யாழ். பல்கலை விரிவுரையாளர் கண்ணதாசன் நேற்று விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டாரென்ற குற்றச்சாட்டுனான வழக்கிலிருந்து யாழ்.பல்கலைக்கழக நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசன் முழுவதுமாக விடுதலை செய்யப்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக, பலவந்தமாக ஆட்களைக் கடத்தினாரென்ற குற்றச்சாட்டின் பேரில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விரிவுரையாளர் கண்ணதாசனுக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் அவர் குற்றவாளியாக காணப்பட்டு 2017ஆம் ஆண்டு அவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இந்தத் தண்டனையை எதிர்த்து க.கண்ணதாசன் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மேன்முறையீடு செய்திருந்தார். அந்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நடைபெற்று வந்ததையடுத்து 2020 ஜூலை 22ஆம் திகதி அவரது ஆயுள் தண்டனையை இரத்துச் செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குற்றப்பத்திரிகையை மீள விளக்கத்துக்கு எடுக்க அனுமதியளித்தது. இந்த வழக்கு வவுனியா…

ஹிஷாலினியின் சடலம் நேற்று தோண்டியெடுப்பு

ரிஷாத் பதியுதீனின் எம்.பி வீட்டில் தீக்காயங்களுக்குள்ளாகி மரணமான டயகம சிறுமி ஜூட்குமார் ஹிஷாலினியின் சடலம் நேற்று (30) இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது. கொழும்பிலிருந்து சென்ற சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் மற்றும் கண்டியிலிருந்து அழைக்கப்பட்டிருந்த இரண்டு சட்ட வைத்திய அதிகாரிகள் முன்னிலையில் ஹிஷாலியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. டயகம பிரதேசத்திற்கு நேற்றுக் (30) காலை 9.00 மணியளவில் அதிகாரிகள் குழுவினர் சென்றதன் பின்னர் புதைகுழி தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. படிப்படியாக முன்னெடுக்கப்பட்ட இந்த பணியின்போது அங்கு புதைகுழி மண் பரிசோதிக்கப்பட்டது. கொரோனா சுகாதார வழிமுறைகளுக்கமைய தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மழை வந்தால் பாதுகாப்பாக இருக்க மயானத்தில் புதை குழிக்கு கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. சடலம் அடங்கிய பேழையை நேற்று சரியாக 12.20க்கு பாதுகாப்பாக குழியிலிருந்து வெளியே கொண்டுவந்தனர். அங்கு போடப்பட்டிருந்த மேசையில் சடலம் வைக்கப்பட்டு சவப்பேழை…

விஜய் ஆண்டனிக்கு நாயகியாகும் ஹன்சிகா?

விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக ஹன்சிகாவை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனியின் நடிப்பில் 'கோடியில் ஒருவன்', 'தமிழரசன்', 'அக்னிச் சிறகுகள்', 'காக்கி', 'பிச்சைக்காரன் 2' உள்ளிட்ட பல படங்கள் தயாராகி வருகின்றன. இதில் சில படங்களின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன. தற்போது நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு, விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய் ஆண்டனி. இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் நாயகியாக நடிக்க ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. படப்பிடிப்பிற்கான தேதிகள் முடிவானவுடன், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனத் தெரிகிறது. பல்வேறு தீவுகளில் இதன் படப்பிடிப்பை நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படங்களை விட, இது முழுமையாக, வித்தியாசமாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

நான் இறந்துவிட்டதாகச் செய்தி பரப்பியவருக்கு நன்றி: ஷகிலா

நடிகை ஷகிலா தனது மறைவு பற்றிய பொய்யான செய்திகளுக்கு பதிலளிக்கும் வண்ணம் காணொலி ஒன்றைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். நடிகை ஷகிலா, தனது 16 வயதில் சினிமா துறையில் நுழைந்தவர். மலையாளத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாக்களில் வலம்வந்து பிரபலம் அடைந்தார். தமிழில் 'தூள்', 'வாத்தியார்', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரையில் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் என்று தீவிரமாகக் களமிறங்கியுள்ளார் ஷகிலா. இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாகச் சிலர் இணையத்தில் செய்திகள் பரப்பியுள்ளனர். இது பலருக்கு அதிர்ச்சியைத் தந்தது. இந்நிலையில் ஷகிலா தான் நலமுடன் இருப்பதாக காணொலி ஒன்றைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். பொய்யான செய்தியைப் பரப்பியவருக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். "அனைவருக்கும் வணக்கம். நான் இறந்துவிட்டதாகச் சில செய்திகளைக் கேள்விப்பட்டேன். நான் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, பெரிய புன்னகையுடன் இருக்கிறேன்.…

