தீபாவளியன்று வெளியாகிறது மாஸ்டர் பட டீசர்

தீபாவளியன்று மாஸ்டர் பட டீசர் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படத்தின் வெளியீடு, கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி போனது. தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதால், மாஸ்டர் படத்தின் டீசர், டிரைலர் எப்போது வெளியாகும் என விஜய்யின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் “மாஸ்டர்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளி தினத்தன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

டிகர் விஜய்யின் மாஸ்டர் பட பற்றிய முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படத்தின் வெளியீடு, கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி போனது. தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதால், மாஸ்டர் படத்தின் டீசர், டிரைலர் எப்போது வெளியாகும் என விஜய்யின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இதுவரையிலான காத்திருப்பு முடிந்தது, வாத்தி வருகிறார் என்ற வாசகத்துடன் பட தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் இன்று மாலை 6 மணிக்கு பட வெளியீட்டு தேதி அல்லது டீசர், டிரைலர் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts