ஜெயலலிதா வேடத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத்

ஜெயலலிதா வேடத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். ஏ. எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதா வாழ்க்கை சினிமா படமாகிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் நடிப்பது குறித்து கங்கனா ரணாவத் கூறியதாவது:- ஜெயலலிதா வேடத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. இதற்காக அவரது பிரசாரங்களை கேட்கிறேன். உடல் மொழிகள் எனக்கு பொருந்துகிற மாதிரியும் அவர் மாதிரி நடக்கவும் பேசவும் பயிற்சிகள் எடுக்கிறேன். கதாநாயகியாக சாதித்து விட்டு தமிழக அரசியலில் கஷ்டங்களை தாங்கி பெயர் எடுத்தவர் ஜெயலலிதா. அவரை அடக்கவும் வளரவிடாமல் தடுக்கவும் சில தலைவர்கள் முயற்சித்தனர். அதை மீறி முன்னேறி முதல்வராக பதவி வகித்தார். சிறைக்கு போய் வந்தபிறகும் முதல்வர் ஆனார் என்றால் அவர் எவ்வளவு பெரிய தலைவியாக இருக்க வேண்டும்.…

தீபாவளிக்கு விஜய், தனுஷ் படங்கள் மோதல்

தீபாவளிக்கு எந்தெந்த படங்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. விஜய்யின் பிகில் தீபாவளிக்கு வரும் என்று ஏற்கனவே அறிவித்தனர். இப்போது தனுஷ் நடிக்கும் பட்டாசு படத்தையும் தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். 2 பெரிய படங்கள் வருவதால் பரபரப்பும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது. பிகில் படத்தில் விஜய் தந்தை, மகன் என்று இரு வேடங்களில் வருகிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். அட்லி இயக்குகிறார். மகன் விஜய் பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். சென்னையில் கால்பந்து மைதானத்தை அதிக செலவில் அரங்காக அமைத்து படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் சிங்கப்பெண்ணே என்ற பாடலை பாடி உள்ளார். இந்த பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. பெண்களை உயர்வாக சித்தரிக்கும் வரிகள் பாடலில் உள்ளதாகவும் பாராட்டுகள் குவிந்தது. படத்தில் விஜய்யும் சொந்த குரலில் ஒரு பாடலை பாடி…

தமிழ்நாடு ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்..!

45வது தமிழ்நாடு ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளும் நடிகர் அஜித்குமார். சமீப காலமாகவே அஜித்குமார் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த வாரம் கோயம்புத்தூரில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார் அஜித்குமார். கடந்த 28ஆம் தேதி கோயம்புத்தூரில் 45வது தமிழ்நாடு ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியுள்ளது. இதில் அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். நடிகர் அஜித் குமாரும் தற்போது கலந்து கொண்டுள்ளார். வருகிற ஆகஸ்ட் 8 ஆம் தேதி அஜித்குமார் நடித்த ''நேர்கொண்ட பார்வை'' உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக போராட்டம்

அமைச்சு பதவியினை பொறுப்பேற்றுள்ள அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக அஹிம்சை வழியிலான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதுடன், ஜனாதிபதி உட்பட அரசாங்கம் விரைவாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார். ராஜகிரியவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நாடு தொடர்பில் அரசாங்கததிற்கு எவ்வித அக்கறையும் கிடையாது. முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவே பதவி துறந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சு பதவியை வழங்கியுள்ளது. இச்செயற்பாட்டிற்கு எதிராக அஹிம்சை வழியிலான போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் விமான விபத்து; 18 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் இராணுவத்தினருக்கு சொந்தமான சிறிய ரக விமானமொன்று விபத்திற்குள்ளானதில், 18 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான், ராவல்பிண்டிக்கு அருகில் மக்கள் குடியிருப்பு பகுதியிலேயே குறித்த விமானம் இன்று அதிகாலை விபத்திற்குள்ளானதாக, வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்விமானம் விபத்திற்குள்ளாக முன்னதாக வெடித்துள்ளதாக, சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 05 விமானப் பணியாளர்கள் மற்றும் 13 பொதுமக்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரர் கைது

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரானின் உறவினர் ஒருவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். முகமட் அப்துல் காதர் என்பவரே இவ்வாறு கட்டுபொத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கைது செய்யப்பட்ட நபர் சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரானுடன் நுவரெலியாவில் ஆயுத பயிற்சி பெற்றவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட நபர் குறித்து கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளர் இல்லை

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இல்லை என அமைச்சர் பி. ஹெரிசன் தெரிவித்துள்ளார். கட்சியின் உறுப்பினர்கள் சிலர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரை முன்வைத்தாலும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இதுவரையில் அந்த விடயம் தொடர்பில் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஜாஎல பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் சிலர் தமது கட்சியில் சிக்கல் நிலவுவதாக தெரிவித்திருப்பினும் கட்சியில் அவ்வாறு எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.