பலி எண்ணிக்கை 96 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு 96 பேர் பலியாகினர். 70,000க்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்தோனேசியாவில் வெள்ளிக்கிழமை இரவு 6.2. ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நாட்டின் சுலவேசி தீவில் மாமுஜு மற்றும் அண்டை மாவட்டமான மஜெகே ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடுகளும், கட்டிடங்களும் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 96 பேர் பலியாகி உள்ளனர். 70,000க்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்து 23க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று இந்தோனேசிய தேசிய பேரிடர் மேலாண்மை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தோனேசியாவில் ஜனவரி 14ஆம் தேதியிலிருந்து கடுமையான மழை பெய்து வருவதால், நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2004ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிலுள்ள சுமத்ரா தீவில் 9.3 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்…

எம்ஜிஆர் 104-வது பிறந்த நாளில் மோடி புகழஞ்சலி !

வறுமையை ஒழிக்க பலமுயற்சிகளை மேற்கொண்டவர் எம்ஜிஆர்'' என்று அவரின் 104-வது பிறந்த நாளில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாளான இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் எம்ஜிஆரின் சிலைக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 1917 இல் பிறந்த எம்.ஜி.ஆர், 1950களிலேயே தமிழ் சினிமாவின் புரட்சி நடிகராக பிரபலமாக அறியப்பட்டார். சி.என்.அண்ணாதுரை தலைமையிலான திமுகவில் சேர்ந்து தமிழக அரசியல் வானில் மின்னியவர் எம்ஜிஆர். அண்ணா இறந்த பின்னர் அப்போதைய திமுக தலைவரான மு.கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து 1972 ஆம் ஆண்டில் அவர் தனது சொந்தக்…

ஜல்லிக்கட்டுப் போட்டி யோகேஸ்வரன் நினைவாகப் பரிசு : லாரன்ஸ்

ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு யோகேஸ்வரன் நினைவாகப் பரிசு வழங்கவுள்ளதாக லாரன்ஸ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், சிராவயல், பெரியகலையம்புத்தூர் உள்ளிட்ட பல ஊர்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் காளைகளை அடங்கிய வீரர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முக்கியமானவர் லாரன்ஸ். தற்போது நடைபெற்று வரும் போட்டிகள் குறித்து லாரன்ஸ் தனது ட்விட்டர் பதிவில், "இதுவரை தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்றுச் சிறந்த வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்ட திருநாவுக்கரசு, விஜய், கார்த்திக், கண்ணன் ஆகியோருக்கும் மற்றும் சிறந்த காளைகளுக்காகப் பரிசுகள் வாங்கிய சந்தோஷ், ஜி.ஆர்.கார்த்திக் ஆகியோருக்கும் மற்றும் பங்கு பெற்ற அனைவருக்கும், இனிமேல் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெறப்போகும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார் லாரன்ஸ். இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுப்…

உடல்ரீதியான கேலிகளை எதிர்கொண்டேன்

‘டைட்டானிக்’ படம் வெளியான பிறகு தான் அதிகளவில் உடல்ரீதியாக கேலி செய்யப்பட்டதாக நடிகை கேட் வின்ஸ்லெட் கூறியுள்ளார். 1997ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான படம் ‘டைட்டானிக்’. இப்படம் 1912ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை அடிப்படையாகக் கொண்டு உருவான படம். உலகம் முழுவதும் பிரம்மாண்ட வெற்றி பெற்ற இப்படம் 11 ஆஸ்கர் விருதுகளைக் குவித்தது. இப்படத்தில் நடித்த லியார்னாடோ டிகாப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட் இருவரும் பெரும் புகழை அடைந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ஆன்லைன் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட ‘டைட்டானிக்’ பட நாயகி கேட் வின்ஸ்லேட் இப்படத்தின் மூலம் கிடைத்த புகழால் தனக்கு கிடைத்த அவமானங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘டைட்டானிக்’ வெளியான பிறகு என்னை நானே பாதுகாத்துக் கொள்ளும் நிலைக்கு…

பிக் பாஸ் சீசன் 4 வெற்றியாளராக ஆரி தேர்வு

பிக் பாஸ் சீசன் 4 வெற்றியாளராக ஆரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2017-ம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பி வந்தது விஜய் டிவி. ஆனால், இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தலால் அக்டோபர் மாதத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த ஆண்டும் கமலே தொகுப்பாளராக பணிபுரிந்தார். இந்த ஆண்டு ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சோம், கேப்ரில்லா, அர்ச்சனா, சுசித்ரா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் ஆஜீத் ஆகியோர் போட்டியாளர்களாகப் பங்கேற்றார்கள். ஒவ்வொரு வாரத்துக்கு இடையிலும் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வந்தார்கள். இறுதிப் போட்டியில் ஆரி, பாலா, ரியோ, சோம் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் இடம்பெற்றனர். இன்று (ஜனவரி 17)…

இந்தியில் ‘ரீமேக்’ ஆகும் விஜய்யின் ‘மாஸ்டர்’

தமிழில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ‘ரீமேக்’ செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்கனவே லாரன்சின் காஞ்சனா படம் அக்‌ஷய்குமார் நடிக்க லட்சுமி என்ற பெயரில் இந்தியில் வெளியானது. நயன்தாராவின் கோலமாவு கோகிலா படம் குட்லெக் ஜெர்ரி என்ற பெயரில் இந்தியில் தயாராகிறது. இதில் நயன்தாரா கதாபாத்திரத்தில் மறைந்த நடிகை ஶ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். கார்த்தி நடித்த கைதி, விஜய்சேதுபதியின் விக்ரம் வேதா ஆகிய படங்களும் இந்தியில் தயாராகின்றன. ஶ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா, முனீஸ்காந்த் ஆகியோர் நடித்து 2017-ல் வெளியான மாநகரம் படத்தையும் இந்தியில் ரீமேக் செய்கின்றனர். இதில் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த வரிசையில் பொங்கலுக்கு திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற விஜய்யின் மாஸ்டர் படமும் இந்தியில் ‘ரீமேக்’ ஆக உள்ளதாக அறிவித்து உள்ளனர். இதில் விஜய் கதாபாத்திரத்தில்…

2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்-அமைச்சர் பழனிசாமி

2 நாள் பயணமாக முதல்-அமைச்சர் பழனிசாமி டெல்லி புறப்பட்டார். பிரதமர் மோடியை நாளை காலை சந்திக்கிறார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்திருந்தது. அந்த கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்றும் அ.தி.மு.க. தரப்பில் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் அவர் சென்றார். அவருடன் தலைமை செயலாளர் க.சண்முகம், முதல்-அமைச்சரின் செயலாளர்கள் சாய்குமார், செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் செல்கிறார்கள். மதியம் 2.45 மணிக்கு விமானம் டெல்லியை சென்றடைகிறது. பின்னர் அங்கிருந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓய்வெடுக்கிறார். இரவு 7.30 மணிக்கு உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது இல்லத்தில் முதல்-அமைச்சர்…

2021 மார்ச் ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டுக்கு முன்னர்

மார்ச் மாதம் நடைபெற உள்ள ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டுக்கு முன்னர் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதற்காக புதிய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் எதிர்வரும் 2 மாத காலப்பகுதியினுள் இந்த ஆணைக்குழு நியமிக்கப்படும். ஜனாதிபதியினால் இது தொடர்பான நியமனம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார். நல்லாட்சி அரசாங்கம் இணக்கம் வெளியிட்ட இணை அனுசரணை யோசனையில் இருந்து விலகுவதாக கடந்த ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தின் போது அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. புதிய ஆணைக்குழு நியமிப்பதன் ஊடாக மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசாங்கம் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாக…