முப்பது வருடமாக எமது நாட்டில் கொடிய யுத்தம் இடம்பெற்றது. அந்த யுத்தத்தில் வடகிழக்கு மக்கள் பாதிக்கப்பட்டனர். அதன் காரணமாக, அந்தப் பிரதேசத்தின் கல்வி நிலமைகள் அடிமட்டத்திற்குச் சென்றதையும் நாம் அறிவோம். 40வருடங்களுக்கு முன்னர், உயர் அதிகாரத்தில் இருந்தவர்கள் தமிழ்மக்களே என்பதனை மாணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி தர்சன ஹெட்டியாராட்சி தெரிவித்தார். யாழ்.பாதுகாப்பு படைத்தலைமையகத்தில் இன்று (31) நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் அதிசிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது; 30வருடமாக எமது நாட்டில் கொடிய யுத்தம் இடம்பெற்றது. அந்த யுத்தத்தில் வடகிழக்கு மக்கள் பாதிக்கப்பட்டனர். அதன் காரணமாக, அந்தப் பிரதேசத்தின் கல்வி நிலமைகள் அடிமட்டத்திற்குச் சென்றதையும் நாம் அறிவோம். 40வருடங்களுக்கு முன்னர், உயர் அதிகாரத்தில் இருந்தவர்கள்…
இந்த ஆண்டை ஓர் அழகிய ரோஜா மலராக எடுத்துக் கொண்டால் அதன் முதல் இதழ் நிறைவடைந்து விழும் தினம் இன்றாகும். இந்த முதல் மாதத்தில் நடந்துள்ள அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் சொல்லும் செய்தியென்ன...? மாதாந்த மதிப்பீடுகளுடன் பொங்கி வருகிறது அலைகள் காணொளி உலகச் செய்தி.. அலைகள் 31.01.2019
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த இலியானா திடீரென்று இந்தியில் நடிக்கச் சென்றார். பாலி வுட்டில் நுழைந்த வேகத்தில் வெற்றி படமும் அமைந்தது. ஆனால் அங்குள்ள போட்டியை சமாளிக்க முடியாமல் திணறினார். வெற்றி படம் தந்தபோதும் பட வாய்ப்புகள் குவியவில்லை. வந்த வாய்ப்புகளை ஏற்று நடித்தவருக்கு கைவசம் இருந்த படங்களை முடித்துக்கொடுத்த பின் புதிய வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் தென்னிந்திய படங்களில் கவனத்தை திருப்ப முடிவு செய்தார். அதற்காக தெரிந்த நண்பர்களை தூதுவிட்டு வாய்ப்பு தேடியதுடன் தனது அரை நிர்வாண கவர்ச்சி படங்களை நெட்டில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். அதற்கு பலன் கிடைத்தது. சுமார் 6 வருட இடைவெளிக்கு பிறகு தெலுங்கில் கடந்த ஆண்டு அமர் அக்பர் ஆண்டனி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வந்த வாய்ப்பை இலியானா ஏற்றுக்கொண்டார்.…
ஐ, 2,0 உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் எமி ஜாக்ஸன். இந்தியிலும் சில படங்களில் நடித்தார். தமிழில் வெளியான விண்ணை தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கான ஏக் திவானா தா படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதில் ஹீரோவாக பிரதிக் பாப்பர் நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. காதல் பறவைகளாக சுற்றிதிரிந்த இவர்கள் பல்வேறு இடங்களுக்கு டேட்டிங் சென்றதுடன் ஒருவர் பெயரை மற்றொருவர் காதல் நினைவாக டாட்டூ போட்டுக்கொண்டனர். நாளடைவில் இவர்களுக்குள் மனக் கசப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு இருவரும் பிரேக் அப் செய்து கொண்டு பிரிந்தனர். பின்னர் இங்கிலாந்தை சேர்ந்த ஜார்ஜ் பன்னாயிட்டோ என்ற கோடீஸ்வர தொழில் அதிபருடன் எமிக்கு நட்பு ஏற்பட்டது. அது காதலாக மலர்ந்தது. சமீபத்தில் அவருடன் நிச்சயதார்த்தமும் நடந்தது. எமியும், ஜார்ஜும் ஒரு சில மாதங்களில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர்.…
