உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 18. 45

சுகத்திற்கு வழிநடத்தும் வேதனை. (மதமாற்றம் - மனந்திரும்புதல்) பாகம் 1. சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக. வெளிபடுத்தல் 2:5 இன்று மூன்றாம் மண்டலநாடுகளிலும், அதன் மக்களிடமும் பொதுவாக பேசப்படும் ஓர் காரியம் மதமாற்றம் என்பதாகும். ஆதன் சரியான விளக்கத்தை அறியாததால் அநேக விபரீதங்கள் உலகம் பூராகவும் நடைபெற்று வருவதை நாம் காணக்கூடிய தாக உள்ளது. பெரும்பாண்மையான மக்கள் இந்த வார்த்கைளுக்குரிய கருத்தை இன்னமும் அறியவுமில்லை. அறிய முற்படுவதுமில்லை. இது கவலைக்குரிய விடையமாகும். திருமணத்திற்காக பலர் மதம்மாறுகிறார்கள். வேலைக்காக அல்லது வேறுகாரணங்களுக்காகவும் சிலர் மதம் மாறுகிறார்கள். இவையாவும் ஒருசில நலன்களுக்காக தங்களை மாற்றிக் கொள்வதாகும். ஆனால் மனந்திரும்புதல் என்பது, சிந்தனையை மாற்றுதல், போகும்வழியை திருப்புதல், வழியைத்திருப்பி வேறுவழியில்…

ஜெயலலிதாவை விஷம் வைத்து கொன்ற கும்பல்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, ‘‘ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்த துரோகிகளால் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மெதுவாக கொல்லும் விஷம் கொடுத்து ஜெயலலிதாவை ஒரு கும்பல் கொன்றுவிட்டது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு வேண்டாத உணவு கொடுத்திருக்கிறார்கள். இதுவரை நிலக்கோட்டை தொகுதிக்கு ரூ.73 கோடி செலவில் நலத்திட்டப் பணிகள் செய்யப்பட்டுள்ளது’’ என்றார். அப்போது ஆவரம்பட்டி அதிமுக கிளைச்செயலாளர் நாகத்தேவர், ‘‘எங்கள் கிராமத்திற்கு கடந்த பல ஆண்டுகளாக எந்த திட்டமும் செய்யவில்லை’’ என மேடை முன்பு சென்று, அமைச்சரை பார்த்து கை நீட்டி கேள்வி கேட்டார். இதனால், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கும், நாகத்தேவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படம்: பூஜையுடன் இன்று

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் இன்று தொடங்கியது. ‘பாகுபலி’ என்னும் பிரம்மாண்ட படத்தை இயக்கியவர் எஸ்.எஸ்.ராஜமெளலி. இரண்டு பாகங்களும் சேர்த்து கிட்டத்தட்ட 400 கோடியில் தயாரிக்கப்பட்டன. ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது இந்தப் படங்கள். தற்போது தன்னுடைய அடுத்த படத்தைத் தொடங்கிவிட்டார் எஸ்.எஸ்.ராஜமெளலி. ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்தில், ஜூனியர் என்.டி.ஆர். - ராம் சரண் தேஜா இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். இந்தப் படத்தை, டி.வி.வி.தனய்யா தயாரிக்கிறார். இந்தப் படம், 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. ராஜமெளலி, ராமா ராவ், ராம் சரண் என மூவரின் பெயருமே ‘ஆர்’ என்ற ஆங்கில எழுத்தில் தொடங்குவதால், தற்போதைக்கு இந்தப் படத்துக்கு ‘ஆர்ஆர்ஆர்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு, பூஜையுடன் இன்று (நவம்பர் 11) தொடங்கியது. இதில், சிரஞ்சீவி கலந்துகொண்டு,…

பிச்சைக்காரர்களுக்கு தான் இலவசம் தேவை: கமல்

பிச்சைக்காரர்களுக்கு தான் இலவசம் தேவை, உழைக்கும் மக்களுக்கு தேவையற்ற இலவசங்கள் வேண்டாம் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார். தர்மபுரி மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந் கொண்டு பேசியதாவது: ஏரி, குளங்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. ஆங்காங்கே உள்ள ஏரிகள், குளங்களை பொதுமக்களே ஒருங்கிணைந்து தூர்வார முன் வர வேண்டும். அவற்றில் குப்பைகளை கொட்டுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும். உழைக்கும் மக்களின் பணம் தான் அரசின் கஜானாவை நிரப்புகிறது. அதை அரசியல்வாதிகள் இலவசம் என்ற பெயரில் எடுத்து காலி செய்கிறார்கள். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகின்றன. மக்களின் பணத்தை ஊழல்கள்…

‘தமிழ் ராக்கர்ஸ்’ உரிமையாளர்களை பிடிக்க சிபிசிஐடி

தமிழ் ராக்கர்ஸ் உரிமையாளர்களை பிடிப்பதற்கான நடவடிக்கையில் சிபிசிஐடி போலீஸார் மீண்டும் ஈடுபட்டுள்ளனர். புதிய திரைப்படங்களை இணைய தளங்களில் வெளியிடும் ‘தமிழ் ராக் கர்ஸ்’ நிறுவனம், தமிழ் திரையுல குக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த நிறுவனத்தை தடை செய்யவும், திருட்டுத்தனமாக திரைப்படங்கள் வெளியிடுவதை தடுக்கவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் பயனில்லை. இந்நிலையில் சமீபத் தில் திரைக்கு வந்த ‘சர்கார்’ திரைப் படத்தை, திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் அதே தினத்தில் இணையதளத்திலும் வெளியிடுவோம் என்று சவால் விட்டு, அதேப்போல செய்தும் காட்டியிருக்கிறது தமிழ் ராக்கர்ஸ். ரஜினியின் ‘கபாலி’ படத்தையும் இதேப்போல முதல் நாளிலேயே இந்நிறுவனம் இணையதளத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ரஜினியின் 2.0 திரைப்படத்தையும் முதல் நாளிலேயே வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் அறிவித்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால், 2.0 படம் குறித்து நாங்கள் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை…

சிறிசேனாவை ஓரங்கட்டினார் ராஜபக்சே: 50 எம்.பி.களுடன் புது கட்சி

அடுத்தடுத்து அதிரடி மாற்றங்களை கண்டு வரும் இலங்கை அரசியலில் மேலும் ஒரு திருப்பமாக சிறிசேனா ஆதரவு எம்.பி.க்கள் 50 பேருடன் ராஜபக்சே கட்சி மாறியுள்ளார். இதனால் நாடாளுமன்ற தேர்தலில் சிறிசேனாவுக்கு பின்னடைவு ஏற்படும் என தெரிகிறது. முன்னாள் அதிபர் ராஜபக்சே அரசில் அமைச்சராக இருந்து அவரை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்ட வென்றவர் சிறிசேனா. விக்ரமசிங்கேயின் உதவியுடன், கடந்த 2015-ம் ஆண்டு அதிபராகப் பதவி ஏற்றார் சிறிசேனா. இதையடுத்து, அதிபர் சிறிசேனா தலைமையிலான சுதந்திரா கூட்டணியும், ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தன. 3 ஆண்டுகள் சென்ற நிலையில், ரணில் விக்ரமசிங்கேவுக்கு அளித்து வந்த ஆதரவை கடந்த மாதம் 26-ம் தேதி திடீரென வாபஸ் பெற்ற சிறிசேனா, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கினார். சமீபத்தில் இலங்கை அதிபர் சிறிசேனாவை…

இலங்கை தொடர்பில் செயற்பட ஐரோ. ஒன்றியத்துக்கு அதிகாரமில்லை

இலங்கை தொடர்பில் செயற்படுவதற்கு அரசியலமைப்பின் பிரகாரம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எவ்வித அதிகாரமும் இல்லையென அமைச்சரவை இணைப் பேச்சாளர் இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று வெளியிட்ட பதில் அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுத்துள்ள இச் செயற்பாட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாதென்றும் இராஜாங்க அமைச்சர் இதில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தால் செயற்பட முடியுமா என்பது தொடர்பில் எனக்கு தெரியாது. எனினும் நாட்டின் உள்விவகாரத்தில் இதுபோன்ற வெளிநாட்டு அமைப்பொன்று அழுத்தம் கொடுப்பதையிட்டு நான் மிகுந்த கவலையடைகிறேன். இதுபோன்ற அழுத்தம் உருவாகுவதற்கு முன்னாள் பிரதமர்…

