கோத்தபய ராஜபக்ச பாகிஸ்தான் செல்கிறார்

இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள கோத்தபய ராஜபக்ச, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்குச் செல்ல உள்ளார். இதனை இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த வாரம் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் பொதுஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்று கடந்த திங்கள்கிழமை அதிபராகப் பொறுப்பேற்றார். புதிய அதிபர் கோத்தபய ராஜகபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவரை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று இலங்கை சென்று புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சவைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது பிரதமர் மோடி, இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்த செய்தியையும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் கோத்தபய ராஜபக்சவிடம் தெரிவித்தார்.…

கோவா பட விழா இன்று ரஜினிகாந்துக்கு விருது

கோவாவில் இன்று மாலை நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி விருது வழங்கப்படுகிறது. இந்திய அரசின் திரைப்படத்துறை சார்பில் கோவாவில் 50-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா இன்று (20-ந்தேதி) முதல் 28-ந்தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் இந்திய சினிமா துறையில் பெரிய பங்களிப்பு செய்தவர்களை கவுரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. 50-வது ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவின் கவுரவ விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுகிறது. இந்திய சினிமா துறைக்கு ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக செய்துவரும் சேவையை கவுரவிக்கும் வகையில் அவருக்கு ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி விருது வழங்கப்படும் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் டுவிட்டரில் தெரிவித்து இருந்தார். இன்று…

ரஜினி கமல்ஹாசன் யார் முதல்வர் வேட்பாளர்?

ரஜினிகாந்த்- கமல்ஹாசன் இணைந்தால் யார் முதல்வர் வேட்பாளர்? என்பது குறித்து நடிகை ஸ்ரீப்ரியா கூறி உள்ளார். ரஜினியும், கமலும் சினிமாவில் அறிமுகமானது முதலே நண்பர்கள். அரசியலிலும் அப்படி இணைவார்களா? என்ற எதிர்பார்ப்பு தொடக்கம் முதலே இருந்து வருகிறது. கமல் பெற்ற வாக்கு சதவீதம், ரஜினிக்கு இருக்கும் நிர்வாகிகள் பலம், கிராமப்புற செல்வாக்கு இவற்றை எல்லாம் கணக்கு போட்டு பார்த்த இருவருக்கும் பொதுவான நண்பர்கள், இருவரும் இணைந்தால் நிச்சயம் ஆட்சியை பிடிக்கலாம் என்ற ரீதியில் ஆலோசனை கூறி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் ரஜினி ஆதரவுடன் கமல் களம் இறங்க தயாராகி விட்டார் என்கிறார்கள். கமலுக்கு ஆதரவு தெரிவிப்பது மூலம் தனது மன்றத்துக்கு இருக்கும் மக்கள் ஆதரவை தெரிந்து கொள்ள ரஜினிக்கும் நல்ல வாய்ப்பாக அமையும். இதை ரஜினி- கமல் கூட்டணிக்கான தொடக்கமாகவே அரசியல் விமர்சகர்கள் பார்க்கிறார்கள். கமலுக்கு தேர்தலை…

உடல் எடை குறைந்த நமீதா

நடிகை நமீதா கடும் உடற்பயிற்சிகள் மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் எடையை கணிசமாக குறைத்து இருக்கிறார். தமிழில் ‘எங்கள் அண்ணா’ படத்தில் அறிமுகமாகி ஏய், சாணக்யா, பம்பர கண்ணாலே, ஆணை, அழகிய தமிழ் மகன், பில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நமீதா தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் தோன்றினார். ரசிகர்களை மச்சான்ஸ் என்று அழைத்து அவர்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்தார். கடந்த சில வருடங்களாக நமீதாவுக்கு உடல் எடை கூடியது. திருமணமும் செய்து கொண்டார். இதனால் படங்களில் நடிக்கவில்லை. தற்போது மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர கடும் உடற்பயிற்சிகள் மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் எடையை கணிசமாக குறைத்து இருக்கிறார். சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற நமீதாவின் எடை குறைந்த அழகிய தோற்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் புதிய…

