மலையாளத்தில் தொடரும் ஓடிடி வெளியீடுகள்

கரோனா அச்சுறுத்தலால் தொடர்ச்சியாகப் பல்வேறு படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து ஓடிடி தளங்கள் மக்களிடையே பிரபலமாகி வருகின்றன. இதனை முன்வைத்துப் பல்வேறு நிறுவனங்கள் இந்தியத் திரையுலகில் கவனம் செலுத்தி வருகின்றன. தற்போது இந்தியாவில் கரோனா 2-வது அலை குறையத் தொடங்கியுள்ளது. ஆனாலும், கேரளாவில் தொடர்ச்சியாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளன. ஆந்திராவில் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்திலும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, மலையாளத் திரையுலகில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்கள் தொடர்ச்சியாக ஓடிடியில் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஃபகத் பாசில் நடிப்பில் உருவான 'சி யூ சூன்', 'ஜோஜி', 'மாலிக்' உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வெளியாகின. அதேபோல் மோகன்லால்…

அண்ணாத்த படத்துக்கு ‘டப்பிங்’ பேசிய ரஜினி

ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏற்கனவே ஐதராபாத்தில் நடந்த இதன் படப்பிடிப்புகளில் அதிக நாட்கள் பங்கேற்று நடித்தார். பின்னர் அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனை செய்து சென்னை திரும்பி மீண்டும் விடுபட்ட காட்சிகளுக்காக இரண்டு நாட்கள் நடித்து கொடுத்தார். தற்போது ரஜினி நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் முடிந்துள்ளதால் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளன. ரஜினிகாந்த் ஸ்டுடியோவுக்கு சென்று டப்பிங் பேசினார். கிராபிக்ஸ், இசை கோர்ப்பு உள்ளிட்ட பிற தொழில்நுட்ப பணிகளும் தொடங்கி உள்ளன. தீபாவளி பண்டிகையில் அண்ணாத்த படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 கதாநாயகிகள் நடிக்கின்றனர். சிவா இயக்குகிறார். அண்ணாத்த பட வேலைகள் முடிந்ததும் ரஜினிகாந்த் அடுத்து நடிக்க உள்ள படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியின் புதிய படத்தை…

பிரபல நடிகர் கார்த்திக் ஆஸ்பத்திரியில் அனுமதி

90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த கார்த்திக் தற்போது மற்ற நடிகர்கள் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமாகி 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த கார்த்திக் தற்போது மற்ற நடிகர்கள் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். வில்லனாகவும் நடிக்கிறார். சென்னை போயஸ் கார்டனில் வசிக்கும் கார்த்திக், வீட்டில் உடற்பயிற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு காலில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது. வலியால் துடித்தார். உடனடியாக அவரை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அதே இடத்தில் மீண்டும் அடிபட்டதால் எலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டு இருப்பது…

அபராதத்தை நிவாரண நிதியாக தர விருப்பமில்லை : விஜய்

கொரோனா நிவாரண நிதியாக அரசுக்கு ரூ.25 லட்சம் கடந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது என்று நடிகர் விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு பிரிட்டன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 'ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்' காருக்கு, நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத தொகையை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கும்படியும் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், தனி நீதிபதி விதித்த தீர்ப்பை எதிர்த்தும், தான் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை நீக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விஜய் தரப்பில் முன்வைக்கப்பட்ட…

கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற சினேகன்-கன்னிகா திருமணம்

பிரபல சினிமா பாடல் ஆசிரியர் கவிஞர் சினேகன். 700க்கும் மேற்பட்ட படங்களில் பாடலாசிரியராக பணிபுரிந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். தற்போது நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்ய கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். சினேகன் தொலைக்காட்சி நடிகை கன்னிகாவை காதலித்து வந்தார். சினேகன், கன்னிகா இருவரும் கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்துவந்தனர். இந்த நிலையில் இன்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. சென்னையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் நடந்த இத்திருமணத்தை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தலைமையேற்று நடத்திவைத்தார். திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சினேகன் - கன்னிகா தம்பதிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். 'தேவராட்டம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கன்னிகா, தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