ஜனாதிபதி செய்திருப்பது தவறு ஜனநாயக விரோதம் : மாவை ஏமாற்றம்

தமிழர் பிரச்சனையை தீர்க்க வேண்டிய தருணம் வர ஜனாதிபதி நழுவி ஓடியது மாவைக்கு வலியை உண்டு பண்ணியுள்ளது. நிச்சயமாக அவரால் முடியாது என்பதை முன்னரே கண்டு பிடிக்க முடியாது இப்போது மாவையார் பாடிய கோவையார்.. இவ்வாறுள்ளது. ஜனநாயக விரோதமான செயலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் சாவகச்சேரியில் அமைந்துள்ள ரவிராஜின் நினைவுத் தூபியில் கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு ரவிராஜிற்கு அங்சலி செலுத்திய பின்னர் அங்கு உரையாற்றுகையிலேயே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த…

நோர்வே தமிழ் திரைப்பட விழா – தமிழர் விருது 2019

10வது நோர்வே தமிழ் திரைப்பட விழா - தமிழர் விருது 2019 25.-28.சித்திரை 2019 [நான்கு நாட்கள்] நோர்வே தமிழ்த் திரைப்பட விழா பத்தாவது ஆண்டுகள் நோக்கிய பயணத்தில் அடுத்த ஆண்டு புதிய தடத்தினை பதிக்கவிருக்கின்றது. நாங்கள் தமிழரென உறுதியான மனதோடு, அனுபவங்களின் வலியோடு, எண்ணப் பொறிகளின் வண்ணக் கலைகளை வடமாக்கி, தரையில் நிமிர்ந்து நின்று உலகத் திரை நோக்கி, நண்பர்களின் துணையோடு, இந்த திரைத் தேரினை ஐந்து கண்டங்கள் சுற்றிவர எமது உயிரே உழைப்பாக உடம்பே ஆயுதமாக 10 ஆம் ஆண்டின் பயணப் பாதையில் இழுத்துச் செல்கின்றோம்.! வானுயர எம்மை வாழ்த்தி, வடம் பிடிக்க வாருங்கள் ! தமிழர்கள் வாழ்விலும், உலகத்தமிழர்களின் கலை கலாச்சாரத்தோடும் ஒன்றாக கலந்து விட்ட தமிழ் சினிமா, உலகத்தின் விழித்திரைகளில் உலகவலம் செய்துவருகின்றது. பத்து தசாப்தங்கள் கடந்த தமிழசினிமாவின் ஒரு தசாப்தங்களை…

அலைகள் வாராந்தப் பழமொழிகள் 11.11.2018 ஞாயிறு

01. ஒரு தலைவனுக்கு எது அவசியம்...? அவனுக்கு எப்போதுமே எதிர்காலத்தை கணிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நாம் ஏமாற்றப்படுவோம் என்பது தெரியாதவனை தலைவனாக ஏற்று அழிந்து போகாதே.! 02. வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதுபற்றி கவலைப்படாதே.. எந்த கஷ்டமான காலத்தையும் எமக்கு சாதகமாக மாற்றிவிடலாம். அதற்கு ஓர் அறிவு வேண்டும். ஒவ்வொரு கஷ்டமும் நன்மைக்கான ஆசீர்வாதங்களாகவே வருவதை மறந்துவிட வேண்டாம். 03. வெற்றி பெற்றவர்கள் அதிர்ஷ்டக்காரர் என்று நினைக்க வேண்டாம். உண்மையில் அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் என்று எதுவுமே கிடையாது. வெற்றி பெற்ற அனைவரும் கடுமையாக போராடியிருக்கிறார்கள். 04. இறைவன் இந்த உலகத்தை நல்ல நோக்கத்திற்காகவே படைத்துள்ளான். ஆகவே தீயவரையும், தீயவைகளையும் நிராகரிக்க தயங்க வேண்டாம். 05. கிழட்டு வேடம் போடாதீர்கள். ஒவ்வொரு மனிதனும் 120 ஆண்டுகள் வாழக்கூடியவாறுதான் அவன் உடலும் அதன் உறுப்புக்களும் படைக்கப்பட்டிருக்கிறது. 06. ஆன்மாவை செம்மைப்படுத்துவதென்பது…