யோகி பாபு – சந்தானம் இணைந்து நடிக்கிறார்கள்

சந்தானம் கதாநாயகனாக நடிக்க, அவருடன் முதல்முறையாக யோகி பாபு இணைந்து நடிக்கிறார். இந்த படத்துக்கு, `டகால்டி' என்று தமாசாக பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. சந்தானம் ஜோடியாக பிரபல வங்காள பட நாயகி ரித்திகா சென் நடிக்கிறார். தெலுங்கு பட உலகின் பிரபல நடிகர் பிரம்மானந்தம், ராதாரவி, மனோபாலா, நமோநாராயணன், ஸ்டண்ட் சில்வா, சந்தானபாரதி, பிரபல இந்தி நடிகர் தருண் அரோரா ஆகியோரும் நடிக்கிறார்கள். டைரக்டர் ஷங்கரிடம் பல படங்களில் அசோசியேட் டைரக்டராக பணிபுரிந்த விஜய் ஆனந்த் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டராக அறிமுகம் ஆகிறார். குழந்தைகள் நல மருத்துவரும், வினியோகஸ்தருமான எஸ்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். சென்னை, திருக்கழுக்குன்றம், திருச்செந்தூர், கடப்பா, மும்பை, புனே, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது. இம்மாதம், படம் திரைக்கு வர இருக்கிறது.

பொங்கலுக்கு முன்னால் வருகிறது ரஜினியின் தர்பார்

‘பேட்ட‘ படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். கதாநாயகியாக நயன்தாரா மற்றும் பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, சுமன், ஹரிஷ் உத்தமன், ஆனந்தராஜ், ஸ்ரீமன் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். தாதாக்களுக்கும் போலீசுக்கும் நடக்கும் மோதலை மையமாக வைத்து எடுத்துள்ளனர். பெரும்பகுதி படப்பிடிப்பு வட மாநிலங்களில் நடந்துள்ளது. படத்தில் அனிருத் இசையில் விவேக் எழுதி எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ‘சும்மா கிழி நான்தாண்டா இனிமேலு வந்து நின்னா தர்பாரு’ என்ற அரசியல் பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. தர்பார் படம் ஜனவரி 15-ந்தேதி பொங்கல் பண்டிகையில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம்…

ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் பிரியாமணி?

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் சினிமா படமாக தயாராகிறது. ஏ.எல்.விஜய் இயக்குகிறார். இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். அவரது முதல் தோற்றம் சமீபத்தில் வெளியானது. அதை சிலர் பாராட்டினர். இன்னும் சிலர் தோற்றம் ஜெயலலிதா போல் இல்லை என்று விமர்சித்தனர். எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்தசாமி நடிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. கதாபாத்திரத்துக்காக விஷேசமாக பரதநாட்டியம் கற்று கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் சசிகலா வேடத்தில் நடிக்க பிரியாமணியிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் தமிழில் கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். பருத்தி வீரன் படத்துக்காக தேசிய விருதும் பெற்றார். திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பிரியாமணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக…

என்னிடம் தவறாக நடக்க முயன்றனர் – நடிகை நித்யா மேனன்

தமிழ், மலையாள பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நித்யா மேனன் அடுத்து ஜெயலலிதா வாழ்க்கை கதையான த அயன்லேடி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதற்காக விசேஷ பயிற்சிகள் எடுத்து வருகிறார். அவர் கூறியதாவது:- “நான் எதிர்பாராமல் சினிமாவில் அறிமுகமானேன். ஒன்றிரண்டு படங்களில் நடித்து விட்டு போய் விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அதன் மீது விருப்பம் அதிகமாகி திரை பயணத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. சினிமா துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது என்பது சரியல்ல. எல்லா துறைகளிலுமே பாதுகாப்பின்மை இருக்கிறது. என் வாழ்க்கையில் பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு ஏற்பட்டது இல்லை. சிலர் என்னிடம் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முயற்சி செய்தனர். நான் விட்டு கொடுக்கவில்லை. பெண்களிடம் கவுரவமாக நடக்க கற்றுக்கொள் என்று கடுமையாக சொன்னேன்.…

குற்றவாளிகள் சுட்டுக்கொலை; நடந்தது என்ன?

