உலக மொழிகளை கற்க ஒரு புது வழி இலக்கணத்தை மாற்றி கற்போம்

அலைகள் தமிழ் கல்வியில் இவ்வாரம் இலக்கணம் இடம் பெறுகிறது.. பயப்படாதீர்கள் எல்லோருக்கும் புரியும்.. அலைகள் 25.03.2019

உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19. 12

சிலுவை மரணமும் தேவ சமாதானமும். சகோதரன். பிரான்ஸ்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். ரோமர் 5:1 இலங்கையில் ஏற்பட்ட இனப்பிரிவினைகளையும், உலகின் பலநாடுகளில் நடக்கும் யுத்தங்களையும், பிரிவினைகளையும் சிந்தித்துப் பார்த்தால் இன்றைய தியானத்தை மிகத்தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். தேசங்களில் இருபிரிவினர்கள் மத்தியில் நடக்கும் விரிசல்களை, கலவரங்களை நீக்கி அவர்கள் மத்தியில் அமைதியை, சமாதானத்தைக் கொண்டுவர பலதேசங்கள் பலவழிகளில் செயற்படுவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. ஆனால், அவர்கள் விரும்பும் சமாதானத்தைக் காணக் கூடாமல், மக்களும் சொத்துக்களும் அழிக்கப்படுவதையும் காணக்கூடியதாகவுள்ளது. இந்த அழிவைத்தடுக்க பலநாடுகள் பலமணி நேரங்களையும், பலகோடி பணத்தையும், சில வேளைகளில் பலஉயிர்களையும் கொடுக்கின்றது. ஆனால் சமாதானத்தை அமைதியைக் கண்டடையமுடியவில்லை. இவைகள் அனைத்தும் நாம் கண்ட உண்மைகள். ஆனால் நாம் காணாத, அதாவது உணரக்கூடிய உண்மை…

அலைகள் வாராந்தப் பழமொழிகள் 24.03.2019

01. நம்பிக்கையால் மலையைக் கூட தகர்த்துவிடலாம் என்ற வாசகத்திற்குள்தான் வெற்றியை உருவாக்குவதற்கான ஞானம் இருக்கிறது. 02. ஒரு மலையை நகர்த்த வேண்டுமென நீங்கள் நம்பினால் அது உங்களால் முடியும். ஆனால் பலருக்கு அந்த நம்பிக்கை இல்லை. அதன் விளைவாக பலர் அதை செய்வதும் இல்லை. 03. நம்பிக்கையின் உதவியோடு நீங்கள் எதையும் சாத்தியமாக்கலாம். நம்பிக்கைச் சக்தியில் எந்த மர்மமும் இல்லை எந்த மாஜாஜாலமும் இல்லை. 04. என்னால் முடியுமென நீங்கள் கருதும்போது அதை உருவாக்குவதற்கான சக்தியும் தானாகவே உருவாகிவிடுகிறது. 05. உயரே செல்வது சாத்தியம் இல்லை என்று அவர்கள் கருதுவதால் மாபெரும் இடங்களுக்கு செல்லும் வழிகளை அவர்கள் கண்டறிவதில்லை. அவர்களின் நடத்தை ஒரு சராசரி நபரின் நடத்தை போல இருக்கிறது. 06. உயர்வடைய வேண்டுமா வெற்றிகரமான மனிதர்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு அணுகுகின்றனர் என்று கண்டு கொள்ளுங்கள்.…

பாண்டிய நிலா நூல் தமிழ்நாடு மலேசியா இரு இடங்களில் வெளியீடு

டென்மார்க் கி.செ.துரை எழுதிய பாண்டிய நிலா என்ற என்ற நூல் கடந்த வியாழன் தமிழ்நாடு பரமக்குடியிலும், நேற்று சனிக்கிழமை மலேசியா கிள்ளானிலும் வெளியீடு செய்யப்பட்டது. இவ்விரு நாடுகளிலும் தோழர் செல்வா பாண்டியர், சுரேஸ் பாண்டியரின் ஓராண்டு நினைவு தினம் ஒளியூட்டும் விழாவாக நடைபெற்றது, இத்தருணம் முக்கிய ஆவணமாக இந்த நூல் வெளியீடு கண்டது. அத்தருணம் மலேசியாவில் செல்வா பாண்டியர் தபால் தலையும் வெளியீடு செய்யப்பட்டது. இந்த நூல் மிகவும் வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்ட படைப்பாகும். ஒரு நவீனத்தை எழுதும்போது அதனுடைய மூலக்கருவை வாசகனுக்கு துல்லியமாக விளக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் எழுத்தாளர் கையிலெடுக்க வேண்டும். மிகவும் பரந்த ஞானத்தையும், இடையறாத தேடலையும் கொண்டு சமரசமற்ற கடின உழைப்பினால் அதை உண்மையான உணர்வுடன் வெளிக்கொண்டு வரவேண்டும். விமர்சனங்கள், எதிர்ப்புக்கள், வேண்டியவர், வேண்டாதவர் என்ற எண்ணங்களுக்கு பலியாகி எழுத்தை திசை மாற்றாமல்,…

மலேசியாவில் தமிழர் தேசிய ஒளியூட்டி நாள் சிறப்பாக நடைபெற்றது.

