யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறை வழங்கும் ஊடகக் கற்கைகளில் உயர் டிப்ளோமா கற்கைநெறி நேற்று (17) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி சி. ரகுராம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைப்பீடப் பீடாதிபதி கலாநிதி க. சுதாகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். நிகழ்நிலைத் தொழில்நுட்பம் வழியாக நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஊடகக் கற்கைகள் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். பல்கலைக்கழகம் சமூகத்திற்கு ஆற்றவேண்டிய கடைமைகளில் ஒன்றாக, துறைசார் ஆர்வமிருந்தும் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகத் தவறிய மாணவர்களுக்கும், தொழில்சார் ஊடகவியலாளர்களாகப் பணியாற்றுவோருக்கும் பல்கலைக்கழகக் கல்வி மூலம் உரிய தகைமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக இந்த ஊடகக் கற்கைகளில் உயர் டிப்ளோமா கற்கைநெறி ஆரம்பிக்கப்படுவதாக துணைவேந்தர் பேராசிரியர்சி. சிறிசற்குணராஜா ஆரம்ப நிகழ்வில் தெரிவித்தார். இரண்டு வருட…

மஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்ய முடிவு

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது எம்.பி. பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களுத்துறை மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி எம்.பி.யான மஹிந்த சமரசிங்க, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ தூதுவர் பதவியை பொறுப்பேற்கும் வகையில், இத்தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்னர், அமெரிக்க தூதுவராக இருந்த ரவிநாத் ஆரியசிங்க அண்மையில் ஓய்வு பெற்றிருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இதற்கு முன்னர் மனித உரிமைகள் தொடர்பான அமைச்சராக பதவி வகித்திருந்தார். இலங்கைக்கு எதிரான மனித உரிமை குற்றச்சாட்டுகள் தொடர்பில், ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலும் அவர் பலமுறை பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சி, களுத்துறை மாவட்டத்தில் 8 ஆசனங்களை…

ஆளுநர் பதவியேற்பில் பங்கேற்பதில் உடன்பாடு இல்லை

ஆளுநர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், சமீபத்தில் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ரவீந்திர நாராயண ரவியைத் தமிழக ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்தார். தையடுத்து புதிய ஆளுநர் பதவியேற்பு நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று (செப்.18) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. இதில், தமிழகத்தின் 25-வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,…

சினேகா புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம்

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த சினேகா திருமணத்துக்கு பிறகு குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சினேகா நடிப்பில் பட்டாஸ் படம் வந்தது. இந்த படத்தில் 2019-ம் ஆண்டிலேயே நடித்து முடித்து விட்டார். அதன்பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சினேகா ‘சா பூட் திரீ’ என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். குழந்தைகள் படமாக தயாராகிறது. இதில் சினேகா அம்மா கதாபாத்திரத்தில் வருகிறார். முதலில் அம்மா வேடத்தில் நடிக்க சினேகா மறுத்த நிலையில் பின்னர் முழு கதையையும் கேட்டு நன்றாக இருப்பதாக பாராட்டி நடிக்க ஒப்புக்கொண்டு உள்ளார். இதில் இயக்குனர் வெங்கட் பிரபுவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்குகிறார். குழந்தைகளின் யதார்த்த வாழ்வியலை…

நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு

பாலிவுட் நடிகர் சோனு சூட் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து அதன் மூலம் பலராலும் பாராட்டுக்களைப் பெற்று உள்ளார். பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் மூலமாக நடிகர் சோனு சூட் அரசியலில் இறங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நடிகர் சோனு சூட் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் மும்பையில் உள்ள அவருக்கு சொந்தமான ஆறு இடங்களில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில் பாலிவுட் திரைப்படங்கள் மூலமாக சோனு சூட் சொந்த நிதி நிறுவனம் மூலம் வந்த பணம் மறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சோனு சூட் வரி ஏய்ப்பு செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சோனு சூட்டுக்கு…

பொன்னியின் செல்வனில் நடித்து முடித்த கார்த்தி

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே தொடங்கியது. ஊரடங்கினால் முடங்கிய படப்பிடிப்பை தளர்வுக்கு பிறகு மீண்டும் விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்கள். சென்னையிலும், வட மாநிலங்களிலும் பெரும்பகுதி படப்பிடிப்புகளை நடத்தி முடித்துள்ளனர். தற்போது பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு பொன்னியின் செல்வனில் தனது காட்சிகள் அனைத்தையும் நடித்து முடித்து விட்டதாக ஜெயம்ரவி வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நடிகர் கார்த்தியும் தனது காட்சிகளை நடித்து முடித்து விட்டதாக தற்போது அறிவித்து உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் கார்த்தி வெளியிட்டுள்ள பதிவில், “இளவரசி திரிஷா நீங்கள் இட்ட ஆணை நிறைவேற்றப்பட்டது. இளவரசர் ஜெயம் ரவியே என் பணியும் முடிந்தது'' என்று குறிப்பிட்டு உள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம்ரவியும், அவரது சகோதரி குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷாவும் நடிக்கிறார்கள்.…

தற்கொலை தீர்வல்ல… தேர்வு, உயிரை விட பெரிதல்ல

தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துக் கொள்ளும் நிலையில் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக நடிகர் சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்ற பாரதியாரின் பாடல்வரிகளுடன் தனது உரையை தொடங்குகிறார். மாணவிகள் மாணவர்கள் எல்லோரும் வாழ்க்கையில் அச்சமில்லாமல் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு போன வாரம் அல்லது போன மாசம் இருந்த ஏதோ ஒரு பெரிய கவலை அல்லது வேதனை இப்போ இருக்கிறதா. யோசிச்சு பாருங்க. நிச்சயமாக குறைந்திருக்கும். இல்லாமல் கூட போயிருக்கும். ஒரு பரிட்சை உங்களது உயிரை விடப் பெரியது இல்லை. உங்க மனசுக்கு கஷ்டமா இருக்கா நீங்க நம்புறவங்க, உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்க, அப்பா அம்மா இல்ல ஒரு பெரியவங்க, நண்பர்கள்…