ஜனாதிபதியை சந்திக்கவுள்ள வடகிழக்கு ஆயர்கள்

வடக்கு, கிழக்கு மாகாணங் களின் ஆயர்கள் நால்வரும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவை எதிர்வரும் 13ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்தார்.

அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்,

புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து அரவணைத்துச் செல்ல விருப்பம் காட்டுவது எமக்குத் தெரிகிறது. அவர் ஊடகங்களுக்கு வழங்குகின்ற பேட்டிகளும் அறிக்கை களும் அதனை உறுதிப்படுத்துகின்றன.

இது தொடர்பாக நாட்டிலுள்ள கிறிஸ்தவ சமூகத்தினரும் அவருக்கு நல்ல பல ஆலோசனை வழங்க சித்தமாயுள்ளோம். அதற்காக எங்களை சந்திப்பதற்கு எதிர்வரும் 13ஆம் திகதி நேரம் ஒதுக்கியுள்ளார்.

அன்றைய தினம் நாம் எதிர் நோக்குகின்ற பல பிரச்சனைகளை அவரிடம் முன்வைப்போம். நல்ல பலன் கிடைக்குமென நம்புகிறோம். எமது துாதுக்குழுவுக்கு யாழ்ப்பாணமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமை தாங்குவார் என்றார்.

Related posts