24 மார்ச் தமிழர் தேசிய கருத்தியலை உருவாக்கி, தமிழினத்தின் மீட்சிக்கு வழியகாட்டிய, தமிழர் தேசிய தந்தை தோழர் செல்வா பாண்டியர் அவர்களுக்கு, மலேசியாவில் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. தமிழர் தேசிய இயக்கமான தமிழர் களம் மலேசியா மற்றும் தமிழர் நடுவம் மலேசியா அமைப்புகளின் ஏற்பாட்டில் SENTUL CURRY HOUSE உணவக அரங்கில் நடைபெற்ற இந்நினைவேந்தல் கூட்டத்திற்கு தலைமையேற்று வழிநடத்த முன்னாள் துணை அமைச்சர் TAN SRI DATO க.குமரன் அவர்கள் சிறப்பு வருகையாளராக கலந்து கொண்டார். தமிழர் களம் அமைப்பாளர் தமிழ்ப்புகழ் குணசேகரன் நிகழ்ச்சி நெறியாளராக இருந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். திருவிளக்கு ஏற்றி இறை வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், கலந்துகொண்ட அனைவரும் பாண்டியருக்கு ஒளி தீபம் ஏற்றி மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தமிழ்ப்புகழ் குணசேகரன் வரவேற்புரையும், தமிழர்…

போர்க்குற்ற விசாரணையை எதிர் கொள்ள அரசிடம் திராணியில்லை

01. போர்க்குற்ற விசாரணைகளை எதிர் கொள்ள இலங்கை அரசிடம் திராணியில்லை என்று சரவணபவன் எம்.பி முழங்கியுள்ளார். 02. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக இயற்றப்பட்ட தீர்மானம் பக்கச்சார்புடையது என்று கோத்தபாய ராஜபக்ஷ எரிந்து விழுந்தார். 03. வடக்கில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு மட்டுமே கொடுக்க முடியுமென அமைச்சர் ருவான் விஜயவர்த்தனா கூறியிருக்கிறார். 04. கடந்த முப்பது வருடங்களாக நடந்த போரில் உண்டான வடுக்களுக்கு தமிழ் மக்களிடம் சிறீலங்கா பா.உ. தயாசிறி யாழில் வைத்து மன்னிப்பு கோரினார். ஆனால் ஆயுதம் எடுத்தால் அவர்களை அடக்க வேண்டியது அரசின் கடமை. சிங்களவர்களான ஜே.வி.பி காலத்திலும் அரசு இதைத்தான் செய்தது என்கிறார். 05. முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்கு இலங்கை மக்கள் ஒன்றும் அவ்வளவு மோசமான முட்டாள்கள் அல்ல என்று பிரபல சிங்கள அரசியல் தலைவர் விக்கிரமபாகு…

சுமந்திரனை கொல்ல பாதாள உலகக் குழுவிடம் தொடர்பு கொண்டது யார்..?

தமிழர் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினரும் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருபவருமான சுமந்திரனை கொல்வதற்கு பாதாள உலகக் குழுவிடம் உதவி நாடப்பட்டதாக இலங்கையில் உள்ள சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜெனீவா சென்று போர்க்குற்றம் குறித்து பேச முன்னர் அவரை கொல்ல முயற்சி எடுக்கப்பட்டதாகவும் பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது. சில காலத்திற்கு முன்னர் : அதாவது.. 2016 - 2017 காலப்பகுதியில்.. முன்னாள் போராளிகள் சிலரை பயன்படுத்தி கிளைமோர் தாக்குதல் மூலம் சுமந்திரனை கொல்ல நான்கு தடவைகள் முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும் அவை வெற்றி பெறவில்லை என்றும் எழுதியுள்ளது. இதற்கு பின்னால் புலம் பெயர் புலிகளை சேர்ந்த நோர்வே நபர் ஒருவர் இருந்தாக கைதானவர்கள் கூறியதாகவும் சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டனர் என்பதும் பழைய செய்தியாகும். ஆனால் இப்போதோ பாதாள உலகக் குழுவை பயன்படுத்தி…