முடிவில் சொதப்பிய ‘திட்டம் இரண்டு’ படம்

காணாமல் போன தன் தோழியைக் கண்டுபிடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் எடுக்கும் முயற்சிகளே 'திட்டம் இரண்டு' படத்தின் கதை. சென்னைக்குப் புதிதாக வருகிறார் இன்ஸ்பெக்டர் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்போது பேருந்தில் சுபாஷ் செல்வமைச் சந்திக்கிறார். இருவரும் நட்பாகிறார்கள். சென்னைக்கு வந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முதல் வழக்கே, மர்மமான முறையில் காணாமல் போன அவருடைய நீண்ட காலத் தோழியான அனன்யாவைத் தேடுவதுதான். அவரைத் தேடும்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிந்துகொள்ளும் அதிர்ச்சியூட்டும் விஷயங்கள் என்ன, அனன்யா உயிரோடு இருக்கிறாரா, இல்லையா, என்பதுதான் 'திட்டம் இரண்டு' படத்தின் திரைக்கதை. ஐஸ்வர்யா ராஜேஷ் அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். அவருடைய நடிப்பு மற்றும் மேக்கப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஐஸ்வர்யா ராஜேஷின் காதலராஜ சுபாஷ் செல்வம். அவருடைய நடிப்பு சில இடங்களில் சரியாக எடுபடவில்லை. ஆனாலும், ஒரு நம்பிக்கைக்குரிய அறிமுகம்தான். இன்னொரு…

என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன்

என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன், நெருக்கமானவன் என்று பசுபதி தெரிவித்துள்ளார். பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. அமேசான் ஓடிடியில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை விமர்சகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும், சமூக வலைதளத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் குறிப்பிட்டுப் பாராட்டி வருகிறார்கள். இதில் ரங்கன் வாத்தியாராக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார் பசுபதி. அவருடைய நடிப்பைப் பலரும் பாராட்டினர். மேலும், சமூக வலைதளத்தில் தன்னைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி என்று பசுபதி பெயரில் தொடங்கப்பட்ட ட்விட்டர் கணக்கில் குறிப்பிட்டு இருந்தார்கள். தற்போது 'சார்பட்டா பரம்பரை' படத்துக்கு நன்றி தெரிவித்தும், தான் சமூக வலைதளத்தில் இல்லை என்பதையும் பசுபதி அறிக்கை மூலமாகத் தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பாக பசுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:"தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம்…

‘தலைவர் 169’ அப்டேட்: தயாரிப்பாளர் மாற்றம்?

ரஜினி நடிக்கவுள்ள 'தலைவர் 169' படத்தின் தயாரிப்பாளர் மாற்றப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சிவா இயக்கத்தில் உருவாகும் 'அண்ணாத்த' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இமான் இசையமைத்து வருகிறார். 'அண்ணாத்த' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இது ரஜினி நடிப்பில் உருவாகும் 168-வது படமாகும். இதனைத் தொடர்ந்து 169-வது படத்தின் இயக்குநர் யார் என்று பல்வேறு செய்திகள் வெளியான வண்ணமிருந்தன. இறுதியாக, இந்தப் படத்தை 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. இவர் கூறிய கதை மிகவும் பிடித்திருந்ததால் ரஜினி உடனே ஒ.கே சொல்லியிருக்கிறார். இந்தப் படத்தை முதலில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கப்…

தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை

தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை சம்பவத்தில் அ.தி.மு.கவை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மதூர் கிராம பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மகன் சண்முகம் (வயது 56). இவர், மதூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும், தி.மு.க. சாலவாக்கம் ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர், சாலை காண்ட்ராக்ட் பணிகள், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பணிகளை செய்து வந்துள்ளார். சாலை காண்ட்ராக்ட் பணிகளில் சண்முகத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. வாலாஜாபாத் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் சண்முகம் சொந்த ஊரான மதூர் கிராமத்திற்கு தினமும் காலையில் வந்து விட்டு, இரவில் வாலாஜாபாத்தில் உள்ள வாடகை வீட்டிற்கு…