கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற சினேகன்-கன்னிகா திருமணம்

பிரபல சினிமா பாடல் ஆசிரியர் கவிஞர் சினேகன். 700க்கும் மேற்பட்ட படங்களில் பாடலாசிரியராக பணிபுரிந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார்.

தற்போது நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்ய கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். சினேகன் தொலைக்காட்சி நடிகை கன்னிகாவை காதலித்து வந்தார். சினேகன், கன்னிகா இருவரும் கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்துவந்தனர்.

இந்த நிலையில் இன்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. சென்னையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் நடந்த இத்திருமணத்தை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தலைமையேற்று நடத்திவைத்தார்.

திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சினேகன் – கன்னிகா தம்பதிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். ‘தேவராட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கன்னிகா, தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

Related posts