சமூகங்களிடையே சகோதரத்துவ சகவாழ்வை உணர்த்தும் நன்னாள்

இலங்கையின் முஸ்லிம்கள், உலகெங்கிலுமுள்ள சக முஸ்லிம் சகோதரர்களுடன் சேர்ந்து ஹஜ் பெருநாளை இன்று கொண்டாடுகிறார்கள். இஸ்லாமிய நாட்காட்டியின் இறுதி மாதமான துல் ஹஜ் மாதத்தில் ஹஜ் யாத்திரை செய்யப்படுகிறது. மனிதகுலத்தை உருவாக்கிய சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வுக்கு சேவை செய்யும் விதமாக முஸ்லிம்களின் தியாகத்தையும் பக்தியையும் இது குறிக்கிறது. முஸ்லிம்களின் ஐந்து அத்தியாவசிய கடமைகளில் ஒன்றான ஹஜ் செய்வது என்பது பணக்காரர், ஆரோக்கிய மற்றும் அனைத்து சராசரி மக்களுக்கும் அவர்களின் வாழ்நாளில் ஒரு முறையாவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹஜ் செய்ய முடியாதவர்கள், தங்கள் செல்வத்தை தங்கள் சுற்றுப்புறத்திலுள்ள ஏழை மக்களுக்கு வழங்கி உதவ முடியுமென்பதை இஸ்லாம் எமக்கு கற்பிக்கிறது.

இஸ்லாத்தின் போதனைகளின் மதிப்புகள் மற்றும் கொள்கைகளைப் புரிந்துகொள்வோம், இது அனைத்து சமூகங்களிடையேயான சகவாழ்வு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துகிறது அத்துடன் அனைத்து மக்களிடையே சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் வாழ்வதற்கு ஊக்குவிக்கவும் செய்கிறது.

இன்று ஹஜ் ஈகை திருநாளை கொண்டாடும் இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்தினருக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Related posts