இந்தியன் 2-வில் 4 ஹீரோயின்கள்

இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அடுத்த மாதம் முதல் மீண்டும் துவங்குவது உறுதியாகியுள்ளது. முதல் பாகத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடம் ஏற்றிருந்தார். இதில் ஒரு கமல்ஹாசன் தான். வயதான தோற்றத்தில் நடிக்கிறார். அவரது பேரனாக சித்தார்த் நடிக்க இருக்கிறார். காஜல் அகர்வால் ஏற்கனவே ஒப்பந்தமாகிவிட்டார். இந்நிலையில் ரகுல் பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் ஆகிய ஹீரோயின்கள் இந்த படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளனர்.

முதல் பாகத்தில் சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா என 3 ஹீரோயின்கள் நடித்தனர். இதில் 4 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். இதில் சித்தார்த் ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிப்பார் என கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கிறார். அடுத்த மாதம் வெளிநாடுகளில் சில காட்சிகளை படமாக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.

Related posts