நிர்பயாவுக்கு நீதி கிடைத்துவிட்டது

2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் டெல்லி திஹார் சிறையில் இன்று காலை 5.30 மணிக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டதன் மூலம் என் மகள் நிர்பயாவுக்கு நீதி கிடைத்திருக்கிறது என்று நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்தார் கடந்த 2012-ம் ஆண்டில் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி குற்றவாளிகள் 4 பேரும் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு, சீராய்வு மனு ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குற்றவாளிகள்…

மன அழுத்தத்திலிருந்து மீண்டு வந்த அனுபவம் நடிகை நமீதா

மன அழுத்தத்திலிருந்து தான் மீண்டு வந்த அனுபவம் குறித்து நடிகை நமீதா பகிர்ந்துள்ளார். ‘எங்கள் அண்ணா’ திரைப்படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நமீதா. அடுத்த சில வருடங்கள் பல வெற்றிப் படங்களில் நடித்து, தமிழின் முன்னணிக் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தார். அவ்வப்போது தெலுங்கிலும் நடித்து வந்தார். 2010க்குப் பிறகு நமீதா நடிப்பது படிப்படியாகக் குறைந்தது. அவரது உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். 2017ஆம் ஆண்டு தனது காதலர் வீரேந்திராவை மணந்தார். 2019ஆம் வருடம் பாஜகவில் இணைந்தார். கடந்த 10 ஆண்டுகளில் வெறும் 7 படங்களில் மட்டுமே நமீதா நடித்துள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பதிவின் தமிழாக்கம் பின்வருமாறு: "அன்று / இன்று இடது பக்கம் நான் கருப்பு…

அமைதி காக்கும் ‘ஜகமே தந்திரம்’ படக்குழு

ஓடிடி வெளியீடு தொடர்பாக பரவும் வதந்தி தொடர்பாக, 'ஜகமே தந்திரம்' படக்குழு அமைதி காத்து வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும், சில காட்சிகளை ராஜஸ்தான், மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளிலும் படமாக்கியுள்ளனர். லண்டனில் பெரும்பாலான காட்சிகளைப் படமாக்கியிருப்பதால், படத்துக்கு பெரும் பொருட்செலவு ஆகியுள்ளது. இதனால் பல ஓடிடி நிறுவனங்கள் பேசியும், திரையரங்க வெளியீட்டுக்கு முன்னிலை கொடுத்துவந்தது. ஆனால், திடீரென்று நேற்று (ஜனவரி 30) மாலையிலிருந்து 'ஜகமே தந்திரம்' திரைப்படம் நெட்…

சங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

இயக்குனர் சங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை படைத்த திரைப்படம் எந்திரன். நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்தின் 2வது பாகமும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதற்கிடையில் எந்திரன் திரைப்படம் வெளியானது முதலாகவே அந்த படத்தின் கதை குறித்த சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வந்தன. எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தான் எழுதிய ஜூகிபா என்ற கதையை எந்திரன் என்ற பெயரில் இயக்குனர் சங்கர் படமாக்கிவிட்டதாகவும், தனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடனின் வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குனர் ஷங்கர் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்ததால்,…

சூரிக்கு ‘அப்பா’வாக நடிக்கிறார் விஜய் சேதுபதி!

தற்போதைய கதாநாயகர்களில் விஜய் சேதுபதி முற்றிலும் மாறுபட்டவர். கதாநாயகனாக நடிப்பதுடன் வித்தியாசமான வேடங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார். ‘தென் மேற்கு பருவக்காற்று’ படத்தில் சராசரி கதாநாயகனாக அறிமுகமான இவர், படத்துக்கு படம் வளர்ந்து வந்த நிலையில், ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தில், வயதான ‘அப்பா’ வேடத்தில் நடித்தார். விஜய் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘மாஸ்டர்’ படத்தில், வில்லனாக நடித்தார். இதைத்தொடர்ந்து அவர் மேலும் ஒரு படத்தில், ‘அப்பா’ வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க, வெற்றிமாறன் டைரக்டு செய்கிறார். சூரிக்கு ‘அப்பா’வாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் அப்பா வேடத்தில், முதலில் டைரக்டர் பாரதிராஜா நடிப்பதாக இருந்தார். படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. அதில் கலந்து கொள்ள பாரதிராஜாவும் ஊட்டிக்கு சென்றார். அங்கு…

சசிகலா டிஸ்சார்ஜ், பயணம் செய்யும் காரில் அதிமுக கொடி

கொரோனா தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பெங்களூரு சிறையில் கடந்த 4 ஆண்டுகளாக இருந்த சசிகலா, கடந்த 27-ந் தேதி விடுதலை ஆனார். அந்தநேரம் கொரோனா பாதிப்பு காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஆஸ்பத்திரியில் இருந்த சசிகலாவிடம், சிறைத்துறை நிர்வாகத்தின் சார்பில் அதிகாரிகள் நேரடியாக சென்று, விடுதலை செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினர். இந்தநிலையில் சசிகலா, கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்தார்.இதையடுத்து, இன்று சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஒரு வாரம்தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற டாக்டர்களின் அறிவுரையின்படி, பெங்களூருவிலேயே ஒரு வீட்டில் ஒரு வாரம் தங்கி சசிகலா ஓய்வெடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வெளியே வந்த சசிகலா, செல்லும் காரில் அதிமுக கொடி கட்டப்பட்டுள்ளது.