ஜனாதிபதி படுகொலை – பாதுகாப்பு உயரதிகாரி கைது!

கரீபியன் பெருங்கடல் நாடான ஹைட்டியின் ஜனாதிபதி ஜோவனேல் மாய்ஸ் படுகொலை தொடா்பாக, மேலும் ஒரு பாதுகாப்பு உயரதிகாரி கைது செய்யப்பட்டுள்ளாா். இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: ஜோவனேல் மாய்ஸ் படுகொலையில் தொடா்புடையதாகக் கூறி, தலைமை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வகித்த ஜீன் லகுவேல் சிவிலை பொலிஸாா் கைது செய்தனா். எனினும், இந்தக் கைது நடவடிக்கைக்கு அரசியல் உள்நோக்கம் உள்ளதாக அவரசு வழக்குரைஞா் குற்றம் சாட்டியுள்ளாா் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஜோவனேல் மாய்ஸும் (53) அவரது இல்லத்தில் கடந்த 6 ஆம் திகதி நள்ளிரவு படுகொலை செய்யப்பட்டாா். இந்தப் படுகொலை தொடா்பாக கொலம்பியா ராணுவத்தின் முன்னாள் வீரா்கள் 15 போ், அமெரிக்க குடியுரிமை பெற்ற 2 ஹைட்டி நாட்டவா்கள், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினா், பொலிஸார், முன்னாள் அரசு அதிகாரிகள் உள்பட 24…

உலகின் மிகப் பாரிய நீல மாணிக்கம் இலங்கையில் கண்டுபிடிப்பு

உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீல மாணிக்கம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரத்தினங்களின் நகரமான இலங்கையின் இரத்தினபுரி நகரத்தில் வீடொன்றின் கொல்லைப்புறத்தில் எதேச்சையாக இக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். கூலித் தொழிலாளி ஒருவர் மூலம் தனது வீட்டில் கிணறு ஒன்றிற்காக தோண்டியபோது, இக்கல் கண்டுபிடிக்கப்பட்டதாக தனது முழுப் பெயரை வெளியிடாத கமகே என அழைக்கப்படும் குறித்த கல்லின் உரிமையாளர் பிபிசி செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார். மிக மெல்லிய இளம் நீல நிறத்தில் காணப்படும் இக்கல், சர்வதேச சந்தையில் 100 மில்லியன் டொலர் (ரூ. 2,000 கோடி) வரையான பெறுமதியை கொண்டது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன் எடை 510 கிலோகிராம் (2.5 மில்லியன் கரட்) என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட நீல மாணிக்கம் எனும் பொருள்பட "Serendipity Sapphire" ("செரண்டிபிட்டி சபையர்") என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு நாயகியாகும் ராஷ்மிகா?

சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக ராஷ்மிகாவை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். புதுமுக இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் உருவான தெலுங்குத் திரைப்படம் 'ஜாதி ரத்னாலு'. முழு நீள நகைச்சுவைத் திரைப்படமான இதில் நவீன் போலிஷெட்டி, ப்ரியதர்ஷினி, ராகுல் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தயாரிப்புச் செலவை விடப் பல மடங்கு அதிகமாக வசூல் செய்து சாதனையும் படைத்தது. தற்போது அனுதீப் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளது உறுதியாகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்தப் படம் உருவாகிறது. இதன் மூலம் சிவகார்த்திகேயன் தெலுங்கிலும் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனத் தெரிகிறது. இந்த ஆண்டு இறுதியிலேயே இதன் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளது…

இன்னும் நூறு உலக விருதுகள் உன் வீட்டுக் கதவைத் தட்டும்

இன்னும் நூறு உலக விருதுகள் உன் வீட்டுக் கதவைத் தட்டும் என்று தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு பாரதிராஜா வாழ்த்தியுள்ளார். இந்தியத் திரையுலகில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் தனுஷ். தற்போது 'தி க்ரே மேன்' என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இன்று (ஜூலை 28) தனுஷின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டுப் பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "திரையில் தோன்றும் ஒருசில கதாபாத்திரங்கள் நம்மையும் அறியாமல் நமக்குள் ஊடுருவி நம் உணர்வோடு, உறவோடு பின்னப்பட்டதாய் அமைந்துவிடும். ஆனால், கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நபரின் உண்மையான குணநலன்கள் நிஜ வாழ்க்கையில் முற்றிலும் நேர்மாறாக இருப்பதைக் கண்டு நாம் அதிர்ச்சியில் உறைந்துவிடுவதுண்டு. நிஜ வாழ்க்கையில் எப்படியோ, அதைத் திரையிலும் பிரதிபலிப்பவர்கள்…

திறமையை நிரூபிக்க ஆசைப்படுகிறேன்: யோகி பாபு

எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் எனது திறமையை நிரூபிக்க ஆசைப்படுகிறேன் என்று யோகி பாபு தெரிவித்துள்ளார். கரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட பொருளாதார இழப்புக்கு உதவுவதற்காக 'நவரசா' ஆந்தாலஜி தயாராகி உள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி வெளியாகவுள்ளது. 'நவரசா' ஆந்தாலஜியில் உள்ள நவரசங்களை வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். இதில் நகைச்சுவையை மையப்படுத்தி உருவாகியுள்ள படத்தை ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். 'சம்மர் ஆஃப் 92' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் யோகி பாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'நவரசா' ஆந்தாலஜியில் நடித்திருப்பது குறித்து யோகி பாபு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "சிரிப்பை வரவழைக்கும் காமெடி கதாபாத்திரங்கள் மிக வலிமையானவை. அத்தனை எளிதில் அனைவரும் செய்துவிட முடியாதது. ஆனாலும், பன்முகத்தன்மை கொண்ட பாத்திரங்களில் அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தும் குணச்சித்திர…

தோழி இறந்தது தெரியாத நிலையில் யாஷிகா ஆனந்த்..

நடிகை யாஷிகா ஆனந்த் சென்னை கிழக்கு கடற்கரையில் வேகமாக கார் ஓட்டி விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார். அதே காரில் பயணித்த யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவனி தூக்கி வீசப்பட்டு பலியானார். யாஷிகாவுக்கு இடுப்பு எலும்பும், கால் எலும்பும் முறிந்துள்ளது. வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. எலும்பு முறிவை சரிசெய்ய அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. சில தினங்கள் கழித்து மீண்டும் அறுவை சிகிச்சை நடக்க உள்ளது. இதுகுறித்து யாஷிகாவின் தங்கை ஓஷேன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழுதபடி வெளியிட்டுள்ள வீடியோவில், “யாஷிகாவுக்கு ஒரு அறுவை சிகிச்சை கடவுள் செயலால் வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆனால் அவருக்கு இன்னும் நிறைய எலும்பு முறிவுகள் இருப்பதால் அதற்காக மேலும் அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். எனவே இன்னும் நிறைய அறுவை சிகிச்சைகள்…

ஓ.டி.டி.யில் ரிலீசாகும் முன் இணையத்தில் வெளியாகி பரபரப்பு

தியேட்டரில் வெளியாகும் படங்களை முதல் நாளே திருட்டுத்தனமாக படம் பிடித்து இணையதளங்களில் வெளியிடும் வழக்கம் இருந்து வந்தது. தயாரிப்பாளர்கள் சங்கம் பல கட்ட முயற்சி எடுத்தும் தடுக்க முடியவில்லை. தற்போது கொரோனா ஊரடங்கில் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் படங்களையும், உடனுக்குடன் திருட்டு இணைய தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இந்த மோசடிகளை மிஞ்சும் வகையில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாவதற்கு 4 நாட்களுக்கு முன்பே ‘மிமி' என்ற இந்தி படம் முழுவதுமாக திருட்டு இணையதளத்தில் வெளியாகி திரையுலகினரை அதிர வைத்துள்ளது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பங்கஜ் திரிபாதி, கிரிதி சனோன் ஆகியோர் நடித்துள்ளனர். லட்சுமண் உடேகர் இயக்கி உள்ளார். வருகிற 30-ந் தேதி ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று அறிவித்த நிலையில் தற்போது படம் இணையதளத்தில் கசிந்துள்ளது. இதனால் வேறு வழியின்றி உடனடியாக ஓ.டி.டி.யில் படத்தை ரிலீஸ் செய்து…

காதலரை பிரியும் எமி ஜாக்சன்?

தமிழில் மதராச பட்டினம் படத்தில் அறிமுகமான எமிஜாக்சன் முன்னணி நடிகையாக உயர்ந்தார். விக்ரமுடன் தாண்டம், ஐ, தனுசுடன் தங்க மகன், விஜய்யுடன் தெறி, உதய நிதியின் கெத்து, ரஜினிகாந்துடன் 2.0, பிரபுதேவாவுடன் தேவி ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். எமி ஜாக்சனும், இங்கிலாந்து தொழில் அதிபர் ஜார்ஜ் பனயிட்டோவும் காதலித்து நெருங்கி பழகினர். இதில் எமிஜாக்சன் கர்ப்பமானார். இதையடுத்து இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 2019-ல் எமிஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆனட்ரியேஸ் என்று பெயர் வைத்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜார்ஜ் பனயிட்டோவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட அனைத்து படங்களையும் திடீரென்று நீக்கி உள்ளார். இதையடுத்து இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக தகவல்…