விமர்சனம்: டிக் டிக் டிக்

தமிழில் தயாராகியிருக்கும் முதல் விண்வெளி படம். "டிக் டிக் டிக்" ஆகாயத்தில் இருந்து ஒரு விண்கல் பூமியில் விழுந்து நிறைய சேதத்தை ஏற்படுத்துகிறது படத்தின் சினிமா விமர்சனம். ஆகாயத்தில் இருந்து ஒரு விண்கல் பூமியில் விழுந்து நிறைய சேதத்தை ஏற்படுத்துகிறது. அதேபோன்ற மற்றொரு விண்கல்லும் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதை ஜெயப்பிரகாஷ், வின்சென்ட் அசோகன், நிவேதா பெத்துராஜ், ரித்திகா சீனிவாஸ் ஆகியோரை கொண்ட விஞ்ஞானிகள் குழு கண்டுபிடிக்கிறார்கள். அந்த விண்கல் இரண்டு நாட்களில் பூமியை தாக்கும் என்ற நிலையில், அப்படி தாக்கினால் 4 கோடி பேர் உயிர் இழப்பார்கள் என்று விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள். எனவே அதை விண்வெளியிலேயே தகர்த்து அந்த 4 கோடி பேர்களையும் பாதுகாப்பது என்ற முடிவுக்கு வருகிறார்கள், விஞ்ஞானிகள். விண்கல்லை தகர்க்கும் அணு ஆயுதம் ஒரு அன்னிய நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் இருக்கிறது.…

விமர்சனம்: ராஜா ரங்குஸ்கி

‘பர்மா,’ ‘ஜாக்சன் துரை’ படங்களை இயக்கிய தரணிதரன் தற்போது, ‘ராஜா ரங்குஸ்கி’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார்.‘மெட்ரோ’ பட புகழ் ஷிரிஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார். போலீஸ்காரர் சிரிஷ், ரோந்து பணியில் ஒரு வில்லாவில் வசிக்கும் வயதான அனுபமா குமாரிடம் கையெழுத்து பெற்று செல்கிறார். அதே வளாகத்தில் இருக்கும் சாந்தினி மீது சிரிஷுக்கு காதல். சாந்தினியும் சிரிஷை விரும்ப அனுபமா உதவுகிறார். அப்போது சாந்தினியை கொல்லப் போவதாக போனில் ஒருவன் மிரட்டுகிறான். அவரை காப்பாற்ற வில்லாவுக்கு ஓடுகிறார் சிரிஷ். அங்கு சாந்தினிக்கு ஆபத்து இல்லை. ஆனால் அனுபமா கொல்லப்பட்டு கிடக்கிறார். போலீஸ் சந்தேகம் சிரிஷ் பக்கம் திரும்புகிறது. அனுபமா வீட்டில் திருட்டுப்போன பணத்தை சிரிஷ் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றுகின்றனர். தன்னை கொலை சதியில் சிக்க வைத்தவனை சிரிஷ் தேடுகிறார்.…

காங்கோ நாட்டில் வாகனம் மீது எண்ணெய் லாரி மோதல்: 50 பேர் பலி; 100 பேருக்கு தீக்காயம்

காங்கோ நாட்டில் நெடுஞ்சாலையில் வாகனம் ஒன்றின் மீது எண்ணெய் லாரி மோதியதில் 50 பேர் உயிரிழந்தனர். 100 பேர் தீக்காயம் அடைந்துள்ளனர். காங்கோ நாட்டில் கின்சாசா நகரின் மேற்கே 120 கி.மீ. தொலைவில் கிசான்டு நகர் அருகே நெடுஞ்சாலையில் எண்ணெய் லாரி ஒன்று இன்று சென்று கொண்டு இருந்துள்ளது. அதிகளவில் சரக்குகளை ஏற்றி கொண்டு செல்லும் லாரிகள் மற்றும் எண்ணெய் லாரிகள் இந்த நெடுஞ்சாலை வழியே செல்வது வழக்கம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் வாகனம் ஒன்றின் மீது எண்ணெய் லாரி மோதி திடீரென விபத்திற்குள்ளானது. இதனை அடுத்து எழும்பிய நெருப்பு பிழம்புகள் அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவின. இந்த சம்பவத்தில் 50 பேர் உயிரிழந்தனர். 100 பேர் தீக்காயங்களுடன் போராடி வருகின்றனர்.

உறுப்பு தானம் பெற்ற நான்கு பேர் புற்றுநோயால் பாதிப்பு- அதிர்ச்சி காரணம்

ஐரோப்பாவில் ஒரே நபரிடம் இருந்து உறுப்பு தானம் பெற்ற நான்கு பேரும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். அதில் மூன்று பேர் மருத்துவ உதவி பலனளிக்காமல் உயிரிழந்தனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, 53 வயது பெண்மணி ஒருவர் பக்கவாதத்தில் உயிரிழந்த போது அவரின் வெவ்வேறு உறுப்புகள் நான்கு தனித்தனி நபர்களுக்கு மாற்றப்பட்டது. உறுப்பு மாற்ற சிகிச்சையின் போது செய்ய வேண்டிய அனைத்து சோதனைகளையும் செய்துள்ளனர். அதில் உறுப்புகளில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் அவை ஆரோக்யமானவை என்றும் அறிந்த பின்னரே அவர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஆனால் அறுவை சிகிச்சை முடிந்து 16 மாதங்கள் கழித்து அவரிடம் இருந்து நுரையீரலை தானமாகப் பெற்றவர் நுரையீரல் தொடர்பான சிகிச்சைகாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதுதான் அவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது. புற்றுநோய் செல்களை எடுத்து டி.என்.ஏ. ஆராய்ச்சிக்கு உட்படுத்தியபோது…