டென்மார்க் பெண் கவிஞர் திருமதி ரதி மோகனின் திருக்குறள் விளக்கம்

ரதிமோகனின் முகநூல் பதிவிலிருந்து.. வெள்ளியில் ஒரு திருக்குறள்: "குடம்பை தனித்துஒழியப் புள்பறந்துஅற்றே உடம்போடு உயிர்இடை நட்பு" ஆம் வள்ளுவப்பெருந்தகை கூறுகிறார். உடம்புக்கும் உயிருக்கும் உள்ள உறவு கூட்டிற்கும் பறவைக்கும் உள்ள தொடர்பு போன்றது. கூட்டைத்தனியே விட்டுவிட்டு பறவை எந்த நேரத்திலும் பறந்து போய்விடும். இந்த உடலில் உயிர் இருக்கும் வரைதான் அதற்கு மதிப்பு. அது நீங்கிவிட்டால் அதை பிணம் என சொல்கிறோம்.. இதுநாள் வரை இருந்த உடம்புக்கு எத்தனை அழகுத்தைலங்கள் பூசி பராமரித்திருப்போம்.. அழகு அழகு என சொல்லியே பெருமை கொண்டிருப்போம்.. செருக்கு , ஆணவம், அகங்காரம் கொண்டு வாழ்ந்திருப்போம்.அத்தனையும் ஒரு நொடியில் காற்றோடு கலந்துவிடும் என்பதை புரியாதவர்களாய்.... உண்ணாமல் உறங்காமல் சிறுகச்சிறுக சேர்த்து வைத்த சொத்துக்கள் கூடத்தான் வந்திடுமா? வாழும் வரை சேர்ந்த கூட்டம் கூடத்தான் வந்திடுமா? இதுநாள்வரை சேர்த்து வைத்த பாவங்களும் புண்ணியங்களும் மட்டுமே…

அமெரிக்கர்களை போல ஐரோப்பியர்களையும் நம்ப வேண்டாம்

அமெரிக்கர்களை போல ஐரோப்பியர்களையும் நம்ப வேண்டாம் என்று ஈரான் மூத்த மத தலைவர் காமெனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஈரான் மத தலைவர் அயத்துல்லா அலி காமெனி அந்நாட்டில் நடந்த அரசு விழா ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது. ‘‘அமெரிக்காவுக்கு மரணம்தான் அதாவது அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாதுகாப்பு அமைச்சர் மைக் பாப்பியோ, பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை போன்ற அதிகாரமிக்கவர்களை குறிக்கிறது. அமெரிக்கர்களை போல் நாம் ஐரோப்பியர்களையும் நம்பக் கூடாது. நாங்கள் அவர்கள் தொடர்புக் கொள்ள வேண்டாம் என்று கூறவில்லை. இருப்பினும் அவர்களிடம் நம்பகத்தன்மை இல்லை” என்றார். அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா…

சவுதியிடம் வெளிப்படை தன்மை இல்லை: துருக்கி குற்றச்சாட்டு

பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்ட விவகாரத்தில் சவுதி நடத்தும் விசாரணையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று துருக்கி குற்றச்சாட்டியுள்ளது. இதுகுறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கூறும்போது, “சவுதி பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்ட வழக்கில் சவுதியின் விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஜமால் கொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்து அவரது படுகொலைக்கு சவுதி நியாயம் வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார். சவுதி பத்திரிகையாளர் ஜமால் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்திய ஐக்கிய நாடுகள் சபை தனது முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், ''சவுதி அரேபியாவின் அதிகாரிகள் திட்டமிட்டு மிருகத்தனமாக ஜமாலைக் கொலை செய்துள்ளனர். மேலும் சவுதி, துருக்கி அரசு இந்தக் கொலை குற்றத்தை விசாரிக்க அனுமதி அளிக்காமல் 13 நாட்கள் தாமதப்படுத்தியுள்ளன'' என்று தெரிவித்துள்ளது.

இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ராஜபக்ச இந்தியா வருகிறார்.

அரசுமுறைப் பயணமாக இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ராஜபக்ச இந்தியா வருகிறார். இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக பதவி ஏற்றதற்குப் பிறகு முதல் முறையாக ராஜ பக்ச வரும் இந்தியப் பயணம் இதுவாகும். இதுகுறித்து ராஜபக்சவின் அலுவலகம் தரப்பில், ''ராஜபக்ச இன்று (வெள்ளிக்கிழமை) அரசுமுறைப் பயணமாக இந்தியா செல்கிறார். பெங்களூருவில் நடைபெறும் இலங்கை- இந்தியா நட்புறவு குறித்த நிகழ்ச்சியில் ராஜபக்ச உரையாற்றுவார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதத்தில் ராஜபக்சவின் இரண்டாவது இந்தியப் பயணம் இதுவாகும். கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா வந்த ராஜபக்ச பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் இலங்கைப் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா, கடந்த அக்டோபர் 26-ம் தேதி நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமித்தார். நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தல்…

