கி.செ.துரையின் பாண்டிய நிலா புத்தகம் சற்று முன் வெளியானது

தமிழர் தேசிய தந்தை என்று போற்றப்படும் தோழர் செல்வா பாண்டியரின் ஓராண்டு நினைவுதினமான இன்று அவருடைய கொள்கைளை தழுவி எழுதப்பட்ட பாண்டிய நிலா நூல் வெளியிடப்பட்டது. தமிழகம் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இதற்கான விழா தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழர் ஒளிய10ட்டி நாளில் பல்வேறு நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன.. 01. பாண்டிய நிலா நூல் வெளியீடு : வெளியிட்டவர் எழுகதிர் ஆசிரியர் ஐயா திரு. அருகோ அவர்கள் பெற்றுக் கொண்டவர் டாக்டர் ஆனந்தராஜன் மலேசியா. 02. பாண்டியர் தபால் தலையை மலேசிய தபால் திணைக்களம் வெளியிட்டுள்ளது இதன் வெளியீடு. 03. சாதனை படைத்தோருக்கு விருது வழங்கி கௌரவித்தல்.. முக்கிய உரைகள் என்று பல நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அலைகள் 21.03.2019

கொங்கொங்கில் 72.000 கோடி டாலர்களில் வருகிறது புதிய தீவு

டென்மார்க்கில் ஒன்பது தீவுகள் செயற்கையாக உருவாக்கப்படுவது போல கொங்கொங்கிலும் புதிய தீவு.. 2.60.000 புதிய வீடுகளை அமைக்க வேண்டும், சனத்தொகை பெருகுகிறது.. உலகத்தின் பாரிய வர்த்தக நகரத்தைப் பற்றி அறிய வேண்டாமா..? அலைகள் 19.03.2019

பாண்டிய நிலா புத்தகம் அச்சானது நாளை வெளியீடு

தமிழர் தேசிய தந்தை செல்வா பாண்டியர் மரணித்த ஓராண்டு தினம் நாளையாகும். அதன் பொருட்டு உலகின் பல நாடுகளிலும் தமிழர் தேசிய ஒளியூட்டி நாள் என்ற சிறப்பு நிகழ்வு கொண்டாடப்படுகிறது. இதன் பொருட்டு தோழர் செல்வா பாண்டியரின் வாழ்க்கையையும் அவர் வாழ்ந்த காலத்தே அவர் கூறிய தத்துவங்களையும் உள்ளடக்கி வெளி வருகிறது கி.செ.துரை எழுதிய பாண்டிய நிலா என்ற நூல். இந்த நூல் தமிழகம், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட பல்வேறு நாடுகளில் நாளை வெளியீடு செய்யப்படுகிறது. தமிழ்நாடு பரமக்குடியில் இதன் பொருட்டு பாரிய விழா ஒன்று ஏற்பாடாகியிருக்கிறது. நாளை அந்த மண்டபத்தில் புத்தகம் வெளியீடு செய்யப்படுகிறது. இந்த நூலுக்கு ஒரு சிறப்பம்சம் உள்ளது. அலைகளில் தொடராக வெளி வந்து மக்களின் பாராட்டுக்களை பெற்றது. இப்போது நூல் வடிவில் வருகிறது. பூமி, ஆகாயம், அண்டவெளி முதற் கொண்டு மடிந்த…

அஜித்தை ஒருதலையாக காதலிக்கிறேன்

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பல்வேறு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறியவர். தனது முகநூல் பக்கத்தில் தான் அவர் தனது புகார்களை பதிவிடுவார். இந்நிலையில், நடிகை ஸ்ரீ ரெட்டி, நடிகர் அஜித் குறித்து தனது முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், நடிகர் அஜித்தை புகழ்ந்து இருப்பதோடு, அவரை ஒருதலையாக காதலிப்பதாகவும் கூறியுள்ளார். அவர் தனது பேஸ்புக் பதிவில், "அஜித்தின் படத்தை பார்க்காமல் நான் உறங்க செல்ல மாட்டேன். அவர் தமிழ்நாட்டில் நம்பர் 1 ஹீரோ. சர்ச்சைகளில் இருந்து அவர் விலகியே இருப்பார். மிகவும் தன்மையாக பேசக்கூடியவர்.குடும்பத்தை மதிக்கும் மனிதர் அஜித். தனது ரசிகர்களை மிகவும் நேசிக்கிறார். மிகச் சிறந்த மனிதர். சிறந்த கணவர், சிறந்த தந்தை. கோடிக்கணக்கான பெண்களின் இதயங்களை திருடியவர். என் தலை உங்கள் காலில் தல", என…