விமல் வீரவங்ச 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு

கைத்தொழில் துறை அமைச்சர் விமல் வீரவங்ச 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். தன்னுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக கடமையாற்றி பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதனால் அவர்களுடன் தொடர்பில் இருந்த காரணத்தினால் தனிமைப்படுத்தலுக்கு உட்பட தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். -----

இந்தியாவுக்கு சென்றால் 3 ஆண்டுகளுக்கு நாடு திரும்ப முடியாது!

கொரோனா அபாயப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் தங்களது குடிமக்களுக்கு 3 ஆண்டுகள் பயணத் தடை விதிக்கப்படும் என்று சவூதி அரேபியா அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசுக்குச் சொந்தமான சவூதி பிரஸ் ஏஜென்சி (எஸ்பிஏ) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: கொரோனா அபாயப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நாடுகளுக்குப் பயணம் செல்வது, நோய்த் தடுப்பு கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் சவூதி அரசின் வழிகாட்டுதல்களையும் மீறும் குற்றமாகும். எனவே, அண்மையில் கொரோனா பரவல் அதிகரித்ததால் அபாயப் பகுதிகள் பட்டியலில் சோ்க்கப்பட்ட நாடுகளுக்கு சவூதி குடிமக்கள் யாரும் செல்லக் கூடாது என்று உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்தப் பட்டியலில் இந்தியா, துருக்கி, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா, லெபனான், யேமன், ஆா்மீனியா, எத்தியோப்பியா, சோமாலியா, காங்கோ, வெனிசூலா, பெலாரஸ், வியத்நாம் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. அரசின்…

கொழும்பில் 30 இடங்களில் பொலிஸார் தீவிர தேடுதல்!

கொழும்பு நகரில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள இடங்களை கண்டறிவதற்காக நேற்று முன்தினம் 30 இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. புலனாய்வுப் பிரிவின் தகவல்களுக்கமைய முகத்துவாரம் மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுகளில் இந்த சோதனை நடவடிக்கைகள் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். அதேநேரம், சிறுவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள இடங்களை கண்டறிவதற்கான சுற்றிவளைப்புக்கள் மேலும் சில பொலிஸ் பிரிவுகளில் நேற்றும் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை, சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல், வன்கொடுமைக்கு ஆளாக்குதல், துஷ்பிரயோகத்துக்குட்படுத்துதல் உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்க பொலிஸார் விஷேட இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன்படி கொழும்பில் அல்லது அதனை அண்டிய பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் 0112 433…

நடைபெயிற்சி சென்ற நீதிபதி ஆட்டோ ஏற்றிக் கொலை சிசிடிவி காட்சி

சாலையோரம் நடந்துசென்ற நீதிபதி மீது ஆட்டோ ஒன்று மோதியதுடன் நிற்காமல் சென்றது சிசிடிவி காட்சி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் தன்பாக் மாவட்ட நீதிபதியாக இருந்தவர் உத்தம் ஆனந்த். அவர் ஹிராப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் நேற்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவர் மீது பின்னால் ஆட்டோ ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றது.ஆட்டோ மோதியதில் படுகாயமடைந்த நீதிபதி உத்தம் ஆனந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். நீதிபதி மரணம் விபத்து என்று கருதப்பட்ட நிலையில் சாலையோரம் நடந்து சென்ற நீதிபதி மீது ஆட்டோ ஒன்று மோதியதுடன் நிற்காமல் சென்றது சிசிடிவி காட்சி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. போலீசாரிடம் அளித்த அளித்த புகாரில், நீதிபதியின் மனைவி கிருதி சின்ஹா கூறியதாவது:- தனது கணவர் அதிகாலை 5 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறினார். அவர் நீண்ட…