ஜமால் கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது: ஐ.நா. அறிக்கை

பத்திரிகையாளர் ஜமால் கொலை சவுதி அதிகாரிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக ஐ.நா.குழு நடத்திய விசாரணையில் வெளியிட்ட முதல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி பத்திரிகையாளர் ஜமால் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்திய ஐக்கிய நாடுகள் சபை தனது முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், ''சவுதி அரேபியாவின் அதிகாரிகள் திட்டமிட்டு மிருகத்தனமாக ஜமாலைக் கொலை செய்துள்ளனர். மேலும் சவுதி, துருக்கி அரசு இந்தக் கொலை குற்றத்தை விசாரிக்க அனுமதி அளிக்காமல் 13 நாட்கள் தாமதப்படுத்தியுள்ளன'' என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஜமால் கஷோகி கொல்லப்படுவதற்கு முன்னரே சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், அவரைக் கொல்லத் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில் ஜமால் தனது சொந்த நாட்டுக்குத் திரும்பி சவுதி அரசை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும். இல்லையேல்…

கமல்ஹாசனை திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர் விமர்சித்துள்ளார்

திமுகவை ஊழல் கட்சி என கமல்பேட்டி அளிக்க, தற்கு பதிலடி தரும் விதமாக வெற்றிடம் என நம்பி வந்தவர் விரக்தியில் பேசுகிறார் என கமல்ஹாசனை திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர் விமர்சித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதிமய்யம் ஆரம்பித்ததிலிருந்து லேசான உரசல் திமுகவுக்கும் அவருக்கும் இருந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அவர் நடத்திய அனைத்துக் கட்சிக்கூட்டத்திற்கு நேரடியாக வந்து அழைப்பு விடுத்தும் திமுக கலந்துக்கொள்ளாததும், திமுக கூட்டும் அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் ம.நீ.மய்யத்தை அழைக்காததும் திமுக மக்கள் நீதி மய்யத்தை தள்ளியே வைத்துள்ளது என்கின்றனர். மறுபுறம் மத்திய மாநில அரசுகளை விமர்சிப்பதில் கமல் கடுமை காட்டுவதில்லை என்ற விமர்சனம் இருக்கும் வேளையில் நேற்று பேட்டி அளித்த கமல் திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள், ஊழல் பொதியை நாங்கள் சுமக்க முடியாது மக்கள் அதை புறக்கணிக்கவேண்டும் என்று…

ஊழல், மோசடி முறைப்பாடுகள் பொறுப்பேற்பு ஆரம்பம்

2015 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதல் 2018 டிசெம்பர் மாதம் 31 ஆந் திகதி வரையிலான காலப்பகுதியினுள் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் செயற்பாடுகள், மோசடிகள் பற்றி ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முறைப்பாடுகளை பொறுப்பேற்க ஆரம்பித்துள்ளது. 2015 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதல் 2018 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் செயற்பாடுகள், மோசடிகள், குற்றவியல் ரீதியான நம்பிக்கை மோசடிகள், சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்துதல், ஏமாற்றுதல் மற்றும் அதிகாரம் அல்லது தத்துவம், அரச வளங்கள் மற்றும் சிறப்புரிமைகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்துதல் அல்லது தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் சொல்லப்பட்ட குற்றங்கள் மற்றும் தவறான செயற்பாடுகளின் பெறுபேறாக அரச சொத்துக்களுக்கு, அரச வருமானத்துக்கு பாரியளவு…

ஞானசார தேரரின் தண்டனையை இடைநிறுத்த உத்தரவு

ஞானசார தேரருக்கு கடுமையான உழைப்புடன் 06 மாதங்களில் நிறைவடையும் வகையில் வழங்கப்பட்ட 01 வருட சிறைத் தண்டனையை இடைநிறுத்துவதற்கு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காணமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவத்தில் ஞானசார தேரருக்கு கடுமையான உழைப்புடன் 06 மாதங்களில் நிறைவடையும் வகையில் 01 வருட சிறைத் தண்டனை விதித்து ஹோமாகம நீதவான் நீதிமன்றம் கடந்த ஜூன் 14ம் திகதி உத்தரவிட்டது. இந்த தண்டனைக்கு எதிராக ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி அவருடைய வழக்கறிஞர்கள் மேன்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதன்படி மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை அறிவித்த ஹோமாகம நீதிமன்றம் இந்த தண்டனையை 05 வருடங்களுக்கு இடைநிறுத்த உத்தரவிட்டுள்ளது. 2016 ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியதாக ஞானசார…

ஜமால் கஷோக்ஜியின் மரணம் தொடர்பான முதல் கட்ட அறிக்கை

சௌதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜியின் மரணம் குறித்து விசாரிக்கும், துருக்கியின் திறனை சௌதி அரேபியா "மிகவும் குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக" ஐநா வல்லுநர் ஒருவர் கூறியிருக்கிறார். ஐமால் கஷோக்ஜி தூதரகத்திற்குள் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்ற 13 நாட்களுக்கு பிறகுதான் அங்கு சென்று விசாரிக்க துருக்கிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இஸ்தான்புல்லில் உள்ள சௌதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி, கசோக்ஜி சென்றபோது அவர் கொலை செய்யப்பட்டார். சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சிக்கும் முக்கிய நபராக 59 வயதான கஷோக்ஜி பார்க்கப்பட்டார். இப்படி ஒரு சம்பவம், இளவரசரின் ஒப்புதல் இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால், இதில் இளவரசர் சம்பந்தப்படவில்லை என்று சௌதி முகவர்கள் சிலர் கஷோக்ஜியை கொலை செய்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் கூறினர். இது தொடர்பாக 11…