'இந்தியன் 2' படத்தில் கமலுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் 2-ம் பாகத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால், நெடுமுடி வேணு ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. அக்ஷய்குமார், அஜய் தேவ்கன், சிம்பு, சித்தார்த், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக படக்குழுவினரிடம் விசாரித்த போது, "சிம்புவுக்குப் பதிலாக சித்தார்த் நடிக்கவுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மேலும், ஆர்யாவிடம் பேசியுள்ளோம். படப்பிடிப்புக்கான…
ஐ.நா மனித உரிமை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு மேலும் கால நீட்டிப்பை வழங்க வேண்டாம் என வலியுறுத்தி காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களினால் இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது. ஐ.நாவே கையில் கொடுத்தவர்களை தேட ஒ.ஏம்.பி அலுவலகம் தேவையா?, ஐ.நாவே ரகசிய சித்தரவதை முகாம்களை கண்டு பிடித்து எங்கள் பிள்ளைகளை மீட்டு தா?, சர்வதேச விசாரணை தேவை, ஐ.நாவே இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்காதே? உள்ளிட்ட வசனங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகிய போராட்டம் கடைவீதி வழியாக பேரணியாக சென்று வைத்தியசாலை சுற்றுவட்டத்தை அடைந்து மீண்டும் பழையபேருந்து நிலையத்தினை அடைந்திருந்தது. எமது…
அரசு அலுவலர்கள் கடமை நேரத்தில் ஃபேஸ்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நபரை வேலையிலிருந்து நீக்குவேன் என்று இலங்கையின் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார். அதன் பின்னரே, குறித்த நபர் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மத்திய மாகாணத்தில் அரசு தொழில் நியமனம் வழங்கும் நிகழ்வொன்றில் நேற்று செவ்வாய்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த அதிரடிக் கருத்துக்களை வெளியிட்டார். அவர் மேலும் கூறுகையில்; "மக்கள் செலுத்துகின்ற வரிகளிலிருந்தே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அரிசி, பருப்பு, மின்சாரக் கட்டணம் என எல்லாவற்றுக்குமே அரசாங்கம் வரி அறிவிக்கிறது. இவ்வாறு பெறப்படுகின்ற வரிகளில் இருந்தே அரசாங்கத்தை நடத்துகின்றோம்" என்றார். "இலங்கையில் யாரிடமாவது என்ன வகையான தொழில் வேண்டும் என்று கேட்டால், அரச தொழில் வேண்டும் என்றுதான் சொல்லுகின்றனர்.ஏனென்றால் வேலை…
மூத்த எழுத்தாளரும், இசை விமர்சகருமான சாருகேசி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80. தமிழின் பிரபல வார, மாத இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்த சாருகேசியின் இயற்பெயர் எஸ்.விஸ்வநாதன். விஸ்வநாதன் சுப்ரமணியன் என்கிற இவரது இயற்பெயரை சாருகேசியாக்கியவர் வாதூலன். அப்போது இவருக்கு சாருகேசி என்று ஒரு ராகம் இருப்பதுகூட தெரியாது. பின்னாட்களில் நிறைய கச்சேரிகள் கேட்டு, புத்தகங்கள் படித்து தனது கர்னாடக இசை அறிவைப் பெருக்கிக் கொண்டார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சங்கீத, நாட்டிய, நாடக விமர்சனங்கள் எழுதி வந்த சாருகேசி சுமார் 60 வருடங்களாக எழுத்துலகுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். சாருகேசியின் முதல் கட்டுரை ‘கண்ணன்’ (1955) இதழில் வெளியானது. அதற்கு வழங்கப்பட்ட சன்மானம், ரூபாய் 5. முதல் சிறுகதை ‘கல்கி’யில் (1960) வெளியானது. அகமதாபாத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த சாருகேசி,…