போலீசாகும் அமலாபால் திரில்லர் கதை

அறிமுக இயக்குனர் அனுஷ் பிள்ளை இயக்க உள்ள படத்தில் நடிக்க இருக்கிறார் அமலாபால். இது புலனாய்வு திரில்லர் கதையாக உருவாகிறது. கேரளாவில் போலீஸ் அதிகாரியாக இருந்த சர்ஜன் உமாநாதன் என்பவர் கையாண்ட வழக்கு ஒன்றை மையப்படுத்தி இந்த கதை உருவாகியுள்ளது. இதில் போலீஸ் அதிகாரி வேடத்தில் அமலாபால் நடிக்க இருக்கிறார். ‘ஆடை, அதோ அந்த பறவை போல’ ஆகிய படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வரும் அமலா பால், தொடர்ந்து அதுபோல் தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிக்கவே விரும்புகிறார். இதிலும் அவரது கேரக்டருக்கே முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம் என இரு

மணிரத்னம் தயாரிப்பில் விக்ரம் பிரபு

மணிரத்னம் தயாரிக்கும் படத்தில், ஜீ.வி.பிரகாஷுடன் இணைந்து விக்ரம் பிரபு நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்னத்திடம் அசோஸியேட்டாகப் பணியாற்றியவர் தனசேகரன். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் திரைக்கதையை, தனசேகரனுடன் இணைந்து மணிரத்னம் எழுதியுள்ளார். மேலும், மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார் மணிரத்னம். ‘96’ படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா, இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில், ஜீ.வி.பிரகாஷின் சகோதரியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். மணிரத்னம் தயாரித்து, இயக்கிய ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் அருண் விஜய் ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், மறுபடியும் மணிரத்னம் தயாரிப்பில் நடிக்கிறார். இந்தப் படத்தில் தற்போது விக்ரம் பிரபுவும் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கலாம் என்கிறார்கள். இந்தப் படத்தைப்…

ரஜினிக்கு ஜோடியாகும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்தப் படத்தில், சிம்ரன் மற்றும் த்ரிஷா இருவரும் ரஜினிக்கு ஜோடியாக நடித்தனர். த்ரிஷா ரஜினியின் மனைவியாகவும், சிம்ரன் ரஜினி மேல் காதல் வயப்படுபவராகவும் நடித்தனர். சிம்ரன், த்ரிஷா இருவருமே ரஜினியுடன் இணைந்து நடித்த முதல் படம் இது. பேட்ட’ படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் ரஜினி. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறது என்று தகவல்கள் உலா வருகின்றன. இந்தப் படத்துக்கான முன்தயாரிப்புப் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். ‘பேட்ட’ படத்துக்கு அனிருத் இசையமைத்தார். அதுதான் அவர் இசையமைத்த முதல் ரஜினி படம். ‘பேட்ட’ படத்தின் பாடல்கள்…

ஆர்யாவின் திருமணம் நம்ப முடியாத தருணம்

ஆர்யாவின் திருமணம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் விஷால். தமிழ் சினிமாவில் ஆர்யாவும் விஷாலும் நெருக்கமான நண்பர்கள். இருவரும் பல வருடங்களாகத் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால், இவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள், யாரைத் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பெரிய விவாதமே நடைபெற்று வந்தது. இந்நிலையில், விஷால் - ஆர்யா இருவருமே திடீரென தங்கள் திருமணச் செய்தியை அறிவித்தனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த அனிஷா ரெட்டியைத் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கடந்த பொங்கல் தினத்தன்று இன்ஸ்டாகிராமில் அறிவித்தார் விஷால். அனிஷா ரெட்டி, ‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப் படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்தவர். அதேபோல், ஆர்யாவும் சயிஷாவும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக இந்த மாதத் தொடக்கத்தில் இருந்தே செய்திகள் வெளியாகின. ஆனால், இருவரும் மவுனம் சாதித்த நிலையில், காதலர் தினத்தன்று இந்தத் தகவலை ட்விட்டரில்…

மூன்று தலைமுறையாக இந்திய விமானப்படை சேவை

பாகிஸ்தான் பிடியில் இருக்கும் இந்திய விமானப்படையை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்று நாடு முழுக்க சமூக ஊடங்களில் மக்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள். யார் இந்த அபிநந்தன்? விங் கமாண்டர் அபிநந்தன் குறித்த சில முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். எந்த மாவட்டத்தை சேர்ந்தவர் அபிநந்தன்? திருவண்ணமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள திருப்பனமூர்தான், அபிநந்தன் குடும்பத்தின் பூர்வீக கிராமம். அபிநந்தனின் பெற்றோர் தற்போது சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள விமானப்படை அதிகாரிகளுக்கான குடியிருப்பில் வசித்து வருகின்றனர். அபிநந்தனின் சகோதரி ஒருவர் வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அபிநந்தனுக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்திய விமானப்படையில் எப்போது சேர்ந்தார்? விங் கமாண்டர் அபிநந்தன் கோவையிலுள்ள சைனிக் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். இந்திய…

மதுரை தொகுதியில் களமிறங்கும் பிரேமலதா?