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சம்சாபாத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி 26 வயதான பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் லாரி ஓட்டுனர்கள், உதவியாளர்கள் உள்பட நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அவர் மூச்சு திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்வுகளை ஏற்படுத்தியது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டுமென நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் குரல் கொடுத்தனர். குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வலியுறுத்தி, பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும், மாணவர்களும் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணி நடத்தினர். இந்த கொடூர சம்பவத்தில் சிவா,சென்ன கேசவலு, முகமது ஆரிப், நவீன் ஆகிய நான்கு பேரையும் சம்பவம் நிகழ்ந்த 48 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். இந்த குற்ற வழக்கை விசாரிக்க…

உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19. 49

தேவ அன்பின் அடையாளங்கள். சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.ஈஈ ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல், நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத்தந்தருளி இவ்வளவாய் அன்புகூர்ந்தார். (புதிய மொழிபெயர்ப்பு: அழிந்துபோகமல் நித்திய வாழ்வை அடையும்படிக்கு) யோவான் 3:16. தேவ அன்பின் அடையாளங்களை இந்த கிறிஸ்மஸ் காலங்களில் நாம் அறிந்து கொள்வோம். இதனை விளங்கிக் கொள்ளும்படியாக இங்கு நடந்த ஓர் சம்பவத்தை முதலில் விபரிக்கிறேன். சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நண்பனை பார்வையிட சென்றேன். அவருக்கு முழங்காலில் வலி. நடப்பதற்கு முடியாமல் கஸ்டப்படுவார். ஒருநாள் அதனைப் பொறுக்க முடியாமல் வேதனைப்படுவதைப் பார்த்த அவரின் மனைவி கணவனிடம், அப்பா எனது முழங்காலை உங்களுக்கு மாற்றமுடியுமா என கேட்டார்கள். அது தனது இருதயத்திற்கு மிகவும் வேதனையாக இருந்ததாக அந்த கணவர்…

ஜனாதிபதியை சந்திக்கவுள்ள வடகிழக்கு ஆயர்கள்

வடக்கு, கிழக்கு மாகாணங் களின் ஆயர்கள் நால்வரும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவை எதிர்வரும் 13ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து அரவணைத்துச் செல்ல விருப்பம் காட்டுவது எமக்குத் தெரிகிறது. அவர் ஊடகங்களுக்கு வழங்குகின்ற பேட்டிகளும் அறிக்கை களும் அதனை உறுதிப்படுத்துகின்றன. இது தொடர்பாக நாட்டிலுள்ள கிறிஸ்தவ சமூகத்தினரும் அவருக்கு நல்ல பல ஆலோசனை வழங்க சித்தமாயுள்ளோம். அதற்காக எங்களை சந்திப்பதற்கு எதிர்வரும் 13ஆம் திகதி நேரம் ஒதுக்கியுள்ளார். அன்றைய தினம் நாம் எதிர் நோக்குகின்ற பல பிரச்சனைகளை அவரிடம் முன்வைப்போம். நல்ல பலன் கிடைக்குமென நம்புகிறோம். எமது துாதுக்குழுவுக்கு யாழ்ப்பாணமாவட்ட…

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சஜித்தை நியமிக்க முடிவு

சஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. இன்று (05) கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழு ஏகமனதாக இதீர்மானத்தை எடுத்துள்ளது. இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாஸவை எதிர்க் கட்சித் தலைவராக நியமிப்பதற்கான தனது ஆதரவை வழங்கியுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தவில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்கவும் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் யார் என பெரும்பான்மை எம்.பிக்களைக் கொண்ட, ஐக்கிய தேசிய கட்சிக்குள் எழுந்த சர்ச்சைக்கு முடிவு எட்டப்பட்டுள்ளது. ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு, அக்கட்சியின் செயலாளர் அகில…

அரசியல் யாப்பின் மூலம் தீர்வையடைவதே நோக்கம்

சுயமரியாதையுடனும் தன்மானத்துடனும் தமிழர்கள் தமது நாளாந்த பிரச்சினைகள் தொடர்பில் தாமே முடிவெடுக்கக் கூடிய வகையிலான ஒரு அரசியல் தீர்வை அரசியல் யாப்பொன்றின் மூலமாக அடைவதே எமது நோக்கமாகும். இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவரிடம் வலியுறுத்தினார். இலங்கை, மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டேபில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை நேற்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இச் சந்திப்பில் சம்மந்தன் மேலும் கூறியதாவது, நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகள் விடுத்திருந்த தேர்தல் பகிஷ்கரிப்பு மற்றும் தமிழ் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களித்தல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே தமிழ் மக்களை சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாக கோரியிருந்தது. அத்தகைய கோரிக்கையை தமிழ் மக்கள்…