அலைகள் வாராந்த பழமொழிகள் 01.01.2021

01. நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, நீங்கள் எங்கே போக இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியமான விடயம். 02. அடுத்த பத்தாண்டுகளில் நீங்கள் எங்கே இருக்கப்போகிறீர்கள் ? இப்போது தெரியாவிட்டால் எங்கே போவதென்று தெரியாது பேருந்து நிலையத்தில் நின்றவன் கதைதான். 03. நீங்கள் முதலாவது அடியை வைக்க முன் எங்கே போகிறீர்கள் என்பதை அறிந்திருக்க வேண்டும். 04. எப்போதுமே ஓர் இலக்கு நிர்ணயிக்கப்படும்வரை எதுவுமே நடைபெறுவதில்லை. 05. உயிர்வாழ காற்று எப்படி முக்கியமோ அதுபோல வெற்றிக்கு இலக்கு முக்கியம். 06. வெற்றி பெற்ற யாருமே இலக்கு குருட்டுத்தனமாக வெற்றி பெற்றதில்லை. 07. நீங்கள் செய்யும் காரியம் உங்களை முழுமையாக ஆட்கொள்ளவில்லை என்றால் நீங்கள் எதையும் சாதிக்கும் இடத்தில் இல்லை என்பதே அர்த்தம். 08. வெற்றிக்கு இதய பூர்வமான முயற்சி தேவை. எந்தவொரு வேலையின் மீது உங்களுக்கு…

நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் 2021 புத்தாண்டு பிறந்தது

நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலிய நாட்டில் 2021 புத்தாண்டு பிறந்தது.வாணவேடிக்கையுடன் பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலிய நாட்டில் 2021 புத்தாண்டு பிறந்தது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணியளவில் சிட்னியில் உள்ள துறைமுக பாலப் பகுதியில் வாணவேடிக்கை நடைபெற்றது. கொரோனா தொற்று அபாயம் காரணமாக மக்கள் அப்பகுதியில் திரளாகக் கூடி நேரில் காண்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2021 புத்தாண்டை வரவேற்று வாண வேடிக்கையுடன் பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். சிட்னி, மெல்போன் போன்ற நகரங்கள் வண்ணவிளக்குகளால் ஜொலிக்கிறது. உலகிலேயே இரண்டாவது நாடாக ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சிட்னி நகரம் அடங்கிய நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதல்வர் கிளாடிஸ் பெரிஜிக்லியான், சிட்னி நகரமையப் பகுதியில் வசிப்பவர்கள் புத்தாண்டைக் கொண்டாட தலா 10 விருந்தினர்களை அழைத்துக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் இப்பகுதிக்கு வருவதற்கு முன்கூட்டியே அனுமதி…

ரஜினி குறித்து பாரதிராஜா உருக்கம்

ரஜினியின் அரசியல் முடிவு தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். டிசம்பர் 31-ம் தேதி தனது கட்சியின் தொடக்க நாளை அறிவிப்பதாக இருந்தார் ரஜினி. ஆனால், 'அண்ணாத்த' படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருந்த அவருக்கு திடீரென்று ரத்த அழுத்த மாற்றம் ஏற்பட்டது. இதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு சென்னை திரும்பினார் ரஜினி. அப்போது மருத்துவர்கள் பல்வேறு விஷயங்களை அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசியல் வருகை இல்லை என்பதை அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துவிட்டார் ரஜினி. இதற்காக விடுத்துள்ள நீண்ட அறிக்கையில் தனது சூழ்நிலையை விளக்கிவிட்டு, ரசிகர்களிடமும், தமிழக மக்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார். ரஜினியின் இந்த முடிவுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தற்போது ரஜினியின் முடிவு குறித்து ரஜினியின் நெருங்கிய நண்பரான இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:…

நான் போகிறேன்; வரமாட்டேன்’’ – தமிழருவி மணியன்

இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்கமாட்டேன் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: என் கல்லூரிப் பருவத்தில் நான் காமராஜர் காலடியில் என் அரசியல் வாழ்வைத் தொடங்கினேன். ஐம்பதாண்டுகளுக்கு மேல் நீண்ட என் அரசியல் வேள்வி அப்பழுக்கற்றது. இரண்டு திராவிட கட்சிகளால் தமிழகத்தின் அனைத்து மேலான பொதுவாழ்க்கைப் பண்புகளும் பாழடைந்துவிட்டன. அரசியல் ஊழல் மலிந்த சாக்கடையாகச் சரிந்து விட்டது. சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் சுய ஆதாயம் தேடும் மலினமான பிழைப்புவாதிகளின் புகலிடமாக அரசியல் களம் மாறிவிட்டது. இங்கே நேர்மைக்கும், உண்மைக்கும், ஒழுக்கத்திற்கும் எள்ளளவும் மதிப்பில்லை. நான் ஒருபோதும் அறத்திற்குப் புறம்பாக வாழ்ந்ததில்லை. எவரிடத்தும் எந்த நிலையிலும் கையேந்தியதில்லை. இன்றும் என் வாழ்க்கை…

