சினேகா புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம்

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த சினேகா திருமணத்துக்கு பிறகு குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சினேகா நடிப்பில் பட்டாஸ் படம் வந்தது. இந்த படத்தில் 2019-ம் ஆண்டிலேயே நடித்து முடித்து விட்டார். அதன்பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சினேகா ‘சா பூட் திரீ’ என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். குழந்தைகள் படமாக தயாராகிறது. இதில் சினேகா அம்மா கதாபாத்திரத்தில் வருகிறார். முதலில் அம்மா வேடத்தில் நடிக்க சினேகா மறுத்த நிலையில் பின்னர் முழு கதையையும் கேட்டு நன்றாக இருப்பதாக பாராட்டி நடிக்க ஒப்புக்கொண்டு உள்ளார். இதில் இயக்குனர் வெங்கட் பிரபுவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்குகிறார். குழந்தைகளின் யதார்த்த வாழ்வியலை சித்தரிக்கும் படமாக தயாராகிறது.

Related posts