மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக ..

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து மாற்றப்படுவதாக எழுந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. மின்னணு வாக்கு இயந்திரங்களை வாகனங்களில் ஏற்றிச்செல்வதுபோல் ஊடகங்களில் வெளியான காட்சிகள் உண்மையல்ல என தேர்தல் ஆணையம் தெரிவித்துளளது. மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி நடந்து முடிந்தது. இதனையடுத்து வருகிற மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த சூழலில் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் முறைகேடுக்கு வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றன. இந்நிலையில், தேர்தல் முடிந்து வெளியான கருத்து கணிப்பில் பா.ஜ மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக புகார் வட மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக…

நாட்டில் முழுமையான அமைதி; அன்றாட வாழ்வு இயல்பு நிலை

பாடசாலைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்திருப்பதால், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் அச்சம் கொள்ளத் தேவையில்லை. நாட்டின் எதிர்கால சந்ததியினரின் கல்விச் செயற்பாட்டை சுமுகமாக முன்னெடுக்க சகல பெற்றோரும் தமது பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டும் என இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கோரிக்கை விடுத்தார். இதேவேளை, நாட்டில் தற்போது முழுமையான அமைதி ஏற்பட்டுள்ளதாகவும் மக்களின் அன்றாட வாழ்வு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். கடந்த மூன்று தினங்களாக விடுமுறைக் காலமாகவிருந்தபோதிலும் நாட்டின் எந்தப் பகுதியிலும் எந்தப் பிரச்சினையும் இன்றிச் சுமுகமான நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் வழமைபோன்று தமது அலுவல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். வெசாக் கொண்டாட்டங்களும் எந்தச் சிக்கலுமின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களின் நடமாட்டமும் அதிகரித்துக் காணப்படுகிறது என்றும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார். முப்படையினர் மற்றும் பொலிஸார்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஒரு மாதத்தின் பின்னர்…

பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் (21) ஒரு மாதம் நிறைவு பெறுகிறது. 2009 ஆம் ஆண்டு நிறைவடைந்த உள்நாட்டு யுத்தத்தின் பின்னர், நடத்தப்பட்ட பாரிய தாக்குதல் இதுவாக அமைந்திருந்தது. மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், மூன்று நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சுமார் 257 பேர் உயிரிழந்ததுடன், 500க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர். ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியன்று காலை 8.45க்கு கொழும்பு கொச்சிகடை தேவாலயத்தை இலக்கு வைத்து முதலாவது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலுள்ள தேவாலயங்கள் மீதும், கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதிகளாக கிங்ஸ்பெரி, ஷங்கிரிலா மற்றும் சினமன் கிரேன்ட் ஆகியவற்றின் மீதும் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. காலை 8.45 முதல் 9.30 வரையான குறுகிய காலத்திற்குள்ளேயே இந்த அனைத்து தாக்குதல்களும் நடத்தப்பட்டன. தாக்குதல்…

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

மக்கள் விடுதலை முன்னணியால் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சற்றுமுன்னர் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அலுவலகம் இதனைக் கூறியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இழந்துள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். ------------- முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது. இதன்போது வழக்கை எதிர்வரும் 23ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்போது கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ம் திகதி முதல் ஜூன் மாதம் 02ம் திகதி வரை வைத்திய தேவைக்காக வௌிநாடு செல்ல அனுமதி…