முடிந்தவரை மூடி தான் வைத்திருக்கிறேன்

நடிகைகள் தங்களது கவர்ச்சி படங்களை வெளியிட தயங்குவதில்லை. அது பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகிறது. மல்லுவுட் நடிகை த்ரிஷ்யா ரகுநாத். ஹாப்பி வெட்டிங், மேட்ச் பாக்ஸ் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். உடலை இறுக்கப்பிடித்திருக்கும் ஈரமான உடையில் கிக்காக ஒரு படத்தை வெளியிட்டார். அதை பார்த்து ரசிகர் ஒருவர்,’உங்க இமேஜை நீங்களே ஏன் இப்படி கவர்ச்சி படத்தை வெளியிட்டு கெடுத்துக்கிறீங்க?’ ஒரு சகோதரனாக இதை சொல்கிறேன்’ என குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலடி தந்திருக்கிறார் த்ரிஷ்யா. ‘நான் எல்லாத்தையும் மூடிகிட்டுதான் இருக்கிறேன். இன்னும் ஓப்பனா சொல்லணும்னா, என்னுடைய மார்பகத்தை நான் மூடிக் கொண்டுதான் இருக்கிறேன். அதை நான் வெட்டி எறியமுடியாது. அதெல்லாம் உடலில் இயற்கையாக அமைந்தது. அதை ஒருபோதும் நான் வெளிக்காட்டவில்லை. முடிந்தவரை மூடிக்கொண்டுதான் இருக்கிறேன். தயவு செய்து புரிஞ்சிக்கோங்க.. நீங்கள் பார்க்கும் விதத்தை மாற்றிக்கொள்ளுங்கள்’ என காட்டமாக பதில் அளித்தார்.

பிரே பார் நேசமணி

சமூக வலைத்தளங்களில் ஏதேனும் ஒரு விஷயம் திடீரென்று வைரலாவது உண்டு. சில மாதங்களுக்கு முன்பு பிரதமருக்கு எதிராக ‘கோ பேக் மோடி’யை டிரெண்டிங் ஆக்கினார்கள். அந்த வரிசையில் இப்போது வடிவேலுவின் நகைச்சுவை காட்சியொன்று வைரலாகி உள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் சுத்தியல் படத்தை பதிவிட்டு இதற்கு உங்கள் ஊரில் என்ன பெயர் என்று கேட்டு இருந்தார். அதற்கு தமிழ் இளைஞர் ஒருவர், இதன் பெயர் சுத்தியல். இதை வைத்து அடித்தால் டங் டங் என்று சத்தம் வரும். பெயிண்டிங் காண்டிராக்டர் நேசமணி தலையில் இந்த சுத்தியல் விழுந்ததால் அவர் மண்டை உடைந்தது என்று குறும்புத்தனமாக பதில் அளித்தார். பிரண்ட்ஸ் படத்தில் நேசமணி கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலு தலையில் சுத்தியல் விழுந்த நகைச்சுவை காட்சியை சுட்டிக்காட்டி இதனை அவர் தெரிவித்தார். இந்த பதில்தான் வலைத்தளங்களை தெறிக்கவிட்டு இந்திய அளவில்…

இந்தியாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை

400 கி.மீட்டர் தொலைவில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத குட்டி விமானங்களை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ரஷியாவின் எஸ்.400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை இந்திய விமானப்படைக்கு கொள்முதல் செய்கிறது. சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க கடந்த சில ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஏவுகணைகளை வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியதும் அக்டோபரில் இருதரப்பு இடையே கையெழுத்து ஆனது. ரஷியாவிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை என அமெரிக்கா மிரட்டியது. இருப்பினும் ரூ. 40 ஆயிரம் கோடி மதிப்பில் ரஷியாவிடம் இருந்து ஏவுகணை வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக இருநாடுகள் இடையே கையெழுத்தானது. இப்போது ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்கும்…

இன்றைய முக்கிய இலங்கை செய்திகள் 31..05..2019

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ண தேரர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியதீன் ஆகியோரை பதவி விலக்கும் வரையில் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரப் போவதாக அறிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் இன்று காலை அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். ---- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி ஸஹ்ரான் ஹாசிமின் மடிக்கணினி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். அக்கரைப்பற்று பாலமுனை பிரதேசத்தில் உள்ள கலப்பு ஒன்றில் இருந்து அது மீட்கப்பட்டதாக அவர் கூறினார். ------ நாளை (ஜுன் 01) முதல் கடவுச்சீட்டுக்கான கட்டணத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் பஸன் ரத்நாயக்க தெரிவித்தார். சாதாரண…