பகவதி அம்மன் வேடத்தில் நயன்தாராவிரதம் இருந்து நடிக்கிறார்

மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடிகை நயன்தாரா பகவதி அம்மனாக நடிக்கிறார். தமிழ் பட உலகில் தொடர்ந்து நம்பர்-1 இடத்தில் இருக்கும் நயன்தாரா வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய் ஜோடியாக நடித்த பிகில் தீபாவளிக்கு திரைக்கு வந்தது. ரஜினிகாந்துடன் நடித்துள்ள தர்பார் பொங்கலுக்கு வெளியாகிறது. அடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் என்ற புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை எல்.கே.ஜி. படத்தில் நடித்து பிரபலமான ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார். கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் மகிமைகளை சொல்லும் பக்தி படமாக தயாராகிறது என்றும் நயன்தாரா பகவதி அம்மனாக நடிக்கிறார் என்றும் ஆர்.ஜே. பாலாஜி கூறினார். ஏற்கனவே தெலுங்கில் தயாராகி தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதை வேடத்தில்…

சிறிலங்காவில் இப்போது நடைபெற்ற பரபரப்பான மாற்றங்களின் தொகுப்பு..!

ஜனாதிபதி செயலணியில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை 500 ஆக குறைக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது செயலாளரான பி.பி. ஜெயசுந்தரவிற்கு உத்தரவிட்டுள்ளார். தற்போது ஜனாதிபதி செயலணியில் சுமார் 2500 பேர் வரை கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ------ ஜனாதிபதி செயலணியில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை 500 ஆக குறைக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது செயலாளரான பி.பி. ஜெயசுந்தரவிற்கு உத்தரவிட்டுள்ளார். தற்போது ஜனாதிபதி செயலணியில் சுமார் 2500 பேர் வரை கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ------ அனைத்து ஆளுனர்களையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம்உத்தரவு விடுத்துள்ளத. நேற்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தினால் அனைத்து ஆளுனர்களுக்கும் பதவி விலகுமாறு அறிவுறுத்திய உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் முன்னாள் ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் தெளிவுபடுத்துகையில், 13 ஆவது அரசியலமைப்பு திருத்த்தின் படி ஜனாதிபதி தனது விருப்புக்கும்…

பதவியை இராஜிநாமா செய்தார் ரணில்!

ரணில் விக்ரமசிங்க தனது பிரதமர் பதவியை இராஜிநாமா செய்துள்ளதாகவும், இராஜிநாமாக் கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவுக்கும் அனுப்பி வைத்துள்ளார். புதிய ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­ப­க்ஷ­வுக்கு புதிய காபந்து அர­சாங்­க­மொன்றை அமைப்­ப­தற்கு இட­ம­ளிக்கும் வகையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று புதன்­கி­ழமை பிர­தமர் பத­வியை இரா­ஜி­னாமா செய்துள்ளார். மேலும் இன்­றைய தினம் அடுத்­த­கட்ட நட­வ­டிக்கை தொடர்பில் ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­ப­க்ஷ­வுடன் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். இதே­வேளை இன்­றைய தினம் ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­பக்ஷ புதிய பிர­தமர் தலை­மை­யி­லான 15 அமைச்­சர்­களைக் கொண்ட ஒரு காபந்து அர­சாங்­கத்தை அமைக்கவுள்ளார். சட்டம் ஒழுங்கு நிதி நீதி வெளி­வி­வ­காரம் உள்­ளிட்ட 15 அமைச்­சுக்கள் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளன. அவற்­றுக்கே அமைச்­சர்கள் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர். கடந்த திங்­கட்­கி­ழமை புதிய ஜனா­தி­ப­தி­யாக கோத்­தாபய ராஜ­பக்ஷ பத­வி­யேற்­றதன் பின்னர் புதிய அர­சாங்கம் அமைக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. எனினும் ஐக்­கிய…