பதவியை இராஜிநாமா செய்தார் ரணில்!

ரணில் விக்ரமசிங்க தனது பிரதமர் பதவியை இராஜிநாமா செய்துள்ளதாகவும், இராஜிநாமாக் கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

புதிய ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­ப­க்ஷ­வுக்கு புதிய காபந்து அர­சாங்­க­மொன்றை அமைப்­ப­தற்கு இட­ம­ளிக்கும் வகையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று புதன்­கி­ழமை பிர­தமர் பத­வியை இரா­ஜி­னாமா செய்துள்ளார்.

மேலும் இன்­றைய தினம் அடுத்­த­கட்ட நட­வ­டிக்கை தொடர்பில் ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­ப­க்ஷ­வுடன் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.

இதே­வேளை இன்­றைய தினம் ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­பக்ஷ புதிய பிர­தமர் தலை­மை­யி­லான 15 அமைச்­சர்­களைக் கொண்ட ஒரு காபந்து அர­சாங்­கத்தை அமைக்கவுள்ளார்.

சட்டம் ஒழுங்கு நிதி நீதி வெளி­வி­வ­காரம் உள்­ளிட்ட 15 அமைச்­சுக்கள் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளன. அவற்­றுக்கே அமைச்­சர்கள் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர்.

கடந்த திங்­கட்­கி­ழமை புதிய ஜனா­தி­ப­தி­யாக கோத்­தாபய ராஜ­பக்ஷ பத­வி­யேற்­றதன் பின்னர் புதிய அர­சாங்கம் அமைக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. எனினும் ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­ர­ம­சிங்க இன்றைய தினம் பிரதமர் பதவியில் இருந்து இராஜிநாமா செய்துள்ள நிலையில், புதிய அரசாங்கம் அமைக்கப்படும் சாத்தியம் உள்ளது.

எனினும் பல்­வேறு தரப்­பி­னரு ம் ரணில் விக்­ர­ம­சிங்க பிர­தமர் பத­வியை இரா­ஜி­னாமா செய்து புதிய அர­சாங்கம் அமைக்க இட­ம­ளிக்­க­வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் சபா­நா­ய­கரும் பிர­த­மரும் எதிர்க்­கட்சி தலை­வரும் இது தொடர்பில் பேச்­சு­வார்த்­தையும் நடத்­தி­யி­ருந்­தனர்.

குறித்த சந்­திப்பில் அர­சாங்­கத்தை முன்­கொண்டு செல்­வது தொடர்­பிலும் பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்­கான நட­வ­டிக்­கைகள் குறித்தும் ஆராயப்பட்­டுள்­ளது.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நாட்டின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி கோத்­தாபய ராஜபக்ஷ அமோக வெற்றியீட்டியதைடுத்து நாட்டில் புதிய அரசியல் நிலைமை தோன்றியுள்ள நிலையில் ஆளும் கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்ர்கள் தமது அமைச்சுப்பொறுப்புக்களை ஒன்றன்பின் ஒன்றாக இராஜிநாமா செய்து வந்த நிலையில் இன்றையதினம் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க இராஜிநாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts