சூரரைப் போற்று’ படத்துக்குப் புகழாரம் சூட்டிய பாரதிராஜா

'சூரரைப் போற்று' படத்தைப் பார்த்துவிட்டு, படக்குழுவினருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார் பாரதிராஜா. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சூரரைப் போற்று'. கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகளில் இல்லாமல், அமேசான் ஓடிடியில் வெளியாகியுள்ளது. திரையுலகினர் பலரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள். 'சூரரைப் போற்று' படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: "சுதா கொங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் இசையில் காற்றாய், கவிதையாய் கனலாய்... காட்சிக்குக் காட்சி என் கண்களைத் தெறிக்கவிட்ட சுதா மற்றும் மார்க்கண்டேயரின் தவப்புதல்வன் சூர்யாவே உங்கள் வியர்வை மழை உங்களைச் சிகரத்தில் சிறகடிக்க வைத்துவிட்டது. வாழ்த்துகள் சூர்யா. அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்." இவ்வாறு இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

சூர்யாவுக்கு தேசிய விருது வழங்கவில்லை என்றால் ?

சூர்யாவுக்கு தேசிய விருது வழங்கவில்லை என்றால் போராடுவேன் என்று தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சூரரைப் போற்று'. கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகளில் இல்லாமல் அமேசான் ஓடிடியில் வெளியாகியுள்ளது. நேற்றிரவு (நவம்பர் 11) முதலே இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். தற்போது 'சூரரைப் போற்று' படத்தைப் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் கூறியிருப்பதாவது: "சூரரைப் போற்று எல்லாத் துறைகளிலும் உயரே பறந்து கொண்டிருக்கிறது! ஒரு கோபக்கார இளைஞனாக, ஆர்வமிகு இளம் தொழிலதிபராக, அன்பான கணவனாக அனைத்துக் காட்சிகளிலும் சூர்யா சிறப்பாக நடித்துள்ளார். அபர்ணா பாலமுரளி தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தான் வரும் ஒவ்வொரும் ஃப்ரேமிலும் தனது முத்திரையைப் பதிக்கிறார். ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை…

ஓடிடி தளத்தில் ‘பூமி’ படக்குழு முடிவு செய்துவிட்டதாகத் தகவல் !

ஓடிடி தளத்தில் வெளியீட்டுத் தேதியை 'பூமி' படக்குழு முடிவு செய்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 'கோமாளி' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தனது அடுத்த படமான 'பூமி' படத்தில் கவனம் செலுத்தி வந்தார் ஜெயம் ரவி. சுஜாதா விஜயகுமார் தயாரித்து வரும் இந்தப் படம் ஜெயம் ரவியின் 25-வது படமாகும். மே 1-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு, பின்பு கரோனா கரோனா அச்சுறுத்தலால் பின்வாங்கியது. அதனைத் தொடர்ந்து, 'பூமி' படத்தை ஓடிடி வெளியீட்டுக்குக் கைப்பற்ற பல்வேறு முன்னணி ஓடிடி தளங்கள் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், எதுவுமே இறுதிக்கட்டத்தை எட்டவில்லை. தீபாவளிக்கு சன் டிவியில் நேரடி ஒளிபரப்பு மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி வெளியீடு எனத் திட்டமிட்டார்கள். அந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இறுதியில், 'பூமி' படம் தீபாவளி வெளியீட்டுத் திட்டத்திலிருந்து பின்வாங்கியது. அதனைத் தொடர்ந்து பொங்கல் வெளியீட்டுக்குப்…

தீபாவளியன்று வெளியாகிறது மாஸ்டர் பட டீசர்

தீபாவளியன்று மாஸ்டர் பட டீசர் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படத்தின் வெளியீடு, கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி போனது. தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதால், மாஸ்டர் படத்தின் டீசர், டிரைலர் எப்போது வெளியாகும் என விஜய்யின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் “மாஸ்டர்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளி தினத்தன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகர் விஜய்யின் மாஸ்டர் பட பற்றிய முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம்…

சுரேன் ராகவன் இன்று பேசுவதை அன்றே செய்திருக்கலாம்

“சுரேன் ராகவன் எம்பி வடக்கு மாகாண அளுநராக இருந்தவர். இப்பொழுது பல விடயங்கள் பேசுகின்றார். குறிப்பாக அரசியல் கைதிகளின் விடுதலை பற்றிப் பேசுகின்றார். நீதி அமைச்சரை கேள்வி கேட்கின்றார். அவர் இதையெல்லாம் வடக்கு ஆளுநராக மைத்திரிபால சிறிசேனவின் ஆளாக இருந்த போது செய்திருக்கலாம். அதை விடுத்து இப்போது இன்னொரு ஆட்சி வந்த பிறகு பேசுவது தமிழ் மக்களை ஏமாற்றும் வேலையாகவே நாங்கள் பார்க்கின்றோம்.” இவ்வாறு வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிலித்தார். மேலும், “சுரேன் ராகவன் இந்த அரசாங்கத்தினுடைய நியமன எம்பி. எங்களுடைய அரசியல் கைதிகள் விடுதலை பற்றி ஒரு எம்பி என்ற வகையில் அவர் பேசலாம். ஆனால் எங்களுடைய வடக்கு கிழக்கு சார்ந்த தமிழ் தேசியம் சார்ந்த அரசியல்வாதிகளுடைய செயற்பாட்டை விமர்சிப்பதற்கு எந்தவித உரிமையும் கிடையாது. அவர் அவ்வாறு பேசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவர்…