பாண்டிய நிலா நூல் தமிழ்நாடு மலேசியா இரு இடங்களில் வெளியீடு

டென்மார்க் கி.செ.துரை எழுதிய பாண்டிய நிலா என்ற என்ற நூல் கடந்த வியாழன் தமிழ்நாடு பரமக்குடியிலும், நேற்று சனிக்கிழமை மலேசியா கிள்ளானிலும் வெளியீடு செய்யப்பட்டது.

இவ்விரு நாடுகளிலும் தோழர் செல்வா பாண்டியர், சுரேஸ் பாண்டியரின் ஓராண்டு நினைவு தினம் ஒளியூட்டும் விழாவாக நடைபெற்றது, இத்தருணம் முக்கிய ஆவணமாக இந்த நூல் வெளியீடு கண்டது.

அத்தருணம் மலேசியாவில் செல்வா பாண்டியர் தபால் தலையும் வெளியீடு செய்யப்பட்டது.

இந்த நூல் மிகவும் வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்ட படைப்பாகும். ஒரு நவீனத்தை எழுதும்போது அதனுடைய மூலக்கருவை வாசகனுக்கு துல்லியமாக விளக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் எழுத்தாளர் கையிலெடுக்க வேண்டும்.

மிகவும் பரந்த ஞானத்தையும், இடையறாத தேடலையும் கொண்டு சமரசமற்ற கடின உழைப்பினால் அதை உண்மையான உணர்வுடன் வெளிக்கொண்டு வரவேண்டும்.

விமர்சனங்கள், எதிர்ப்புக்கள், வேண்டியவர், வேண்டாதவர் என்ற எண்ணங்களுக்கு பலியாகி எழுத்தை திசை மாற்றாமல், புகழோ பணமோ, பட்டமோ பரிசோ எதையுமே எதிர்பாராது யாதொரு எதிர்பார்ப்பும் இன்றி கலைத்துவமான படைப்பே முக்கியமென எழுதப்பட வேண்டும்.

அந்த நேரம் எந்தவொரு அரசியலையோ அல்லது சமயத்தையோ அல்லது ஏதாவது ஒரு சித்தாந்தத்தையோ சரியானதென முன்முடிவு கண்டு முதுகு சொறியாமல் சுதந்திர தரிசனமாக பேனா எழுதிச் செல்ல வேண்டும்.

அவ்வளவுதானா இல்லை அத்தகைய படைப்பு இதற்கு முன்னர் எழுதப்பட்ட வடிவமாகவும் இருக்கவும் கூடாது. அத்தகைய தன்மைகள் கொண்ட, இதுதான் சிறந்த நூல் என்று மார்தட்டாமல் தன் கடமையை மட்டும் சரிவர செய்த ஓர் எழுத்துப்பிரதி வேண்டுமா.. அத்தகைய எழுத்தை வாசித்த புதுமை அனுபவம் வேண்டுமா.. படிக்க வேண்டிய நூல் பாண்டிய நிலா.

இதன் வெளியீடு விரைவில் சிங்கப்பூர், பர்மா, இந்தோனீசியா, கட்டார், டுபாய், தென்னாபிரிக்கா, டென்மார்க், ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற இடங்களில் நடைபெற இருக்கிறது.

அலைகள் 24.03.2019 ஞாயிறு

Related posts