ரியூப் தமிழ் நான்கு மாடி கட்டிடம் இரண்டு வார வளர்ச்சி

ரியூப் தமிழ் ஊடக இல்லம் நான்கு மாடி கட்டிடத்தை அமைக்கும் பணிகள் இரவு பகல் பராமல் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.

தாயகத்தில் உள்ள போரினால் பாதிக்கப்பட்ட இளையோருக்கு சொந்தக் காலில் நின்று பணியாற்ற அமைக்கப்படுகிறது இந்த சர்வதேச தரத்திலான கட்டிடம்.

முதலாவது தளம் கடைத்தொகுதி.. இப்போதே அனைத்து கடைகளும் வாடகைக்கு போய்விட்டன..

இரண்டாவது மாடி.. காணொளி ஊடக தளம்..

மூன்றாவது மாடி.. ரியூப்தமிழ் வானொலி..

நான்காவது மாடி மாநாட்டு மண்டபமும் தங்கும் அறைகளும்..

அடுத்த ஆண்டு ஐந்தாவது மாடி வருகிறது.. புலம் பெயர் இளையோர் தாயக இளையோர் நல்லுறவு மையம்..

போரின் வடுக்களை அகற்றுவோம்..

நாம் வீடு கட்டினோம்.. டாக்டரானோம்.. கார் வாங்கினோம் என்பதில் பெருமை கிடையாது.. நம்மை விட சிறப்பாக நம் தாயக மக்கள் வாழ வழி செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கில் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன.

அலைகள் 30.03.2019

Related posts