‘தமிழ் ராக்கர்ஸ்’ உரிமையாளர்களை பிடிக்க சிபிசிஐடி

தமிழ் ராக்கர்ஸ் உரிமையாளர்களை பிடிப்பதற்கான நடவடிக்கையில் சிபிசிஐடி போலீஸார் மீண்டும் ஈடுபட்டுள்ளனர்.

புதிய திரைப்படங்களை இணைய தளங்களில் வெளியிடும் ‘தமிழ் ராக் கர்ஸ்’ நிறுவனம், தமிழ் திரையுல குக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த நிறுவனத்தை தடை செய்யவும், திருட்டுத்தனமாக திரைப்படங்கள் வெளியிடுவதை தடுக்கவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் பயனில்லை.

இந்நிலையில் சமீபத் தில் திரைக்கு வந்த ‘சர்கார்’ திரைப் படத்தை, திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் அதே தினத்தில் இணையதளத்திலும் வெளியிடுவோம் என்று சவால் விட்டு, அதேப்போல செய்தும் காட்டியிருக்கிறது தமிழ் ராக்கர்ஸ். ரஜினியின் ‘கபாலி’ படத்தையும் இதேப்போல முதல் நாளிலேயே இந்நிறுவனம் இணையதளத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரஜினியின் 2.0 திரைப்படத்தையும் முதல் நாளிலேயே வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் அறிவித்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால், 2.0 படம் குறித்து நாங்கள் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று தமிழ் ராக்கர்ஸ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ் ராக்கர்ஸ் நிறுவன உரிமையாளர்கள் என்று கூறப்படும் இங்கிலாந்தில் உள்ள டிக்ஸன் ராஜ், சுவிட்சர்லாந்தில் உள்ள அர்விந்த் லோகேஸ்வரன் ஆகியோரை பிடிக்கும் முயற்சியில் சிபிசிஐடி போலீஸார் மீண்டும் ஈடுபட் டுள்ளனர். மேலும், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் செயல்பாடுகளை கண்டுபிடித்து தடுப்பதற்காக தனியார் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியையும் சிபிசிஐடி போலீஸார் கேட்டுள்ளனர்.

இதற்காக திரைப்படத் துறையை சேர்ந்த சிலரும் சிபிசிஐடி போலீஸாருக்கு தொழில்நுட்ப உதவி மற்றும் சில உதவிகளை செய்து வருகின்றனர். மேலும், சிபிசிஐடியின் சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு சில தகவல் தொழில்நுட்ப கருவிகளை வாங்க அதிகாரிகள் முடிவு செய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts