தமிழர்நடுவம் உலகத் தமிழர்ககளுக்கு தைத்திருநாள் வாழ்த்து

தமிழர்களின் அறுவடைத் திருநாளாம் தைத்திருநாள் வாழ்த்துகளை உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பெருமகிழ்வோடு Uகிர்ந்து கொள்கிறது தமிழர் நடுவம்….

தமிழகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்ட இடங்களில் இத்தமிழர் விழாவினை சுவரொட்டிகள் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது…

ஆரிய-திராவிட – தலித்தியவாதிகள் மட்டுமின்றி போலித் தமிழ்த் தேசியவாதிகளும் தை அறுவடைத் திருநாளை பல்வேறு அடையாளங்களில் பெயரிட்டு தமிழர் பண்பாட்டு அடையாளத்தைச் சிதைத்து வரும்போது அதைக் காக்க வேண்டியது உண்மைத்தமிழர்களின் கடமையாகிறது….

வந்தேறி திராவிடக் கூட்டம் தமிழர் வேந்தன் தேவேந்திரனின் போகி விழாவை குப்பை எரிக்கும் விழாவாக திரித்து வருகின்ற போதிலும் இன்னும் பல்வேறு பகுதிகளில் இந்நாளில் வீட்டில் படையல் வைத்து தமது முன்னோனான தேவேந்திரனை குலதெய்வம் என்றோ முன்னோன் என்றோ ஏதோ ஒரு வகையில் வணங்கி வருவதை நாம் அறியலாம்…..

வேளாண்மைக்கு உதவும் எருதுவை போற்றும் மாட்டுப் பொங்கலை பசுமாட்டைக் காட்டி காவிச் சாயம் பூச முற்படும் இந்துத்துவாவாதிகளுக்கு ஒத்தூதும் வகையில் எருமைக்கும் விழா என புரளி கிளப்புகிறது வந்தேறி வடுக திராவிடம்….

பல்லுயிர்க்கும் பசிப்பிணி போக்கும் உழவனைத் தொழும் நாளினை, பீச்சிலும் பார்க்கிலும் போய் சோறு திண்ணும் நாளாக இந்த வந்தேறிக் கூட்டங்கள் ஒரு பக்கம் திரித்துக் கொண்டே மறுபக்கம் உழவைக் காப்போம் உழவனை மீட்போம் என காற்றிலே கம்பு சுத்திக் கொண்டு இருக்கிறது….

உழவையும் உழவனையும் காக்கத் துடிப்போர் முதலில் அவ்வுழவினையும் உழவனையும் போற்றும் தை அறுவடைத் திருநாள் போன்ற உழவின் சிறப்பை போற்றும் விழாக்களை உழவின், உழவனின் பெருமையாகத் தானே அடையாளப்படுத்த வேண்டும்.??? ஆனால் அதை நாம் செய்கிறோமா…?? இதைக் கேட்டால் தமிழர் ஒற்றுமை போய் விடும் என சப்பைக்கட்டு கட்டுவோர் திராவிடவாதிகள் அல்ல நமது போலித் தமிழ்த் தேசியவாதிகளே…

இனிமேலும் எவனும் எங்களின் பண்பாட்டையும் அடையாளத்தையும் அழிக்க நாங்கள் வேடிக்கை பார்க்கப் போவதில்லை. வரும் காலங்களில் தமிழகம் முழுவதும் இன்னும் அதிகமாய் வெகு சிறப்பாய் தை அறுவடைத் திருநாள் கொண்டாட்டங்களை தமிழர் நடுவம் முன்னெடுத்து நடத்தும்….

தமிழர்கள் அனைவருக்கும் நடுவத்தின் “தை அறுவடைப் பெருவிழா” வாழ்த்துகள்…..

வெல்க தமிழர்…!

வாழ்க தமிழரினம்….!!

வாழ்த்துகளுடன்,
தமிழர்நடுவம்

Related posts