பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்த டயானா கமகே!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயின் பாராளுமன்ற உறுப்புரிமையை வறிதாக்கி உயர் நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்துள்ளது.

சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அறிவித்ததுள்ளது.

டயானா கமகே பிரித்தானிய பிரஜையாக இருப்பதால் இந்த நாட்டின் பாராளுமன்றத்தில் அமர சட்டரீதியாக தகுதியற்றவர் என தீர்ப்பளிக்க கோரி இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டயானா கமகேவின் பதவி நீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் பெயர் முன்மொழியப்பட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயின் பாராளுமன்ற உறுப்புரிமையை வறிதாக்கி உயர் நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்துள்ளது.

சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அறிவித்ததுள்ளது.

டயானா கமகே பிரித்தானிய பிரஜையாக இருப்பதால் இந்த நாட்டின் பாராளுமன்றத்தில் அமர சட்டரீதியாக தகுதியற்றவர் என தீர்ப்பளிக்க கோரி இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

——-

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சட்டத்தரணிகளுக்கு நீதிமன்றம் காலவகாசம் வழங்கியுள்ளது.

ஊவா மாகாண ஆளுநர் மொஹமட் முஸம்மிலின் மகன் தாக்கல் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

Related posts