மதுரை மக்களவைத் தொகுதியில் தேமுதிக சார்பில் பிரேமலதா போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள் ளன. இதனால் உற்சாகமடைந்துள்ள கட்சியினர், தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் முக்கியக் கட்சிகளான திமுக, அதிமுகவில் செல்வாக்கு மிக்க தலைவர்களாகத் திகழ்ந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பின் நடைபெறும் மக்களவைத் தேர்தல் என்பதால் மிகவும் முக்கியத் துவம் வாய்ந்த தேர்தலாக உள்ளது. அதிமுக அணியில் பாமக, பாஜக இடம்பெற்றுள்ள நிலையில் தேமுதிகவையும் இழுக்க பாஜக சார்பில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதேபோல், திமுக அணியில் சேருமாறு திருநாவுக்கரசர், மு.க.ஸ்டாலின் ஆகியோர் விஜயகாந்தின் உடல் நலம் விசாரிப்பதுபோல் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தேமுதிகவை தங்கள் அணிக்கு இழுப்பதில் அதிமுக, திமுக இடையே போட்டி நிலவுகிறது. தேமுதிக கேட்கும் சீட்களை வழங்க இரு அணிகளும் தயங்கும் நிலையில், 40 தொகுதிகளிலும் தேமுதிக தலைமை…

22 சீட்டுகளுக்காக அணு ஆயுதப் போர்ப் பதற்றம்

இதற்காக கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பாவின் பேச்சை பாகிஸ்தான் பிரதமர் இம்ரானின் கானின் பிடிஐ கட்சி மேற்கோள் காட்டியுள்ளது. முன்னதாக, பாலகோட் தாக்குதலால் மோடி அலை அபாரமாக வீசுவதாகவும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளதாகவும் எடியூரப்பா தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர், "ஒவ்வொரு நாளும் பாஜகவுக்கு ஆதரவான சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. காற்று பாஜகவின் பக்கம் வீசுகிறது. பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடங்களை மோடி அழித்துள்ளார். இது நாடு முழுவதும் மோடி ஆதரவு அலையை உருவாக்கியுள்ளது. இதன் தாக்கம் வர இருக்கும் மக்களவைத் தேர்தலில் தெரியும். இதனால், மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் 28 தொகுதிகளில் 22-ல் பாஜகவுக்கு வெற்றி கிடைக்கும் என்று பேசியிருந்தார்". ராணுவ தாக்குதல்களை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துவதாக பாஜக மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் சூழலில்…

அபிநந்தனை நாளை விடுவிக்கிறோம்: இம்ரான் கான்

அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்களில் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக நேற்று, பாகிஸ்தான் இந்திய எல்லையில் தாக்குதலில் ஈடுபட்டது. அப்போது பாகிஸ்தானின் எப்-16 ரக விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதற்கிடையே பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் சென்ற இந்திய மிக் ரக விமானங்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது. விமானத்தில் இருந்த தமிழக விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். விமானி அபிநந்தனை இந்தியாவுக்கு பத்திரமாக அழைத்துவர வேண்டும் என்று உலகம் முழுவதும் குரல்கள் எழுந்தன. இதுதொடர்பான ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்டாகின. இருநாடுகள் இடையே பதற்றம் சூழ்ந்த நிலையில் அதனை தணிக்கும் முயற்சியில் உலக நாடுகள்…

வடகொரியா அமெரிக்கா பேச்சு வார்த்தைகள் தோல்வி : சிறப்பு மலர்

வடகொரிய அதிபர் மதிய விருந்தில் பங்கேற்காது வெளியேறினார்.. அமெரிக்க அதிபர் பத்திரிகையாளர் மாநாட்டை நடத்திவிட்டு வோஷிங்டன் டி.சி. நோக்கி பறந்தார்.. மேலும் முயற்சிக்க வேண்டும்.. அமெரிக்கர்கள் நினைத்தபடி காரியங்கள் நடக்கவில்லை.. வடகொரிய அதிபரின் உடல் மொழி மிகவும் மோசமான நிலையில் இருந்தது.. நாடு திரும்பி பேச்சுக்களில் ஈடுபட்ட யாரையாவது கூண்டில் ஏற்றுவாரோ தெரியாத நிலை.. அவர் இயல்புக்கு மாறான ஆபத்தான நபர் என்பதை கோபமான அவர் முகம் காட்டியது.. இது குறித்த விபரமான சிறப்பு மலர் தமிழில் காண்க.. மிக விரைவான மதிப்பீடு.. கிடைத்தற்கரிய தகவல்கள்.. அலைகள் 28.02.2019 வியாழன்