தடுப்பூசி ஏற்றிக்கொள்ள அச்சப்படத்தேவையில்லை

கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கு அச்சம் கொள்ள தேவையில்லையென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ள அனைவரும் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தற்பொழுது பயன்படுத்தப்படும் தடுப்பூசியினால் பாதிப்பு ஏற்படுவதாக சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்களினால் பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இந்த தடுப்பூசி திட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மக்கள் பெரும்பான்மையினர் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொண்டால் தான் கொரோனா தடுப்புக்கான எமது திட்டத்தை வெற்றி கொள்ள முடியும். சிலர் இந்த திட்டத்திற்கு எதிராக தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் முன்னெடுப்பதை கவனத்தில் கொண்டுள்ளோம். சமூக ஊடகங்களான முகப்புத்தகத்தில் இவ்வாறான கருத்துக்களை பரப்பி…

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த தடை உத்தரவு கோரி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பம் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் சுன்னாகம், காங்கேசன்துறை மற்றும் அச்சுவேலி பொலிஸார் முன்வைத்த விண்ணப்பங்களும் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பமே நிராகரிக்கப்பட்டுள்ளது. பொதுத் தொல்லையை ஏற்படுத்தல், கோவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த விண்ணப்பங்கள் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரால் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன ஜெனிவா மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் நாட்டுக்கு சதி ஏற்படுத்தும் முயற்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் முயற்சிக்கின்றனர் என்று பொலிஸார் நீதிமன்றில் எடுத்துரைத்தனர்.…

ஓ.டி.டி. தளங்களை ஆதரித்த வித்யா பாலன்

கொரோனாவால் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரான புதிய படங்கள் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி வருகின்றன. இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே சூர்யாவின் சூரரை போற்று, விஜய்சேதுபதியின் க./பெ. ரணசிங்கம், ஜெயம் ரவியின் பூமி, நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன், கீர்த்தி சுரேசின் பென்குயின், சந்தானம் நடித்துள்ள பிஸ்கோத்தே உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டன. இந்தியில் 10-க்கும் மேற்பட்ட படங்கள் ஓ.டி.டி.யில் வந்துள்ளன. மலையாளத்தில் மோகன்லால், மீனா நடித்துள்ள திரிஷ்யம் 2 படமும் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது. படங்களை ஓ.டி.டி.யில் வெளியிடுவதை தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்குமார் ஜோடியாக நடித்துள்ள பிரபல இந்தி நடிகை வித்யாபாலன் வரவேற்று உள்ளார். வித்யாபாலன் கூறும்போது, “ஓ.டி.டி. தளங்கள் மீது எனக்கு ஈடுபாடு உண்டு. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும்.…

இந்தியாவிலிருந்து எதிர்வரும் புதன்கிழமை 6 இலட்சம் தடுப்பூசி

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதியான 600,000 பேருக்கான தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். களுத்துறை, வலல்லாவிட்ட பகுதியில் நடைபெற்ற "கிராமத்துடன் உரையாடல்" நிகழ்வின் பங்கேற்ற ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இதில் சுமார் 3 இலட்சம் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். தடுப்பூசி கிடைத்த மறுநாளே அதனை வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, முதற் கட்டமாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் நடவடிக்கையில் முன்னிலையில் உள்ள, வைத்தியர்கள், தாதியர்கள், பொதுச் சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட சுகாதார பிரிவினருக்கும் அதனைத் தொடர்ந்து இப்பணியில் ஈடுபட்டுள்ள இராணவத்தினருக்கும் வழங்கப்படும் எனத் தெரிவித்த அவர், அதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் காணப்படுவோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்டும் என அவர் கூறினார். இந்நடவடிக்கையுடன் இணைந்தவாறு, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில்…

