வாடிவாசல்’ வதந்தி: தயாரிப்பாளர் தாணு முற்றுப்புள்ளி

வாடிவாசல்' படம் தொடர்பாக பரவிய வதந்திக்குத் தயாரிப்பாளர் தாணு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 'சூரரைப் போற்று' படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் சூர்யா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருக்கும் எனத் தெரிகிறது. பாண்டிராஜ் படத்தை முடித்துவிட்டு, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'வாடிவாசல்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சூர்யா. தாணு தயாரிக்கவுள்ள இப்படத்தின் அறிவிப்பு முன்பாகவே வெளியிடப்பட்டது. 'வாடிவாசல்' தொடங்கும் முன்பு, சூரி நடிக்கும் படம் மற்றும் தனுஷ் நடிக்கவுள்ள படம் ஆகியவற்றை முடிக்கத் திட்டமிட்டுள்ளார் வெற்றிமாறன். இந்நிலையில், திடீரென்று தாணுவின் தயாரிப்பு நிறுவனமான வி கிரியேஷன்ஸ் பெயரில் போலி ட்விட்டர் கணக்குத் தொடங்கி தவறான தகவலைப் பரப்பினார்கள். இதில் வந்த ட்வீட்களை வைத்து 'வாடிவாசல்' கைவிடப்பட்டது எனத் தகவல் பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி…

நடிகர் விக்ரமின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் நடிகர் விக்ரமின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் இன்று காலை சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம டெலிபோன் ஒன்று வந்து உள்ளது. அதில் நடிகர் விக்ரமின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக கூறி விட்டு போன் துண்டிக்கப்பட்டது. கட்டுப்பாட்டு அறை போலீசார் உடனடியாக உயர் அதிகாரிகளையும், திருவன்மியூர் போலீசாரையும் அச்சுறுத்தும் அழைப்பு குறித்து எச்சரித்தனர். இதை தொடர்ந்து போலீசார் பெசன்ட் நகரில் அமைந்துள்ள நடிகர் விக்ரமின் வீட்டிற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் குழுவினர்(பி.டி.டி.எஸ்) மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. நடிகர் விக்ரம் வீட்டை சோதனை செய்த போலீசார் அந்த அழைப்பு ஒரு வதந்தி என்று கூறினர். வீட்டைச் சுற்றி சந்தேகத்திற்கிடமான பொருள்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிசெய்த பிறகு, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் குழுவினர் அதனை…

மாஸ்டர் படத்தை திரையரங்கில் வெளியிட முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ புதுக்கோட்டையில் புவனேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு சாமி தரிசனம் செய்தார். அதன்பின் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:- திரையரங்கு திறக்கப்படாத கொரோனா காலத்தில் ஓ.டி.டி.யில் நடிகை ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம், அதன்பிறகு நடிகர் சூர்யா நடித்த சூரரைப்போற்று படம் வெளியானது. திரையரங்குகள் திறக்கப்பட்ட பின் ஓ.டி.டி.யில் படங்கள் வெளியாவதை விட திரையரங்குகளில் வெளியிடப்பட வேண்டும் என்பது தான் அரசின் கருத்து. நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படம் ஓ.டி.டி.யில் வெளியிடாமல் திரையரங்கில் வெளியிடப்படும் என அந்த படத்தின் நிறுவனம் முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. தடையை மீறி தி.மு.க. பிரசாரம் கொரோனா ஊரடங்கு இன்னும் முடிவடையவில்லை. சட்டத்தை யாராக இருந்தாலும் மதிக்க வேண்டும். ஆனால் தி.மு.க. சட்டத்தை மதிக்காமல் தடையை மீறி பிரசாரத்தை நடத்துகின்றனர்.…

அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம்

அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசியை விரைவாக வினியோகிக்க பைசர் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. அமெரிக்காவின் பைசர் தடுப்பு மருந்து நிறுவனம் தற்போது 90 சதவீதம் பலனளிக்கும் சக்தி வாய்ந்த கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இதனை ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்வதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் ஒப்புதலுக்காக பைசர் தடுப்பூசி காத்திருக்கிறது. இந்தநிலையில் ஒப்புதல் கிடைத்தவுடன் அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களுக்கும் பிற நாடுகளுக்கும் பைசர் தடுப்பூசியை விரைவாக வினியோகிக்க யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சரக்கு விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பைசர் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் தடுப்பூசிகளுடன் டஜன் கணக்கான சரக்கு விமானங்களும், நூற்றுக்கணக்கான லாரி பயணங்களும் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த வினியோகத் திட்டத்தில் அமெரிக்காவின் மிச்சிகன் மற்றும் விஸ்கான்சின் மாகாணங்களிலும்…

உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 20. 48

மிகுந்த சந்தோசம் உண்டாகட்டும்! சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். லூக்கா 2:10. கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் முகமாக முழுஉலகம் தயாராகிக் கொண்டு வருகிறது. ஆனால் தயாராகிக் கொண்டுவரும் உலகத்தால் உண்மையான மகிழ்ச்சியைக் கொண்டாட முடியதாவாறு பல துன்பங்கள் அழிவுகள் வந்ததையும், வருவதையும் நாம் காணக்கூடியதாக உள்ளது. அண்மைக்காலமாக ஆபிரிக்கா, அரபுதேசங்களில் மதக்கலவரங்களினாலும், பயங்கர வாதிகளின் நடபடிக்கையினாலும் மிகப்பெரிய அழிவை ஏற்பட்டு வருகிறது. இன்னும் பலநாடுகளில் உள்நாட்டுக் கலவரங்கள் உலகத்தை உலுக்கிய வண்ண மாக உள்ளது. இலங்கைத் தமிழ் மக்களுக்கு மாவீரர் தினத்தின் துயரங்களும், துன்பங்களும் மிகவேதனை நிறைந்த வாழ்வை நாளாந்தம் ஞாபகப்படுத்திக் கொண்டு வருகிறது. உற்றாரை இழந்து செய்வது அறியாது கலங்கி நிற்கும் மக்கள் ஒருபக்கம், மரணம் வந்து…