உடனே திருமணம் திரிஷா திட்டம்

திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா பற்றி அடிக்கடி திருமண, காதல் கிசுகிசுக்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. நயன்தாரா இயக்குனர் விக்னேஷ்சிவனை காதலிக் கிறார், அனுஷ்கா பிரபாஸை காதலிக்கிறார் என்று தகவல்கள் பரவினாலும் அதை அவர்கள் யாரும் உறுதி செய்யவில்லை. முன்னதாக திரிஷாவுக்கும் நடிகர் ராணாவுக்கும் காதல் என்று கிசுகிசு பரவியது. அதற்கு மாறாக திரிஷாவுக்கு தயாரிப்பாளர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அந்த திருமணத்தை சில காரணங்களால் ரத்து செய்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் திரிஷா. இந்நிலையில் திருமணம் பற்றி அவரிடம் கேட்டபோது தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்து திரிஷா கூறும் போது,’இப்போதைக்கு நான் யாரையும் காதலிக்கவில்லை. ஆனால், எனக்கான சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார். திரிஷாவின் பார்வையில் படப்போகும்…

ஆதி – ஹன்சிகா நடிக்கும் ‘பார்ட்னர்’

ஆதி - ஹன்சிகா நடிக்கும் படத்துக்கு ‘பார்ட்னர்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆதி நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்ப் படம் ‘யு-டர்ன்’. பவன் குமார் இயக்கிய இந்தப் படம், கடந்த வருடம் (2018) செப்டம்பர் மாதம் ரிலீஸானது. பிரதான வேடத்தில் சமந்தா நடித்தார். தெலுங்கில் வெளியான ‘யு-டர்ன்’ படத்தின் ரீமேக் இது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘பார்ட்னர்’ என்ற படத்தில் நடிக்கிறார் ஆதி. மனோஜ் தாமோதரன் இந்தப் படத்தை இயக்குகிறார். சற்குணத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இவர், ‘டோரா’ படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றினார். ஹன்சிகா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், ஆதி ஜோடியாக பாலக் லல்வாணி நடிக்கிறார். பாண்டியராஜன், யோகி பாபு, ரோபோ சங்கர், விடிவி கணேஷ், ஜான் விஜய், ரவிமரியா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். காமெடியை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில்,…

மக்கள் நீதி மய்யம் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்

மக்கள் நீதி மய்யம் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதல் 20 வேட்பாளர்களின் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார். அதில் 50 சதவீதம் தொழிலதிபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ரசிகர் மன்றத்திலிருந்து யாரும் வேட்பாளராக இல்லை என்பது தெரிகிறது. இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ''நாடாளுமன்றத் தேர்தல் – 2019 மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பட்டியல் நமக்கான அரசியல் நமக்கான கட்சி என்கின்ற உயரிய நோக்கத்துடன் என்னைப் போல் முன்வைக்கப்பட்டு நமக்கான ஆட்சி அமைக்க வேண்டிஏப்.14 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரபூர்வமான வேட்பாளர்களாக கீழ்கண்டவர்கள் கீழ்காணும் தொகுதிகளுக்கு நிறுத்தப்படுகிறார்கள்''. இவ்வாறு கமல் தெரிவித்தார். மக்கள் நீதிமய்யம் வேட்பாளர்களாக அறிவித்துள்ளவர்களில் 50 சதவீதத்தினர் தொழிலதிபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற வேட்பாளர்கள் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள். கமல் ரசிகர் மன்றத்தை…