சித்ரா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்யவில்லை

டிவி நடிகை சித்ரா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொள்ளவில்லை என ஆர்டிஓ 16 பக்க விசாரனை அறிக்கையை போலீசாரிடம் தாக்கல் செய்து உள்ளனர். டிவி நடிகை சித்ரா, கடந்த 9-ம் தேதி பூந்தமல்லி அருகே பழஞ்சூர் தனியார் நட்சத்திர ஓட்டலில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை கடந்த 14-ம் தேதி கைது செய்தனர். பின்னர் இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ கடந்த 14ஆம் தேதி முதல் விசாரணையில் ஈடுபட்டு வந்தார். முதல் நாள் விசாரணையில் சித்ராவின் பெற்றோர், சகோதரி, சகோதரர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, ஹேம்நாத்தின் பெற்றோர் மற்றும் ஹேம்நாத்திடம்…

ரஜினியை கிண்டல் செய்த நடிகை கஸ்தூரி

உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது என்று ரஜினியை நடிகை கஸ்தூரி கிண்டல் செய்துள்ளார். ‘உடல்நிலையை கருத்தில்கொண்டு கட்சியை ஆரம்பித்து அரசியலுக்கு வரமுடியவில்லை’, என நடிகர் ரஜினிகாந்த் நேற்று பரபரப்பு அறிக்கை வெளியிட்டார். இது அவரது அரசியல் வருகையை எதிர்நோக்கியிருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் இருப்பதை அறிந்துகொண்டு ரசிகர்கள் நேற்று மாலை அவரது வீட்டின் முன்பு திரண்டனர். அப்போது ‘அரசியலுக்கு வாங்க தலைவா’, என்று தொடர்ந்து கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், தான் கட்சி தொடங்கவில்லை என ரஜினிகாந்த் நேற்று அதிரடியாக அறிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்புக்கு பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், இதுப்பற்றி நடிகை கஸ்தூரி டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது,''கோடி பண நஷ்டத்தை விட கோடி மனக்கஷ்டம் பெரிது.…

சமூக வலைதளங்களில் நடிகர் விஜயின் மாஸ்டர் பட புதிய போஸ்டர்கள்

மாஸ்டர் படத்தின் புதியப் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது மாநகரம், கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்துக்கு இசை - அனிருத். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாக வேண்டிய மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. சூர்யாவின் சூரரைப் போற்று ஓடிடியில் வெளியான நிலையில், மாஸ்டர் படமும் ஓடிடியில் வெளியாகுமா எனற கேள்வி எழுந்தது. ஆனால் தயாரிப்பு நிறுவனமோ மாஸ்டர் படத்தை திரையரங்கிலே வெளியிட விருப்பம் தெரிவித்தது. இந்நிலையில் ஜனவரி 13 ஆம் தேதி மாஸ்டர் படம் வெளியாகும் என தயாரிப்பு…

பொதுக்குழுவில் டாக்டர் ராமதாஸ் உருக்கம்

தேர்தலில் தனியாக நின்று 25 தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டால் ஏன் கட்சி நடத்த வேண்டும்? என பாட்டாளி மக்கள் கட்சி சிறப்பு பொதுக்குழுவில் கலந்து கொண்டவரிகளிடம் ராமதாஸ் கேள்வி எழுப்பினார். ஆர்எஸ்எஸ் அமைப்பை போல் பாமகவினர் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று சிறப்பு பொதுக்குழுவில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புபொதுக்கூழு கூட்டம் இணைய வழியில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசும் போது கூறியதாவது:- ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கண்ணுக்குத் தெரியமால் தேர்தல் வேலைகளைச் செய்வார்கள். அந்த அமைப்பை போல் பாமகவினர் திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் . கடந்த தேர்தல்களில் பாமக தோல்வி அடைந்தற்கான காரணம், பாமக நிர்வாகிகள் சரிவர தேர்தல் பணியாற்றவில்லை என்பதுதான். பாமக கோட்டையான தர்மபுரியில் அன்புமணி தோல்வியடைந்தற்கு காரணமும் பாமகவினர் சரியாக…