கோட்டாபய ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் நிறைவடையும் இன்றைய நாளில் (18), நாட்டு மக்களுக்கு விசேட உரை... வணக்கம், இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்பு இந்த நாட்டின் 69 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் என்னை உங்கள் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தனர். அன்று எனக்கு பெரும்பான்மையான சிங்கள மக்கள் வாக்களித்தனர் என்பது உண்மை. பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் மற்றும் சித்தாந்தங்களுக்கு முகங்கொடுத்து சிங்கள இனம், எமது மதம், தேசிய வளங்கள் மற்றும் பாரம்பரிய மரபுரிமைகள் அழிவுறும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றது என்ற நியாயமான அச்சம் இருந்ததால் அவர்கள் அணிதிரண்டனர். மக்கள் என்னிடம் முன்வைத்த முக்கிய வேண்டுகோள் 'நாட்டை காப்பாற்றுங்கள்' என்பதாகும். இந்த குறுகிய காலத்தில் மக்கள் கோரியபடி நாட்டைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். மக்கள்…

இந்தியாவின் மிக அழகானவர் தீபிகா படுகோனே..

பிரபலங்கள் பெரும்பாலும் பிராண்டுகளாகக் காணப்படுகிறார்கள். அவர்களின் வேலை, தனிப்பட்ட மற்றும் தொழில்முறை நடத்தை மற்றும் ஊடகங்களில் உள்ள பிம்பம் அவர்களின் 'பிராண்ட் மதிப்புக்கு' குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்க உதவுகின்றன. சமீபத்தில் வெளியான டிஐஏஆர்ஏ ஆராய்ச்சி அறிக்கை, ‘பிரபலங்கள் மனித பிராண்டுகளாக’என்பது குறித்து விரிவான ஆய்வை நடத்தி உள்ளது. டிஐஏஆர்ஏ TIARA என்பது நம்பிக்கை, அடையாளம், கவர்ச்சிகரமான, மரியாதை மற்றும் பிரபலம் ஆகியவற்றின் சுருக்கமாகும். சினிமா, ஆளுமை மற்றும் மனித காரணிகளை உள்ளடக்கிய 64 செயலில் உள்ள பண்புகளில் தரவை ஆய்வு பயன்படுத்துகிறது. இது ஒரு தனித்துவமான ஆராய்ச்சி ஆகும், இதன் கள ஆய்வை புகழ்பெற்ற ஜப்பானிய நிறுவனமான ரகுடெனால் நடத்தி உள்ளது. 23 நகரங்களில் 60,000 நபர்களிடம் விளம்பரங்களில் வரும் 180 பிரபலங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. குறிப்பாக விளம்பரங்களில் பிரபலங்கள் வரும் போது மக்கள் அதை…

மன்னாரில் பூசணிக்காயை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் ஏழை

மன்னார்-நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மடுக்கரை கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட பூசணிக்காய் பயிர்ச்செய்கையினால் அதிக விளைச்சல் கிடைக்கப்பெற்றுள்ள போதும் புசணிக்காயை விற்பனை செய்ய முடியாமல் ஏழை விவசாயி தவித்து வருகிறார். சுமார் 4 ஆயிரம் கிலோ பூசணிக்காயை குறித்த விவசாயி அறுவடை செய்துள்ளார். குறித்த விவசாயிக்கு பாடசாலை செல்லும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். தோட்டச் செய்கையை வாழ் வாதாரத் தொழிலாக செய்து வரும் இவர் ஏற்கனவே கடனைப் பெற்று பூசனி செய்கையை மேற் கொண்டுள்ளார். தனது தோட்டத்தில் விளைந்து அறுவடை செய்து வைத்துள்ள சுமார் 4 ஆயிரம் கிலோ பூசனிக்காயை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றார். நாடு சீராக இருந்த போது ஒரு ஏக்கர் பரப்பளவில் பூசணி பயிர் செய்துள்ளார். நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. அறுவடை செய்யும் நேரத்தில் ´கொரோனா´ வைரஸ் பிரச்சினையால் போக்குவரத்து தடைகள்…