சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவை பொதுக்கூட்டம் சற்று முன்.. நேரடி றிப்போட்..!

டென்மார்க் சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவையின் வருடாந்தப் பொதுக்கூட்டம் இன்று மாலை பரடைசியா நகரில் உள்ள அலே பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த அமர்வில் பல்வேறு விடயங்கள் விவாதிக்கப்பட்டன. முதலில் தற்காலிக தலைவர் தெரிவு செய்யப்பட்டார் டென்மார்க் எழுத்தாளர் அ. ஜீவகுமாரன் தலைமை தாங்கி நிகழ்வை நடத்தினார்.

அத்தருணம் நிர்வாக சபை தேர்வு இடம் பெற்றது. முன்னர் காலம் சென்ற வேலணையூர் பொன்னண்ணா வகித்த இடத்தை இப்போது திரு.சொ.பேரின்பநாயகம் அவர்கள் வகிப்பார் என்று முடிவாகியது.

தலைவராக கவிஞர் செ. தோதிராஜா, செயலாளர் திரு. பகீரதன் உள்ளிட பழைய நிர்வாகத்தினரே மீண்டும் தேர்வாகினர். பல புது முகங்களும் சேர்க்கப்பட்டனர்.

மூன்று தலைப்புக்களில் உரையாடல்கள் இடம் பெற்றன..

01. சிறு பிள்ளைகளை சைவத்தின் பால் ஈடுபாடு கொள்ள வைக்க என்ன செய்யலாம்..
02. கலைஞர்களை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்தலாம்..?
03. இறந்தோர்க்கான கிரியைகளை செய்வதற்கு நிலையான ஏற்பாடுகள் எவை ?

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக சமயமும் மக்களுமாக சேர்ந்தியங்கும் வழியில் ஏற்பட்ட சவால்கள் என்ன..?

இவை குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. சமுதாயம் முன்னேறுவதற்கு ஏற்பவே நாமும் விரைவெடுக்க முடியும் என்று பலர் கூறினர்.

மேலும் சரியான சமய முறைகளை விதிப்படி கடைப்பிடிப்பதா இல்லை இயல்புக்கு ஏற்ப கடைப்பிடிப்பதா என்ற விவாதம் ஒன்றும் நடைபெற்றது. அத்தருணம் மாணிக்க வாசக சுவாமிகளின் பொற்சுண்ணப்பாடல்களை இறப்பு வீட்டில் பாடலாமா என்றும் ஒரு விவாதம் நடைபெற்றது.

அத்தருணம் இதற்கான கிரியைகளை முறைப்படி செய்ய ஒருவரை வரவழைத்தால் இப்போதைய பிரச்சனை தீரலாம்..

பின் அவருக்கு பின் இன்னொருவரை வரவழைக்க வேண்டும்.. ஈற்றில் அது தொடர்கதையாகும்.. அதைவிட இங்கேயே பட்டறைகளை நடத்தி தகுதியானவர்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

மேலும் டென்மார்க் அரசு முஸ்லீம் மக்களுக்கு அவர்களுடைய சமய இறுதிக்கிரியைகளுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. யூதர்களுக்கு செய்துள்ளது. கடந்த 30 வருடங்களாக உழைக்கிறோம் வரி கட்டுகிறோம் சைவசமய நம்பிக்கை கொண்ட மக்களுக்கும் அதுபோல செய்து கொடுக்க வேண்டியது சர்வதேச சட்டமாகும். இது குறித்து டேனிஸ் அரசின் உயர் மட்டத்துடன் பேசும் அடுத்த கட்ட பணிகளை புதிய நிர்வாகம் முடுக்கிவிட வேண்டும்.

தொடர்ந்து கலை நிகழ்வுகளை சிறியளவில் நடத்தாமல் கொங்கிரஸ் சென்டர் தரத்திற்கு விஸ்தரிக்க வழியென்ன என்ற விவகாரங்களும் பேசப்பட்டன.

அலைகள் 03.03.2019 ஞாயிறு

Related posts