இந்திய மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சர்வதேச கடல் எல்லையைக் கடந்து இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என தமிழக பொலிஸார் அந்நாட்டு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். த ஹிந்து பத்திரிகையில் இது தொடர்பில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது. கச்சத்தீவு பகுதியில் மீன் பிடியில் ஈடுபடும் இந்திய- இலங்கை மீனவர்களிடையே முரண்பாடுகள் நிலவி வருகின்ற நிலையில், இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய – இலங்கை மீனவர்களுக்கு கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடிக்க இந்திய மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் அனுமதி வழங்க வேண்டும் என இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த இயந்திரப் படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்து மதம் உலக மதமாக மாறாதது ஏன்?

உலகளாவிய மதமாக கிறிஸ்துவமும், இஸ்லாமியமும் உருவாகியுள்ளது. இந்து மதம் உலக மதமாக மாறாதது ஏன் என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் இயற்கை மருத்துவம் தொடர்பான சிசிச்சை மையத்தைப் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி திறந்து வைத்தார். இந்த விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. பங்கேற்றார். இதன்பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ’’தமிழகத்தில் இயற்கை மருத்துவம் தொடர்பான கல்லூரி மருத்துவமனைகள் அதிகரிக்கின்றன. இந்திய அரசு இயற்கை மருத்துவத்திற்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. உரிய முக்கியத்துவம் அளிக்கவேண்டும். இயற்கை மருத்துவர்களுக்கான வாரியத்தை மத்திய அரசு அமைக்கவேண்டும். ஆங்கில, இந்திய மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பு இருக்கும் நிலையில், இயற்கை மருத்துவம் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. அனைத்து மருத்துவமனைகளிலும் இயற்கை மருத்துவத்திற்கான பிரிவுகளை அனுமதிக்க வேண்டும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் இயற்கை மருத்துவத்திற்கான…

அண்ணாத்த படத்தின் 3வது பாடல் இன்று வெளியாகிறது

அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'அண்ணாத்த'. இந்த படத்தின் 3வது பாடல் இன்று மாலை வெளியாகிறது. அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை டைரக்டர் சிவா இயக்குகிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார். படத்தில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலர் நடிக்கின்றனர் முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ரஜினிகாந்த் தோன்றும் பரபரப்பான சண்டை காட்சிகள் இடம்பெற்ற படத்தின் டீசரும் வெளியாகியுள்ளது. படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக கவிஞர் விவேகா எழுதி, மறைந்த பிரபல பின்னனி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருந்த 'அண்ணாத்த அண்ணாத்த' பாடல்…

விஷால் – 32 படத்தின் டைட்டில் டீசர் வெளியானது

விஷால் - 32 படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. படத்திற்கு லத்தி சார்ஜ் என பெயரிடப்பட்டுள்ளது. ராணா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் டைரக்டர் ஏ. வினோத் குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்த நிலையில், நேற்று மாலை படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. படத்திற்கு 'லத்தி சார்ஜ்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்கிறார். சமர் திரைப்படத்திற்கு பிறகு இந்த படத்தில் சுனைனா விஷாலுடன் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தி பேட்மேன்’ டிரைலர் சாதனை ( டிரைலர் )

சூப்பர் ஹீரோ கதாபாத்திரமான பேட்மேன் படவரிசையில் மற்றுமொரு படம் அடுத்த ஆண்டு வெளியாகிறது. சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரையும் கவரும். அந்த வகையான சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களில் ஒன்று பேட்மேன் கதாபாத்திரம். பேட்மேன் கதாபாத்திரத்தைக் மையமாகக் கொண்டு ஏற்கெனவே பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. வசூலையும் வாரி குவித்து உள்ளன. இதன் தொடர்ச்சியாக வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் மற்றொரு படம் 'தி பேட்மேன்'. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 4ந் தேதி படம் வெளியாகும் நிலையில் நேற்று படத்தின் டிரைலர் வெளியானது. டிரைலரில் பல சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 1.5 கோடி பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

43 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

அ.தி.மு.க. ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக அமைச்சர்கள் சொத்துக்களை சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோரது வீடுகளில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி. விஜயபாஸ்கர் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். சென்னையில் கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய 2 இடங்களில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோடு, சேத்துப்பட்டு ஹாரிங்டன்ரோடு ஆகிய 2 இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள் உள்ளன. இந்த 2 வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனை நடத்தினார்கள். டெய்லர்ஸ் ரோடு…