சிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..

இப்போது கோடம்பாக்கம் சினிமாவில் இரண்டு பிரிவுகள் உண்டு ஒன்று அதை வர்த்தக ரீதியாக அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் சினிமா அடுத்தது வர்த்தகத்தை மேம்படுத்தும் சினிமா. கண்டிப்பாக மிஸ்டர் லோக்கல் அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றுள்ள திரைப்படம்தான். படத்தை பார்த்தபோது மிகவும் கவலையாக இருந்தது. இவ்வளவு பணத்தைப் போட்டு சிறுபிள்ளை விளையாட்டு விளையாடியிருக்கிறார்களே என்ற கவலை யாருக்குத்தான் வராது. 01. பணம் நாசம். 02. நேரம் பரிநாசம் 03. மன உளைச்சல் இவ்வளவு பிரச்சனையும் உண்டு. படத்தின் கதை என்னவென்று பூதக்கண்ணாடி வைத்தாலும் கண்டு பிடிக்கவே முடியாது. நயன்தாரா சிவகார்த்திகேயனை காதலிக்க வேண்டும். இதுதான் உலகப்பெரிய மேட்டர் என்று திரைப்பட இயக்குநர் கருதியிருக்கிறார், பாவம். நயன்தாரா, சிவகார்த்திகேயனின் கால்சீட் கிடைத்தாலே போதும் படம் வர்த்தகமாகிவிடும் என்று நினைத்துள்ளார்கள். அதற்கு பின் படம் எடுக்கும்போது அந்த இடத்திலேயே ஏதோ அலம்பிவிட்டு போனால்…