர சிங் செகாவத்திடம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறுகையில், ‘‘அடிப்படையில் நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். விவசாயிகளின் தலைவர். அவர்களுடைய பிரதிநிதியாக மத்திய மந்திரி சபையிலும் இடம் பெற்றிருக்கிறேன். எனவே நாட்டில் விவசாயத்துறை நன்றாக இருப்பதை அறிவேன். ஆனால் ராகுல்காந்திக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரியாது. நெல்லுக்கும், கோதுமைக்கும் வித்தியாசம் தெரியாத அவரைப் போன்றவர்களின் கருத்துக்கு பதில் சொல்வது சரியானதாக இருக்காது’’ என்று கேலி செய்தார்.

ஜோதிகா படம் தீபாவளிக்கு தள்ளிப் போகிறது

மும்பையிலும், வட மாநிலங்களிலும் ‘சூப்பர் ஹிட்’ ஆக ஓடிய ‘தும்ஹாரிசுலு’ என்ற இந்தி படம், ‘காற்றின்மொழி’ என்ற பெயரில், தமிழில் தயாரானது. கதை நாயகியாக ஜோதிகா இதில் நடித்து இருக்கிறார். ராதாமோகன் டைரக்டு செய்துள்ளார். இதற்கு முன்பு இருவரும் இணைந்து பணிபுரிந்த ‘மொழி,’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனால், ‘காற்றின் மொழி’ படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மணிரத்னம் டைரக்‌ஷனில், ஜோதிகா நடித்த ‘செக்க சிவந்த வானம்,’ சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த படத்தை அடுத்து ஜோதிகா நடித்துள்ள ‘காற்றின் மொழி’க்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இந்த படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமானின் மருமகன் ஏ.எச்.காஷிப் இசையமைத்து இருக்கிறார். ‘காற்றின்மொழி,’ இம்மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது, அந்த படத்தின் ‘ரிலீஸ்’ தேதி தள்ளிப்போடப்பட்டு இருக்கிறது. தீபாவளிக்கு படம்…

எடப்பாடி பழனிசாமி – பன்னீர்செல்வத்துடன் இணைவது தற்கொலைக்கு சமம்

எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வத்துடன் இணைவது தற்கொலைக்கு சமம் என டிடிவி தினகரன் சொல்கிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது தான் ஒரே குறிக்கோள்.திகார் சிறையில் இருந்து விடுதலையான என்னை ஓபிஎஸ், 2017 ஜூலை மாதம் சந்தித்தார்! 2017 ஜூலை 12ல் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோளின்படி, அவரை சந்தித்தேன் .எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தது தவறு என சந்திப்பின்போது ஓபிஎஸ் கூறினார். முதல்வர் பழனிசாமியை பதவியில் இருந்து இறக்க தயாராக இருப்பதாக கூறினார். எங்கள் சந்திப்பில் சில ரகசியங்கள் இருப்பதால், அதனை ஓபிஎஸ் மறுக்க மாட்டார். கடந்த வாரம் கூட பன்னீர் செல்வம் என்னை சந்திக்க முயற்சி செயததாக கூறபட்டது. ஓபிஎஸ் என்னை சந்திக்க…

விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்ப ரஷ்யா உதவி புரியும்

ரஷ்யாவின் நீண்ட கால நட்பு நாடாக இந்தியா திகழ்கிறது.விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்ப ரஷ்யா உதவி புரியும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறி உள்ளார். இந்தியாவின் நீண்ட கால மற்றும் நெருங்கிய நட்பு நாடுகளில், ரஷியாவுக்கு சிறப்பிடம் உண்டு. இந்த உறவை வலுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் இந்தியா-ரஷியா உச்சி மாநாடு நடந்து வருகிறது. அந்த வரிசையில் 19-வது உச்சி மாநாடு டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.இதில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் 2 நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தார். உயர் மட்டக்குழுவினருடன் இந்தியா வந்துள்ள புதின், இன்று பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த பேச்சுவார்த்தையின் போது, இருநாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கப்படலாம் என…

25 வயது நிக்குக்கும்.. 36 வயது பிரியங்காவுக்கும் கல்யாணம்

இந்திய திருமணங்களில் பொதுவாக பெண்ணைவிட ஆணுக்கு வயது சற்று அதிகமிருக்கும். சினிமா நட்சத்திரங்களின் நிஜ திருமணங்களில் பெண்ணைவிட ஆணுக்கு வயது ரொம்ப அதிகமாக இருக்கும். இந்திய திருமணங்களில் பொதுவாக பெண்ணைவிட ஆணுக்கு வயது சற்று அதிகமிருக்கும். சினிமா நட்சத்திரங்களின் நிஜ திருமணங்களில் பெண்ணைவிட ஆணுக்கு வயது ரொம்ப அதிகமாக இருக்கும். அந்த பழைய வழக்கங்களை எல்லாம் முறியடிக்கும் முதல் அடியை எடுத்துவைத்திருக்கிறார், பிரியங்கா சோப்ரா. முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையுமான இவர், அமெரிக்க தொடரிலும் நடித்து புகழ் பெற்றவர். இவரது வாழ்க்கையில் இணையப் போகிற வரும் அமெரிக்க இளைஞர்தான். அவருக்கு வயது 25. பெயர் நிக் ஜோனஸ். பிரியங்கா சோப்ரா இப்போது முதிர்கன்னி வரிசையில் இருக்கிறார், வயது 36. ‘தன்னைவிட 11 வயது சின்னவராக இருந்தாலும், பாசம் அதிகம் கொண்டவர் நிக்’ என்று பிரியங்கா காதல்…

ரியூப் தமிழ் யாழ். காரியாலயத்தின் மீது கொலை முயற்சி கோடரி, வாள் வெட்டு தாக்குதல்

கொலை முயற்சியில் ஈடுபட்ட சந்தேக நபர் யார்..? அவரின் பின்னால் இருந்து இயக்கிய சூத்திரதாரிகளின் நோக்கமென்ன..? யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்திருக்கும் ரியூப்தமிழ் எப்.எம் காரியாலயத்தின் மீது நேற்று நள்ளிரவு இரண்டு மணியளவில் ஆயுதம் தாங்கிய நபர்கள் தாக்குதல். வாள் கோடரியுடன் வந்த இரண்டு நபர்கள் கைவரிசை. வாயிலில் நின்ற மேட்டார் சைக்கிள் ஒன்றின் மீது சரமாரி தாக்குதல் ஊழியர்கள் சிதறி ஓட்டம்.. யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக நேற்று முன்தினம் வடக்கு மாகாணத்தின் பிரதிப்போலீஸ்மா அதிபர் ரொசான் பெர்ணாண்டோ கூறியிருந்தது கவனிக்கத்தக்கது. அவருடைய குரல் ஊடகங்களின் பதிவில் இருந்து நீக்கப்பட முன்னர் போலீஸ் திணைக்களத்திற்கு சவால் விடுவது போல இந்தக் காரியம் அரங்கேறியிருக்கிறது. இது தனி மனித தாக்குதல் என்றால் அதை பிரத்தியேகமான ஒரு கோணத்தில் பார்க்கலாம் ஆனால் ஊடகம் ஒன்றின் மீது குறி…