நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8ல் வெளியீடு

நடிகர் அஜித்குமார் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ படம் தயாராகியுள்ளது. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படத்தின் தமிழ் பதிப்பாக தயாராகிறது. இதில் பிரச்சினையில் சிக்கும் 3 இளம்பெண்களை காப்பாற்றும் வக்கீல் வேடத்தில் அஜித்குமார் வருகிறார். அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார். சதுரங்க வேட்டை படத்தை எடுத்து பிரபலமான வினோத் இயக்கியுள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. இந்த படத்தை முடித்து விட்டு மீண்டும் போனிகபூர் தயாரிக்கும் இன்னொரு படத்திலும் அவர் நடிக்க உள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அஜித்குமார் கோர்ட்டில் வக்கீலாக வாதாடுவதுபோல் டிரெய்லரில் காட்சிகள் இருந்தன. இந்த நிலையில், நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8ல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கமல்ஹாசன்-ஏ.ஆர். ரகுமான் 19 ஆண்டுகளுக்கு பின்

கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல்ஹாசனும், ஏ.ஆர் ரகுமானும் 19 ஆண்டுகளுக்கு பின் இணைந்துள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு உலக நாயகன் கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் என்ற படம் இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அரசியல்வாதியின் வாழ்க்கையை மையமாக கொண்டு இப்படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது. இந்த சூழலில் அரசியல் கட்சி தொடங்கப்பட்ட பின்னர், இந்தியன் 2 படத்திற்கு பிறகு படங்களில் நடிக்கப் போவதில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார். இந்நிலையில் “தலைவன் இருக்கின்றான்” திரைப்படம் மீண்டும் உயிர்ப்பெற்றுள்ளது. இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் “ ஒன் அண்ட் ஒன்லி கமல்ஹாசனுடன் மீண்டும் இணைந்து மகத்தான பணியாற்றுவதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார். பின்னர் இதனை உறுதிசெய்த கமல்ஹாசன் “ உங்கள் பங்களிப்பால்…

நேபாளத்தில் கனமழை 78 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது. விபத்து சம்பவங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. 40 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்காள். இந்த பேரழிவில் இருந்து மீண்டுவர தங்களுக்கும் உதவும்படி சர்வதேச அமைப்புகளுக்கு நேபாள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. வெள்ளத்தில் சிக்கிய 32 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 31 மாவட்டங்களில் இதுவரையில் 3366 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என நேபாள உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 வருடங்களுக்குள் பிரச்சினைக்கு தீர்வு

தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வானது அடுத்துவரும் இரண்டு வருடங்களுக்குள் பெற்றுக்கொடுக்கப்படும் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் உறுதியளித்தார். 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்துக்கிணங்க அதிகாரப் பகிர்வுடன் அரசியல் தீர்வொன்று பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அது தொடர்பில் தாம் உச்ச அளவில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக கடந்த பல வருடங்களாக கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதும் தற்போதைய அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாத நிலையில், அந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். எனினும், எதிர்வரும் 2 வருடங்களில் அந்த நோக்கத்தை நிறைவேற்றி அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நேற்று வடக்குக்கான விஜயமொன்றை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ். சுன்னாகம் ஸ்கந்தவரோதய வித்தியாலயத்தின் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாகக்…