அலைகள் வாராந்தப் பழமொழிகள் 24.03.2019

01. நம்பிக்கையால் மலையைக் கூட தகர்த்துவிடலாம் என்ற வாசகத்திற்குள்தான் வெற்றியை உருவாக்குவதற்கான ஞானம் இருக்கிறது.

02. ஒரு மலையை நகர்த்த வேண்டுமென நீங்கள் நம்பினால் அது உங்களால் முடியும். ஆனால் பலருக்கு அந்த நம்பிக்கை இல்லை. அதன் விளைவாக பலர் அதை செய்வதும் இல்லை.

03. நம்பிக்கையின் உதவியோடு நீங்கள் எதையும் சாத்தியமாக்கலாம். நம்பிக்கைச் சக்தியில் எந்த மர்மமும் இல்லை எந்த மாஜாஜாலமும் இல்லை.

04. என்னால் முடியுமென நீங்கள் கருதும்போது அதை உருவாக்குவதற்கான சக்தியும் தானாகவே உருவாகிவிடுகிறது.

05. உயரே செல்வது சாத்தியம் இல்லை என்று அவர்கள் கருதுவதால் மாபெரும் இடங்களுக்கு செல்லும் வழிகளை அவர்கள் கண்டறிவதில்லை. அவர்களின் நடத்தை ஒரு சராசரி நபரின் நடத்தை போல இருக்கிறது.

06. உயர்வடைய வேண்டுமா வெற்றிகரமான மனிதர்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு அணுகுகின்றனர் என்று கண்டு கொள்ளுங்கள்.

07. தன்னால் சாதிக்க முடியும் என்று கருதும் ஒருவனுக்குத்தான் அதை சாதிப்பதற்கான வழி தெரிய வருகின்றது.

08. தொழிலில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் அந்த நம்பிக்கையானது முதலீட்டாளர்களை உங்களை நோக்கி அழைத்து வரும்.

09. உங்களால் வெற்றி பெற முடியும் என்று நீங்கள் நம்பினால் நிச்சயமாக மற்றவர்களும் உங்களை அதுபோலவே நம்புவார்கள்.

10. நம்பிக்கைதான் ஒரு காரியத்தை சாதிப்பதற்கான வலுவை நமக்கு தருகிறது.

11. நம்பிக்கை இருந்தபடியால்தான் மனிதன் விண்வெளியை வெற்றி கொண்டான்.

12. புற்று நோய்க்கு மனிதனால் சரியான மருந்தைக் கண்டு பிடிக்க முடியுமா..? முடியும் என்று நம்பினால் நிச்சயமாக எட்டித்தொட முடியும்.

13. நான் முயற்சிக்கிறேன் அது வேலை செய்யும் போல தோன்றவில்லை என்ற மனப்போக்கு எப்போதும் தோல்விக்கே வழிவகுக்கும்.

14. சந்தேகம், நம்பிக்கையின்மை, நான் தோற்றுவிடுவேனோ என்கின்ற எண்ணம், வெல்ல வேண்டும் என்கின்ற விருப்பம் இன்மை இவைகள் அனைத்தும் தோல்வியை தரும் காரணங்களாகும்.

15. நீங்கள் சந்தேகத்தைப் பற்றி நினைத்தால் நிச்சயமாக தோற்றுப் போய்விடுவீர்கள்.

16. நீங்கள் வெற்றியைப் பற்றி நினைத்தால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

17. அவர் அற்புதமான மனிதர் ஆனால் அவரளவுக்கு என்னால் முடியாது என்று நீங்கள் கூறினால் போதும் உடனேயே தோற்றுவிடுகிறீர்கள்.

18. தலைவர்களுக்கு மதிப்பு கொடுப்பது நல்லது, நாம் அவர்களை ஆய்வு செய்ய வேண்டும். அவர்களை கவனிக்க வேண்டும் ஆனால் அவர்களை தலைவா என்று வழிபடத் தேவையில்லை.

19. இரண்டாம்தர மனப்போக்கை வளர்த்தால் எப்போதுமே இரண்டாம் தரத்தில்தான் இருப்பீர்கள்.

20. வாழ்வில் நாம் எதை சாதிக்கிறோம் என்று முறைப்படுத்துவது நம்பிக்கைதான்.

21. சராசரிக்கும் கீழான வாழ்க்கையில் உள்ள ஒரு மனிதனை பாருங்கள். தான் மிக சொற்ப மதிப்புடையவன் என்று நம்புவதால் வாழ்வில் குறைவானவற்றையே அவன் பெறுகிறான்.

22. ஒருவன் பேசும் பேச்சும், நடக்கும் நடையும் அவன் நம்பிக்கையீனத்தை மற்றவர்களுக்குக் காட்டிக் கொடுக்கும்.

23. ஒருவனுடைய எண்ணங்கள் எப்படியிருக்கின்றனவோ அவன் அப்படியே இருக்கின்றான். எண்ணங்கள்தான் ஒருவனுடைய நிலையை தீர்மானிக்கின்றன.

24. உங்களால் வெற்றிபெற முடியும் என்ற நேர்மறையான, உண்மையான நம்பிக்கையுடன் வெற்றிக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். பிரமாண்டமாக சிந்தித்து பிரமாண்டமாக வளருங்கள்.

25. உங்கள் மனம் உங்களுக்கு எதிராக செயற்படுவதற்கு அதை அனுமதிப்பதற்கு பதிலாக, அது உங்களுக்கு சாதகமாக செயற்படும்படி செய்வது எப்படி என்று சிந்தியுங்கள்.

அலைகள் நல்ல நூல்களின் கோடிட்ட தகவல்கள் வரும்..

அலைகள் 24.03.2019 ஞாயிறு

Related posts