உலகமெல்லாம் கொண்டாடப் படும் பொங்கல் டென்மார்க் தலைநகரிலும்

முதலில் டென்மார்க் தலைநகரில் நடக்கும் பொங்கல் பண்டிகை சிறப்போடு நடக்க வாழ்த்துவோம். டென்மார்க் பாராளுமன்றத்தில் டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தால் நடத்தப்படும் பொங்கல் திருநாள் நிகழ்வு டென்மார்க் வாழ் தமிழ் மக்களின் கவனத்தைத் தொட்டுள்ளது. டேனிஸ் மக்களிடையேயும் இதுபோல அறுவடைத் திருநாள் கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் வாழ்ந்த நிலங்களில் உள்ள அறுவடைக்காலமாக தைமாதம் புகழ் பெற்றதுபோல டேனிஸ் காலநிலைக்கு ஏற்ப டென்மார்க்கில் அறுவடைத் திருநாள் நடக்கிறது. அந்த வகையில் தமிழர்களின் வாழ்வின் அடிப்படையே நன்றி கூறுவதுதான் என்பதை பறைசாற்றும் பொங்கல் பண்டிகையின் மகத்துவத்தை டேனிஸ் மக்களும் புரிந்து கொள்ள டேனிஸ் பாராளுமன்றத்திற்கு இந்த விழாவை கொண்டு செல்வது நல்லதோர் முயற்சியாகும். பொங்கல் பண்டிகையின் மகத்துவத்தை அறிந்து சிறீலங்கா பாராளுமன்றமும் கடந்த சில காலமாக அரசியல் ஸ்டன்டுக்காக பொங்குவது வழமையாக இருக்கிறது. ஆனால் அதனுடன் ஒப்பிட்டால் இது வேறுபடுகிறது. அறுவடைக்கு…

தமிழர்நடுவம் உலகத் தமிழர்ககளுக்கு தைத்திருநாள் வாழ்த்து

தமிழர்களின் அறுவடைத் திருநாளாம் தைத்திருநாள் வாழ்த்துகளை உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பெருமகிழ்வோடு Uகிர்ந்து கொள்கிறது தமிழர் நடுவம்.... தமிழகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்ட இடங்களில் இத்தமிழர் விழாவினை சுவரொட்டிகள் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது... ஆரிய-திராவிட - தலித்தியவாதிகள் மட்டுமின்றி போலித் தமிழ்த் தேசியவாதிகளும் தை அறுவடைத் திருநாளை பல்வேறு அடையாளங்களில் பெயரிட்டு தமிழர் பண்பாட்டு அடையாளத்தைச் சிதைத்து வரும்போது அதைக் காக்க வேண்டியது உண்மைத்தமிழர்களின் கடமையாகிறது.... வந்தேறி திராவிடக் கூட்டம் தமிழர் வேந்தன் தேவேந்திரனின் போகி விழாவை குப்பை எரிக்கும் விழாவாக திரித்து வருகின்ற போதிலும் இன்னும் பல்வேறு பகுதிகளில் இந்நாளில் வீட்டில் படையல் வைத்து தமது முன்னோனான தேவேந்திரனை குலதெய்வம் என்றோ முன்னோன் என்றோ ஏதோ ஒரு வகையில் வணங்கி வருவதை நாம் அறியலாம்..... வேளாண்மைக்கு உதவும் எருதுவை போற்றும்…

டென்மார்க் பாராளுமன்றத்தில் பொங்கல் விழா கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாழ்த்து

இன்று டென்மார்க் போல்க திங் எனப்படும் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள பொங்கல் திருநாளுக்கு முன்னாள் வடக்கு முதல்வர் வழங்கிய வாழ்த்து.

டென்மார்க் பாராளுமன்றத்தில் பொங்கல் விழா இன்று முன்னாள் முதல்வர் வாழ்த்து

இன்று டென்மார்க் போல்க திங் எனப்படும் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள பொங்கல் திருநாளுக்கு முன்னாள் வடக்கு முதல்வர் வழங்கிய வாழ்த்து.

ரஜினி – விஜய் – அஜித் வசூலில் யார் முன்னணியில்..

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், அஜித் குமார் நடித்த விஸ்வாசம் படமும் வெளியானது. இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்ததால் பலத்தபோட்டி ஏற்பட்டது. ரஜினி, அஜித் ரசிகர்கள் இதனை திருவிழா போல கொண்டாடி மகிழ்ந்தார்கள். சில இடங்களில் மோதலும் நடைபெற்றது. தொடர்ந்து 2 படங்களில் எது வெற்றி படம், எது வசூலில் அதிகம் என்று ரஜினி-அஜித் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கடும் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் தான் அதிகம். இங்கே பேட்ட படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பி மற்றும் சி சென்டர்கள் என கூறப்படும் இதர பகுதிகளின் வசூலைப் பார்த்தால் தமிழகத்தில் ‘விஸ்வாசம்‘ தான் அதிகம். தமிழகத்தில் பேட்ட வசூல் ரூ.23 கோடி ஆகும். ஆனால் விஸ்வாசம் தமிழகத்தில் ரூ.26 கோடி வசூலித்துள்ளது என கூறப்பட்டது.…

கனடாவில் சவுதிப் பெண் அடைக்கலம்

பெற்றோர்களால் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக தப்பி வந்த சவுதி பெண் ரஹாப் மொகமது அல் குனான் கனடாவில் அடைக்கலம் ஆனார். கடந்த வாரம் ரஹாப் மொகமது அல் குனானுக்கு அடைக்கலம் அளிக்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ தயாராக இருப்பதாக கூறிய நிலையில் சனிக்கிழமையன்று கனடா சென்றடைந்தார் ரஹாப். டோரோன்டோவில் விமான நிலையத்தில் ரஹாப்பை வரவேற்ற கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் கிரிஸ்டியா கூறும்போது, “இவர்தான் ரஹாப் கனடாவின் தைரியமான குடிமகள்” என்று தெரிவித்தார். ரஹாப்புக்கு அடைக்கலம் அளித்த கனடா அரசை சர்வதேசப் பெண்கள் நல அமைப்புகள் பாராட்டியுள்ளன. யார் இந்த ரஹாப் மொகமது அல் குனான்? ரஹாஃப் மொகமது அல் குனான் (18) குவைத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பி வந்துள்ளார். தனது குடும்பத்தினர் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாகக் கூறிய…

லசந்த கொலை, ‘மிக்’ கொள்வனவு; கோத்தாவின் TV பேட்டி

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்படுவதற்கு ஒரு வருட காலத்துக்கு முன்னர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் தனியார் தொலைக்காட்சியொன்று நடத்தியிருந்த நேர்காணலின் முழுமையான ஒளிபரப்பை சி.ஐ.டி. பொறுப்பேற்க வேண்டுமென கல்கிசை மஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடனான இந்த நேர்காணல் 2009 ஒகஸ்ட் 19 ஆம் திகதி தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியிருந்தது. அந்த நேர்காணலின் முழுமையான மூல ஒளிப்பதிவினை பெற்றுக் கொள்ள சி.ஐ.டிக்கு பொறுப்பான நிஷாந்த டி சில்வா கல்கிசை நீதிமன்றத்துக்கு விண்ணப்பமொன்றை செய்திருந்தார். 2007 ஒகஸ்டில், லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்படுவதற்கு 16 மாதங்களுக்கு முன்னர் தெரண தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்த மேற்படி நேர்காணலின் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் ஊடகவியலாளர்கள் தன்னைப் பற்றி ‘குப்பை’யாக விடயங்களை எழுதிவிட்டு காரை தனியாக ஓட்டிச் செல்கின்றனர் என்று கூறுவதுடன்…

ஒருமித்த நாட்டில் தமிழருக்கான தீர்வையே நாம் கோருகின்றோம்

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வெற்றி கொள்ளும் புதிய அரசிலமைப்பு நிறைவேறலாம், அதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கிறதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். "தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு ஜனநாயக ரீதியில் தீர்வும், தமிழ்த் தலைமையின் வகிபாகமும் " எனும் தொனிப் பொருளிலான அரசியல் கருத்தரங்குயாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று முன்தினம் (12) மாலை நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,.. எமது கட்சியினர் கணக்கறிக்கை சமர்ப்பிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டை மூத்த ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் முன்வைத்தார். அவரின் கேள்விக்கான பதில்களை வழங்குவதோடு எனது கருத்துரையை நான் ஆரம்பிக்கின்றேன். எமது கட்சியின் மத்திய குழு கூட்டத்திலும் ,வருடாந்தம் தேர்தல் ஆணையகத்துக்கும் கட்சியின் கணக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. அதனை நீங்கள் பரிசீலிக்கலாம். ஜனநாயக வழியில் எமது மக்களுக்கான அரசியல் தீர்வை பெற…

மரண அறிவித்தல்-ஐயாமுத்து அருணாசலம் சிவானந்தம்

ஐயாமுத்து அருணாசலம் சிவானந்தம் (முன்னாள் விற்பனை மேலாளர் Lipton Unilever Brothers) யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பை முன்னாள் வதிவிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட ஐயாமுத்து அருணாசலம் சிவானந்தம் அவர்கள் 13.01.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார். அன்னார் காலஞ்சென்ற அருணாசலம் வள்ளியம்மைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற ஜோசப், புஷ்பம் அவர்களின் அன்பு மருமகனும், டெய்சி அவர்களின் அன்பு கணவரும், ஶ்ரீபரதன்(இலண்டன்), மதுமதி(நோர்வே), கஜமதி(சுவிஸ்), ஶ்ரீரமேஷ்(இலண்டன்), ரேவதி(இலண்டன்), சிந்துமதி(டென்மார்க்), பிரகலாதன்(பிரான்ஸ்)ஆகியோரின் பாசமிகு தந்தையும், கோதை(இலண்டன்), நிக்‌ஷன்(நோர்வே), விஐயகுமார்(ராசு சுவிஸ்), ரஞ்சினி(இலண்டன்), மதியழகன்(இலண்டன்), சிவகுமார்(டென்மார்க்), ஷர்மிளா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற செல்வராஜா, காலஞ்சென்ற சூரியமூர்த்தி, காலஞ்சென்ற சூரியகாந்தி, மற்றும் சந்திரகாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும் , பாக்கியலக்சுமி, காலஞ்சென்ற தங்கரத்தினம், காலஞ்சென்ற மார்க்கண்டு, காலஞ்சென்ற அப்பாச்சாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், லக்‌ஷன், கிஷோர், கௌசல்யன், நான்சி,…