பொரு­ளியல் பேரா­சி­ரியர் மு.சின்­னத்­தம்பி கால­மானார்

இந்­திய வம்­சா­வளி மலை­யக சமூ­கத்தின் முதல் பேரா­சி­ரியர் என்ற பெரு­மைக்­கு­ரிய பொரு­ளியல் பேரா­சி­ரியர் மு.சின்­னத்­தம்பி தனது 79 ஆவது வயதில் நேற்று கொழும்பில் கால­மானார். கண்டி மாவட்டம் ரங்­கல எனும் பிர­தே­சத்தில் முத்­து­சாமி –முத்­து­வ­டிவு தம்­ப­தி­க­ளுக்கு பிறந்த இவர், அங்­குள்ள தோட்டப் பாட­சா­லையில் ஆரம்பக் கல்­வி­யைத் ­தொ­டர்ந்தார். இவ­ரது தந்தை தோட்ட வெளிக்­கள உத்­தி­யோ­கத்­த­ராவார். 1948 ஆம் ஆண்டு இவ­ரது குடும்பம் தல­வாக்­கலை கல்­கந்த எனும் பிர­தே­சத்­துக்கு இடம்­பெ­யர்ந்­தது. பின்னர் தல­வாக்­கலை அரச சிரேஷ்ட பாட­சா­லையில் சாதா­ரண தரம் வரை பயின்றார். பின்னர் 1959 இல் தெல்­லிப்­பளை மக­ஜனா கல்­லூ­ரியில் உயர்­தரம் பயின்று 1961 இல் பேரா­தனை பல்க­லைக்­க­ழ­கத்­துக்கு தெரி­வாகி பொரு­ளி­யலை விசேட பாட­மாக தொடர்ந்தார். 1965 இல் உதவி விரி­வு­ரை­யா­ள­ராகும் சந்­தர்ப்பம் கிடைத்­தது. இரண்டு வரு­டங்­களில் நிரந்­தர விரி­வு­ரை­யா­ள­ராகி பின்பு 1969 இல் இங்­கி­லாந்தின் மன்­செஸ்டர்…