இரண்டு நயன்தாராவுக்கும் தொடர்பில்லாத ஐரா

அறம் படத்தை தொடர்ந்து கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கும் படம், ஐரா. இரு வேடங்களில் நயன்தாரா மற்றும் கலையரசன், யோகி பாபு, ஜெயப்பிரகாஷ், மீரா கிருஷ்ணன் நடிக்கின்றனர். இயக்கம், கே.எம்.சர்ஜூன். அவர் கூறியதாவது: லட்சுமி, மா, ஆகிய குறும்படங்களையும், எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்ற படத்தையும் இயக்கிய நான், இப்போது ஐரா படத்தை இயக்கியுள்ளேன்.

இதை வரும் 28ம் தேதி, ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் வெளியிடுகிறார். இப்படத்தின் சில பகுதிகளை கருப்பு, வெள்ளையில் படமாக்கியுள்ளேன். யமுனா, பவானி என்ற இரு வேடங்களில் நயன்தாரா நடித்துள்ளார்.

இதில் பவானிக்கு கருப்பு மேக்கப். மற்ற படங்களில் இரட்டை வேடம் என்றால், அதில் இருவருக்கும் ஒரு தொடர்பு இருக்கும். இதில் இரண்டு கேரக்டர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. டப்பிங்கும் இரண்டு பேர் பேசியுள்ளனர். இது ஹாரர் படம் மட்டுமே கிடையாது. கமர்ஷியல் அம்சங்களுடன் ஜனரஞ்சகமான படமாகவும் இருக்கும்.

Related posts