போராட்டம் நிச்சயம் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும்

கத்தியின்றி, இத்தமின்றி, தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக முன்னெடுக்கப்படும் போராட்டம் நிச்சயம் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரைட் பியூச்சர் இன்டனேசனல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று காலை (30) பளை நல்வாழ்வு மேம்பாட்டு நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ஆயுதம் ஏந்தியவர்களின் தன் நம்பிக்கையின் காரணமாகவே முப்பது வருடங்கள் அவர்களால் அரசாங்கத்தை புறக்கணித்து வாழ முடிந்ததாக தெரிவித்தார். அதற்கு அப்பால் இன்று மக்களை எவ்வாறு அபிவிருத்திப் பணிகளில் பங்கெடுக்கச் செய்ய முடியும் என்பதே தமிழ் மக்கள் கூட்டணியின் பிரதான நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களின் பின்னணியில் தென்படக்கூடிய தமிழ் மக்களின் எதிர்கால நெருக்கடிகளை புரிந்து அதற்கு ஏற்றவாறு காய்களை நகர்த்த…

நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உத்தியோகத்தர் கடத்தப்பட்டமை தொடர்பில் அந்த தூதரகம் வசமுள்ள அனைத்து தகவல்களும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இரண்டு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் 25 ஆம் திகதி நவம்பர் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டதாக ஸ்ரீஸ் இன்ஃபோ என்ற இணையத்தளம் இலங்கையில் இயங்கும் இணையத்தளம் ஒன்றை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டது. இந்த ஊடக செய்தி தொடர்பாக சுவிட்ஸர்லாந்தின் வெளிவிவகார அமைச்சு அளித்த தகவலின் படி இலங்கையில் உள்ள தூதரக தகவல்களை வெளியிடுமாறு கோரி அடையாளம் தெரியாத சிலர் குறித்த அதிகாரியை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சுவிட்சர்லாந்து அரசாங்கம் இலங்கை அதிகாரிகளை கேட்டுக்கொண்டது. அதற்கமைவாக குற்றபுலனாய்வு…

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா-சசிகுமாரின் புதிய படம் பூஜை

ஜோதிகா வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். திருமணத்துக்கு பிறகு அவரது நடிப்பில் 36 வயதினிலே, காற்றின் மொழி, நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட், செக்க சிவந்த வானம் ஆகிய படங்கள் வந்தன. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் தம்பி அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்துக்கு தணிக்கை குழுவினர் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர். பொன்மகள் வந்தாள் என்ற படத்திலும் நடிக்கிறார். இதில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். அடுத்து கத்துகுட்டி படத்தை எடுத்து பிரபலமான இரா.சரவணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படத்தில் ஜோதிகா நடிக்கிறார். இந்த படத்தில் சசிகுமாரும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். சசிகுமார் அண்ணனாகவும் ஜோதிகா தங்கையாகவும் நடிக்கின்றனர். சமுத்திரக்கனி, சூரி, கலையரசன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். கிராமத்து பின்னணியில்…

நான், பெண்களை இழிவுபடுத்தவில்லை

நடிகர் பாக்கியராஜ் நேரில் ஆஜராக தமிழ்நாடு மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. சென்னையில் நடந்த பட விழாவில் பிரபல இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் பேசும்போது பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவர், ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது. பெண்கள் எச்சரிக்கையாக இருந்தால் தவறு நடக்க வாய்ப்பில்லை. பொள்ளாச்சி சம்பவத்துக்கு ஆண்களை மட்டும் குறை சொல்ல முடியாது. பெண்ணின் பலவீனத்தை அவன் பயன்படுத்தி கொண்டான். கள்ளக்காதலுக்காக புருஷனை, குழந்தையை கொல்லும் சம்பவங்கள் நடக்கின்றன என்றெல்லாம் பேசினார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் “பாலியல் பலாத்காரத்துக்கு பெண்கள் மீது பழி போட வேண்டாம். ஊசி, முள், சேலை எல்லாம் பல தடவை சொல்லப்பட்டு விட்டது. இந்த சிந்தனையால் பல பெண்கள் இறந்துள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார். இதற்கிடையே, ஆந்திர…

‘இருட்டு’ புதுமாதிரியான பேய் படம் – சுந்தர்.சி

சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்க இருட்டு என்ற பெயரில் புதிய பேய் படம் தயாராகி உள்ளது. வி.இசட் துரை இயக்கி உள்ளார். சாக்‌ஷி சவுத்ரி, வி.டிவி. கணேஷ், விமலா ராமன், யோகிபாபு, சாய் தன்சிகா ஆகியோரும் நடித்துள்ளனர். கிரிஷ் இசையமைத்துள்ளார். படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது சுந்தர்.சி கூறியதாவது:- “நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்னொரு இயக்குனர் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளேன். நான் செய்யும் படங்கள் எல்லாவற்றிலும் மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற விஷயங்கள் இருக்கும். முழுக்க பயப்படுகிற மாதிரி ஒரு படம் எடுக்கலாம் என்று முடிவு செய்து இந்த படத்தை உருவாக்கி உள்ளோம். துரை திறமையான இயக்குனர். இருட்டு படத்தை சிறப்பாக எடுத்துள்ளார். இந்தப்படம் புதுமாதிரியான பேய் படமாக இருக்கும். நானே பார்த்து மிரண்டு விட்டேன். ஒவ்வொரு காட்சியும் சீட் நுனிக்கு இழுக்கும். படத்தில் முத்த காட்சியும்…